சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளுக்கு – அரச அதி­கா­ரி­க­ளும் ஆத­ரவா?

வடக்கு மாகா­ணத்­தின் வவு­னியா வடக் கில் ஊற்­றுப்­பு­லம் எனும் தமிழ்க் கிரா­மத்­தின் காடு­கள் அழிக்­கப்­பட்டுச் சிங்­கள மக்­க­ளைக் குடி­யேற்­றம் செய்­யும் நட­வ­டிக்­கை­கள் இர­க­சி­ய­மாக மேற் கொள்­ளப்­ப­டு­கின்­றன என்று பிர­தேச மக்­கள் கூறி­யி­ருந்த நிலை­யில், அவ்­வாறு எது­வும் நடக்­க­வில்லை என்று வவு­னியா வடக்கு பிர­தேச செய­லர் அறிக்­கை­யிட்­டுள்­ளார்.

சிங்­க­ளக் குடி­யேற்­றத்­துக்­கான ஏற்­பா­டு­கள் நடை­பெ­று­கின்­றன என்று நேரில் பார்த்­த­வர்­கள் மூல­மும், ஒளிப்­ப­டங்­கள் மூலம் தக­வல்­கள் வெளி­வந்­தி­ருந்த நிலை­யில் வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­ல­கம் இவ்­வாறு அறிக்­கை­யிட்­டுள்­ளமை சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­து­கின்­றது என்று பிர­தேச மக்­கள் கூறு­கின்­ற­னர்.

திட்­ட­மிட்ட செயல்
தமிழ் மக்கள் பாரம்­ப­ரி­ய­மாக வாழ்ந்த எல்­லைக் கிரா­மங்­க­ ளைத் திட்­ட­மிட்ட வகை­யில் பெளத்த மய­மாக்­கும் நட­வ­டிக்­கை­கள் தற்­போது அதி­க­ரித்­துள்­ளன. முல்­லைத்­தீவு, செம்­ம­லை­யில் உள்ள நீரா­விப் பிள்­ளை­யார் ஆலய வளா­கத்­தில் அண்­மை­யில் நீதி­மன்ற உத்­த­ர­வை­யும் மீறிப் புத்­தர் சிலை நிறு­வப்­பட்­டி­ருந்­தது.

அதைப்­போன்றே வவு­னி­யா­வில் ஊற்­றுக் குளத்தை அடுத்­துள்ள கச்­சல் சம­னங்­கு­ளத்­தை­யும், அதை அண்­டிய பகு­தி­க­ளை­யும் பௌத்த மய­மாக்கி சப்­பு­மல்­கஸ்­கந்த என்று பெயர்­மாற்றி சிங்­க­ளக் குடி­யேற்­றம் அமைக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­கின்­றது என்று அந்­தப் பகுதி மக்­கள் குற்­றஞ்­சாட்­டு ­கின்­ற­னர்.

தமி­ழர் பூர்­வீ­கக் கிரா­மம்
நெடுங்­கே­ணிப் பகுதியில் அமைந்துள்ள ஊற்­றுக்­கு­ளம் கிரா­மத்­தில் தமிழ் மக்­கள் பூர்­வீ­க­மாக வாழ்ந்து வந்­த­னர். போர் கார­ண­மாக அவர்­கள் இடம்­பெ­யர்ந்­த­னர். இன்­ன­மும் அங்கு மீளக் குடி­ய­ம­ரா­த­போ­தும், அங்கு விவ­சாய நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.
தற்­போது ஊற்­றுக்­கு­ளம் கிரா­மத்­தில் திடீ­ரெ­னப் புத்­தர் சிலை ஒன்று நிறு­வப்­பட்­டுள்­ளது டன் குளம் ஒன்­றும் புதி­தா­கக் கொட்­டில்­க­ளும் அமைக்­கப்­பட்­டுள்­ளன. சிங்­கள மக்­க­ளைக் குடி­யேற் றும் நட­வ­டிக்­கை­கள் இர­க­சி­ய­மாக, முழு­வீச்­சில் நடை­பெ­று­கின்­றன என்று பிர­தேச மக்­கள் கூறு­கின்­ற­னர்.

இந்த விட­யத்­தைப் பிர­தேச மக்­கள் நெடுங் கே­ணிப் பிர­தேச சபை­யின் கவ­னத்­துக்­குக் கொண்டு வந்­தி­ருந்­த­னர். நெடுங்­கே­ணிப் பிர­தேச சபைத் தவி­சா­ளர், உறுப்­பி­னர்­கள் அந்­தப் பகு­திக்கு நேர­டி­யா­கச் சென்று ஆராய்ந்­த­னர். இது தொடர்­பா­கக் கருத்­துத் தெரி­வித்­தி­ருந்த சபை­யின் தவி­சா­ளர் தணி­கா­ச­லம்-

“அந்­தப் பகு­தி­யில் 200 ஏக்­க­ருக்கு நீர் வழங்­கக் கூடிய வகை­ யில் குளம் ஒன்று அமைக்­கப்­பட்­டுள்­ளது. அந்­தப் பகுதி தமி­ழர்­கள் வாழ்ந்த நிலங்­கள்­தான். அங்கு 2 அடிக்­கும் உய­ர­மான புத்­தர் சிலை ஒன்று நிறு­ வப்­பட்­டுள்­ளதுடன் பௌத்த பிக்கு ஒரு­வரும் உள்­ளார். அவ­ருக்கு இரு காவ­லா­ளி­க­ளும் உள்­ள­னர்.

