கொச்சிக்கடை அந்தோனியார் ஆலயத்தில் சிறப்பு வழிபாடு!!

ஈஸ்டர் தினத்தன்று தற்கொலைக் குண்டு தாக்குதலில் முழுமையாக சேதமடைந்த கொழும்பு – கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் முழுமையாக புனரமைக்கப்பட்டு நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

தாக்குதல் நடத்தப்பட்ட நாள் முதல் மூன்று தினங்கள் முழுமையாக விசாரணைகளுக்காக மூடப்பட்டிருந்த தேவாலயம், பின்னர் நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

தேவாலயத்தின் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கடற்படையினர் பொறுப்பேற்றிருந்தனர்.

தேவாலயத்தின் புனரமைப்புக்கள், கடந்த ஒன்றரை மாதங்களாக முன்னெடுக்கப்பட்டு, நேற்று நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

நேற்று மாலை விசேட திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் ஆண்டகையின் தலைமையில் திருப்பலி ஒப்புக் கொடுக்கப்பட்டது.

You might also like