கை, மொட்டு கூட்­ட­ணி­யின்- 6 ஆம் சுற்­றுப் பேச்சு இன்று!!

சிறி லங்கா சுதந்­தி­ரக் கட்­சிக்­கும் சிறி லங்கா பொது­மக்­கள் முன்­ன­ணிக்­கும் இடை­யி­லான 6ஆம் சுற்­றுப் பேச்சு இன்று புதன்­கி­ழமை முற்­ப­கல் எதிர்க்­கட்­சித் தலை­வர் அலு­வ­ல­கத்­தில் நடை­பெ­ற­வுள்­ளது.

புதிய அர­சி­யல் கூட்­டணி அமைப்­பது தொடர்­பில் இரு கட்­சி­க­ளுக்­கும் இடை­யி­லான 6ஆம் சுற்று கலந்­து­ரை­யா­டல் கடந்த 17 ஆம் திக­தியே நடை­பெற இருந்­தது.

ஆனால் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் பொதுச்­செ­ய­லா­ளர் தயா­சிறி ஜய­சே­கர மற்­றும் தேசிய அமைப்­பா­ளர் துமிந்த திஸா­நா­யக்க ஆகி­யோ­ரால் விடுக்­கப்­பட்ட அறி­விப்­பு­க­ளுக்கு எதிர்ப்பை வெளி­யி­டும் வகை­யில் பேச்சு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

பிற்­போ­டப்­பட்ட சந்­திப்பே இன்று நடை­பெ­றும் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இரு கட்­சி­க­ளுக்­கும் இடை­யி­லான 5ஆம் சுற்­றுப் பேச்சு இம்­மா­தம் 7ஆம் திகதி நடை­பெற்­றது.

You might also like