சிலைக்­குச் செல்­லும் இரு பக்­க­மும் சிறிய கொட்­டில்­கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. அந்­தப் பகு­தி­யில் சிங்­க­ளக் குடியேற் றத்தை உரு­வாக்க முயற்­சிக் கப்­ப­டுகின்­றது என மக்­கள் அச்­சம் கொண்­டுள்­ள­னர்.
இது தொடர்­பாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­களே அர­சி­டம் பேச வேண்­டும். நாங்­கள் இது தொடர்­பா­கப் பிரே­ரணை ஒன்­றைக் கொண்­டு­வ­ர­வுள்­ளோம்.”- என்று கூறி­யி­ருந்­தார்.

எது­வும் இல்லை
இந்த விட­யம் தொடர்­பாக மாகாண சபை முன்னாள் உறுப்­பி­னர் ப.சத்­தி­ய­லிங்­கம் கடந்த மாதம் மாவட்டச் செய­ல­ரி­டம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார். இந்த விட­யம் தொடர்­பில் ஆராய்ந்து உண்­மைத் தன்­மையை அறிக்­கை­யிட வேண்­டும் என்று வவு­னியா வடக்­குப் பிர­தேச செய­ல­ரி­டம், வவு­னியா மாவட்­டச் செய­லர் கோரி­யி­ருந்­தார்.

அது தொடர்­பில் தற்­போது பிர­தேச செய­லர் அறிக்­கை­யிட்­டுள்­ளார். அந்­தப் பகு­தி­யில் காடு துப்­பு­ரவு செய்­தமை தொடர்­பில் எவ­ரும் தக­வல் தெரி­விக்­க­வில்லை. அங்கு ஆரா­யச் சென்­ற­ போது அங்கு எவ­ரும் இருக்­க­வில்லை. அங்கே இடம்­பெ­றும் குள அபி­வி­ருத்தி தொடர்­பா­க­வும், புத்­தர் சிலை தொடர்­பா­க­வும் தர­வு­கள் கிடைக்­க­ வில்லை என்­றும் அவர் அறிக்­கை­யிட்­டுள்­ளார்.

மக்­கள் சந்­தே­கம்
மகா­வலி அதி­கார சபை­யும், வன வளத் திணைக்­க­ள­மும் இதற்கு உடந்தை என்று மக்­கள் கூறு­கின்­ற­னர். வவு­னியா, எல்­லைக் கிரா­மங்­க­ளில் இருந்து இடம்­பெ­யர்ந்த தமிழ் மக்­கள் அங்கு மீளக் குடி­ய­ ம­ரும்­போது அங்­குள்ள மரங்­களை வெட்­டு­வ­தற்கு வன வளத் திணைக்­க­ளம் தடை போடு­கின்­றது. மக்­கள் மீது நீதி­மன்­றங்­க­ளில் வழக்­குத் தாக்­கல் செய்­கின்­றது.

ஆனால் இவர்­கள் காடு­களை அழித்து குடி­யேற்­றங்­க ­ளைச் செய்­யும்­போது மௌன­மாக வேடிக்கை பார்க்­கின்­றது என்று பிர­தேச மக்­கள் கடும் விச­னம் வெளி­யிட்­ட­னர். இப்­போது வவு­னியா வடக்­குப் பிர­தேச சபை மாவட்­டச் செய­ல­கத்­துக்கு வழங்­கி­யுள்ள அறிக்­கை­யும் இந்­தச் சந்­தே­கத்தை அதி­கப்­ப­டுத்­து­கின்­றது என்­கின்­ற­னர் பிர­தேச மக்­கள்.

என்ன நடக்­கி­றது?
மக்­கள் தமது பூர்­வீக நிலங்­கள் பறி­போ­கின்­றன என்று அச்­சம் தெரி­வித்­துள்­ள­னர். அதி­கா­ரி­களோ அவ்­வாறு நடக்­க­வில்லை என்­கின்­ற­னர். ஆனால் நேரில் சென்று பார்த்த பிர­தேச சபை உறுப்­பி­னர்­கள், அங்கு குள அபி­வி­ருத்தி நடை­பெ­று­கின்­றது என்­றும், புத்­தர் சிலை­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன என்­றும் கூறு­கின்­ற­னர். ஒளிப்­ப­டங்­க­ளும் வெளி­யா­கி­யி­ருந்­தன. மக்­கள் பொய் கூறு­வ­தற்­கான தேவைப்­பா­டு­கள் எவை­யும் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இந்த விட­யத்­தில் தமிழ் அர­சி­யல் தலை­மை­கள் நேர­டி­யா­கக் கள­மி­றங்கி, சிங்­க­ளக் குடி­யேற்­றத்­துக்­கான இர­க­சிய வேலைத் திட்­டங்­கள் நடை­பெற்­றால் அதைத் தடுத்து நிறுத்த வேண்­டும்.

எல்­லைக் கிரா­மங்­க­ ளைப் பாது­காப்­ப­தன் மூலமே எமது இருப்பை உறு­திப்­ப­டுத்­திக் கொள்ள முடி­யும் என்­ப­தைப் புரிந்து கொண்டு விரைந்து செய­லாற்ற வேண்­டும் என்று மக்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­
னர்.

You might also like