கோர விபத்­தில்- இரு இளை­ஞர்­கள் உயி­ரி­ழப்பு

கிளி­நொச்சி இர­ணை­ம­டுச் சந்­திப் பகு­தி­யில் நேற்று நடந்த விபத்­தில் இரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

இந்த விபத்து ஏ-9 வீதி­யில் பிற்­ப­கல் 5.30 மணி­ய­ள­வில் நடந்­துள்­ளது.
ஊற்­றுப்­பு­லத்­தைச் சேர்ந்த தனு­சன் (வயது-19), தயா­ளன் (வயது-19) ஆகி­யோரே உயி­ரி­ழந்­துள்­ள­னர்.

உந்­து­ரு­ளி­யில் பய­ணித்த இளை­ஞர்­கள் இரு­வ­ரும் பேருந்­தின் பின்­பு­றத்­தில் மோதி விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­னர். படு­கா­ய­ம­டைந்த இரு­வ­ரும் உட­ன­டி­யாக மாவட்ட மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ள­னர். எனி­னும் அவர்­கள் ஏற்­க­னவே உயி­ரி­ழந்­து­விட்­ட­னர் என்று மருத்­து­வர்­கள் உறு­திப்­ப­டுத்­தி­யுள்­ள­னர்.

இவர்­கள் கிளி­நொச்சி, அறி­வி­யல் நகர் பகு­தி­யில் உள்ள தனி­யார் ஆடைத் தொழிற்­சா­லை­யில் பணி­பு­ரி­ப­வர்­கள் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

அண்­மை­யில் கொள்­வ­னவு செய்­தி­ருந்த உந்­து­ரு­ளி­யில் அவர்­கள் கிளி­நொச்சி நோக்­கிப் பய­ணித்­த­போதே விபத்­தில் சிக்­கி­யுள்­ள­னர்.

விபத்­துத் தொடர்­பான விசா­ர­ணை­க­ளைப் பொலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

You might also like