கையறு நிலையில் தமிழர்கள்!!

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் இலங்கை தொடர்­பாக 2015ஆம் ஆண்டு கொழும்­பின் அனு­ச­ர­ணை­யு­டன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்­தினை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு இன்­னும் 2 ஆண்­டு­கள் கால அவ­கா­சம் கொடுக்­கப்­ப­டப்­போ­கின்­றது என்­பது அனே­க­மாக உறு­தி­யா­கி­விட்­டது. இலங்­கை­ மீதான பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கண்­கா­ணிப்­பைத் தொட­ரு­தல் என்­ப­தன் கீழ் இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப் படும்.

2015ஆம் ஆண்டு கொழும்­பின் இணை அனு­ச­ர­ணை­யு­டன் நிறை­வேற்­றப்­பட்­டது இந்த 30/1 ஐ.நா. தீர்­மா­னம். அதில் வலி­யு­றுத்­தப்­பட்ட பல விட­யங்­களை இலங்கை அரசு நிறை­வேற்­ற­வே­யில்லை. மிக முக்­கி­ய­மா­னது இறு­திப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்­க­ளுக்­கும் மனித குலத்­திற்கு எதி­ரான குற்­றங்­க­ளுக்­கும் பொறுப்­புச் சொல்­லும் வகை­யில் வெளி­நாட்டு நீதி­ப­தி­க­ளை­யும் உள்­ள­டக்­கி­ய­தாக ஒரு தனி­யான நீதி­மன்­றம் ஊடான விசா­ர­ணையை முன்­னெ­டுப்­பது.

இத­னையே கலப்பு நீதி­மன்­றம் என்று பொது­வெ­ளி­யில் கூறப்­ப­டு­கின்­றது. இந்த விசா­ரணை முறை­யின் கீழ் வெளி­நாட்டு நீதி­ப­தி­கள் மட்­டு­மன்றி, வழக்­குத் தொடு­நர்­கள், சட்­ட­வா­ளர்­கள் ஆகி­யோ­ரி­லும் வெளி­நாட்­ட­வர்­களை உள்­ள­டக்­கு­வ­தற்­குக் கொழும்பு உடன்­பட்­டி­ருந்­தது.

இந்­தத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­ட­போது அய­லு­ற­வுத்­துறை அமைச்­ச­ராக இருந்­த­வர் மங்­கள சம­ர­வீர. அவ­ரது இணக்­கத்­து­ட­னும் அனு­ச­ர­ணை­யு­ட­னுமே தீர்­மா­னத்­துக்­குக் கொழும்பு இணை அனு­ச­ர­ணையை வழங்­கி­யது. ஆனால், தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்ட சிறிது காலத்­தி­லேயே கலப்பு நீதி­மன்­றத்தை நிறு­வப்­போ­வ­தில்லை என்­றும் மனித உரிமை மீறல்­கள் மற்­றும் மனித குலத்­துக்கு எதி­ரான குற்­றங்­கள் தொடர்­பி­லும் இலங்­கைப் படை­யி­னர் மீது சுமத்­தப்­ப­டும் குற்­றச்­சாட்­டுக்­களை உள்­நாட்டு நீதிப் பொறி­மு­றை­யின் கீழேயே விசா­ரிப்­போம் என்­றும் அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன உறு­தி­யா­கத் தெரி­வித்­தார்.

அது முதற்­கொண்டு இந்த விட­யத்­தில் ஒரு துரும்­பைக்­கூ­டக் கொழும்பு தூக்­கிப்­போ­ட­வில்லை. இலங்கை போன்ற நாடு­க­ளில் இத்­த­கைய விசா­ர­ணைப் பொறி­மு­றை­கள் சாத்­தி­ய­மில்லை என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் அதற்கு ஒத்­தூ­தி­னார். கடை­சி­யில் இந்த விட­யம் கொழும்­பி­னால் குப்­பை­யில் வீசப்­பட்­டு­விட்­டது.

ஐ.நா. தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­குக் கொழும்­புக்­குக் கொடுக்­கப்­பட்ட முதல் 2 வருட காலத்­தில் இது­போன்ற பல விட­யங்­க­ளி­லும் முன்­னேற்­றம் ஏற்­ப­டா­த­போ­தும் 2017ஆம் ஆண்டு மீண்­டும் இரண்டு வருட காலம் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யால் கொழும்­புக்கு வழங்­கப்­பட்­டது. 2015ஆம் ஆண்டு நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே மேற்­கொண்டு 2 வருட காலம் வழங்­கப்­ப­டு­வ­தாக அந்த இரண்­டா­வது தீர்­மா­னம் கூறி­யது.

மீண்­டும் வழங்­கப்­பட்ட 2 வருட காலத்­தி­லும் ஐ.நா. தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய அக்­க­றையை கொழும்பு காண்­பிக்­க­வே­யில்லை. முதல் இரண்டு வருட காலத்­தில் காண்­பிக்­கப்­பட்ட ஆர்­வம், அக்­க­றை­கூட இரண்­டா­வது இரண்டு வருட காலத்­தில் காட்­டப்­ப­ட­வில்லை. குறிப்­பா­கப் பொறுப்­புக்­கூ­றல் விட­யத்­தில் கொழும்பு கிஞ்­சித்­தும் முன்­னே­ற­வில்லை. இருந்­தா­லும் மூன்­றா­வது தட­வை­யா­க­வும் இரண்டு வருட கால அவ­கா­சம் வழங்­கப்­ப­ட­வுள்­ளது.

கொழும்­புக்கு நெருக்­கு­த­லைக் கொடுத்து தீர்­மா­னத்தை நிறை­வேற்ற வைப்­ப­தற்­குப் பதில் பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்பை நீடிப்­பது என்­கிற பெய­ரில் மீண்­டும் மீண்­டும் கால அவ­கா­சம் வழங்­கப்­ப­டு­வது தமிழ் மக்­களை விச­னத்­திற்­குள்­ளாக்­கு­ கின்­றது. பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் மீதான நம்­பிக்­கை­யீ­னத்­தை­யும் அதி­க­ரிக்­கின்­றது.

வழங்­கப்­ப­ட­வுள்ள மூன்­றா­வது காலப் பகு­திக்­குள்­ளும் கொழும்பு, தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிறை­வேற்­றப் போ­வ­தில்லை என்­பது திண்­ணம். எவ்­வ­ளவு காலத்­திற்­குத்­தான் இப்­படி இரண்டு வரு­ட­கா­லத் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­றிக் ­கொண்டே செல்­வது? இத்­த­கைய பய­னற்ற பன்­னாட்­டுக் கண்­கா­ணிப்பு இருப்­ப­தால் தமிழ் மக்­கள் என்ன நன்­மை­யைப் பெரி­தாக அனு­ப­வித்­து­வி­டப்­போ­கி­றார்­கள்?

ஐ.நா. தீர்­மா­னங்­க­ளுக்கு மதிப்­ப­ளிக்­காது இஸ்­ரேல் செயற்­ப­டு­வதை முன்­னு­தா­ர­ண­மா­கக் கொண்டு கொழும்­பும் செயற்­ப­டும் என்­ப­தில் ஐய­மில்லை. ஆட்­சிக் கால­மும் முடி­வுக்கு வரும் நிலை­யில் மைத்­திரி – –ரணில் அரசு ஐ.நா. தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்கு வாய்ப்பு எது­வும் இல்லை. ஆக மொத்­தத்­தில் மீண்­டும் மீண்­டும் தீர்­மா­னங்­களை ஐ.நாவில் நிறை­வேற்­றி­னா­லும் கையறு நிலை­யி­லேயே தமி­ழர்­கள் தவிக்­க­ வேண்­டும்.

You might also like