சிங்களவர்களுக்கு நல்வழி காட்டாதவரை- இன ஐக்கியத்துக்கு நாட்டில் இடமில்லை!!

சிங்­க­ள­வர்­கள் தமிழ் மக்­க­ளுக்­குப் புரிந்த அட்­டூ­ழி­யங்­கள் கார­ண­மா­கவே பிர­பா­க­ரன் தோன்­றி­னா­ரென மனம் திறந்து கூறி­யுள்­ளார் அரச தலை­வர். தாம் சிறு­வ­னாக இருந்­த­போது தொட­ருந்­துப் பய­ணத்­தின்­போது சிங்­க­ள­வர்­கள் தமிழ்­மக்­க­ளுக்­குப் புரிந்த அநீ­தி­யை­யும் அவர் எடுத்­துக் கூறி­யுள்­ளார். பல்­லின மக்­கள் வாழ்­கின்ற இந்த நாட்­டில் சிங்­க­ள­ வர்­க­ளும் தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் முறையே பெரும்­பான்­மை­யி­ன­ராக உள்­ள­னர். மத ரீதி­யா­கப் பிரிந்து காணப்­பட்­டா­லும் மொழி­ரீ­தி­யா­கத் தமி­ழர்­க­ளும் முஸ்­லிம்­க­ளும் ஒன்­று­பட்டு நிற்­ப­தைக் காண முடி­கின்­றது.

அந்­நி­ய­ரின் ஆட்­சிக் காலம் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் ஒரு பொற்­கா­லம் என்றே கூற வேண்­டும். கல்­வி­யி­லும் நிர்­வா­கத் திற­னி­லும் மேம்­பட்ட நிலை­யில் அவர்­கள் காணப்­பட்­ட­தால் அரச உயர் பத­வி­க­ளில் அம­ரக்­கூ­டிய வாய்ப்­புக்­கள் அவர்­க­ளுக்­குக் கிடைத்­தன. இது சிங்­கள் மக்­க­ளி­டையே தமி­ழர்­கள்­மீது வெறுப்பு ஏற்­ப­டு­வ­தற்­குக் கார­ண­மாக அமைந்­து­விட்­டது. இத­னால் தமி­ழர்­க­ளைத் தமது எதி­ரி­க­ளா­கவே அவர்­கள் பார்க்க ஆரம்­பித்­த­னர்.

கிழக்­கைப் பறித்­தது சிங்­க­ள­வ­ரின் சதியே
தமி­ழர்­கள் தமது பூர்­வீ­க­மான பூமி­யா­கக் கரு­திய வடக்கு மற்­றும் கிழக்கு மாகா­ணங்­கள் பரந்த நிலப்­ப­ரப்­பைக் கொண்­ட­தாக அமைந்­தி­ருந்­த­தும் சிங்­க­ள­வ­ரி­டையே பொறா­மை­யைக் கிள­றி­விட்­டது. கிழக்கு மாகா­ணத்­தின் செழிப்­பான தன்மை அவர்­க­ளின் கண்­க­ளைக் குத்­தவே செய்­தது. செழிப்­பான பரந்த கிழக்கு மாகா­ணத்தை தமி­ழர்­க­ளி­ட­மி­ருந்து பறித்தெடுக்­கின்ற நோக்­கில் பெரு­ம­ளவு சிங்­க­ள­வர்­கள் அங்கு குறி­யேற்­றப்­பட்­ட­னர்.

நாடு அந்­நி­ய­ரி­ட­மி­ருந்து சுதந்­தி­ரம் அடைந்த பின்­னர் நாட்­டில் முத­லா­வது தலைமை அமைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­றுக்­கொண்ட டி.எஸ்.சேனா­நா­யக்க தமது முக்­கி­ய­மான கட­மை­யாக கிழக்­கில் சிங்­க­ளக் குடி­ யேற்­றங்­களை ஏற்­ப­டுத்­து­வ­தையே கொண்­டி­ருந்­தார்.

இதுவே கிழக்கு மாகா­ணம் தமி­ழர்­க­ளின் பிடி­யி­லி­ருந்து நழு­விச் சென்­ற­மைக்­கான முதன்­மைக் கார­ண­மா­கும். தமி­ழர்­க­ளுக்­குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்­கள் தலை­ந­கர் கொழும்பு உட்­பட நாட்­டின் சகல பகு­தி­க­ளி­லும் அமைந்­தி­ருந்­தன. கொழும்­பி­லி­ருந்து வெகு தூரத்­தில் உள்ள அம்­பாந்­தோட்டை மாவட்­டத்­தின் சிறிய நக­ரங்­க­ளி­லும் இந்த வர்த்­தக நிலை­யங்­கள் அமைந்­தி­ருந்­த­தைக் காண முடிந்­தது.

தமி­ழர்­க­ளின் பொரு­ளா­தார அபி­வி­ருத்­திக்கு இவை பெரி­தும் உத­வின. இதைக்­கூ­டச் சிங்­க­ள­வர்­க­ளால் சகித்­துக்­கொள்ள முடி­ய­ வில்லை. இவற்றை அழித்து விடு­வ­தற்­குச் சந்­தர்ப்­பத்­துக்­கா­கக் காத்­தி­ருந்­த­னர். இனக்கலவரம் என்ற போர்­வை­யின் கீழ் தமி­ழர்­கள் கொல்­லப்­பட்­ட­து­டன் நின்­று­வி­டாது அவர்­க­ளுக்­குச் சொந்­த­மான வர்த்­தக நிலை­யங்­க­ளும் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டன. இத­னால் தமக்­குச் சொந்­த­மான சக­ல­தை­யும் இழந்து தமது சொந்த இடங்­க­ளுக்­குத் திரும்­பு­வ­தற்கே தமி­ழர்­க­ளால் முடிந்­தது.

சிங்­க­ள­வர் மத்­தி­யில்
ஊடு­வி­யுள்­ளது இன­வா­தம்
இன்று இனப்­பி­ரச்­சினை தொடர்­பா­கப் பல­ரும் பேசு­கின்­ற­னர். சிங்­க­ள­வர்­கள் மனம் வைத்­தால் இதற்­குத் தீர்வு காண்­பது பெரிய விட­ய­மல்ல. சிங்­கள மக்­கள் தமக்­குள் நச்­சுப் பாம்­பு­க­ளாக உரு­வெ­டுத்­தி­ருக்­கும் இன­வாத சக்­தி­களை முத­லில் வேரு­டன் களைந்­தெ­றிய வேண்­டும். அதன் பின்­னர் நன்மை தீமை­களை அல­சிப் பார்க்க வேண்­டும். தாம்­விட்ட தவ­று­க­ளால் கொடிய போர் ஒன்று இடம்­பெற்­ற­தும் அத­னால் தமி­ழர்­க­ளுக்கு மட்­டு­மல்­லாது தமது இனத்­துக்­கும் பேர­ழிவு ஏற்­பட்­ட­தும் அப்­போது அவர்­க­ளுக்­குத் தெரி­ய­வ­ரும். தமி­ழர்­கள் ஆயு­த­மேந்­திப் போரா­டி­ய­தில் உள்ள நியா­யங்­க­ளும் அவர்­க­ளுக்­குப் புரி­யும்.

சிங்­க­ள­வர்­கள் தமிழ்­மக்­க­ளுக்­குப் புரிந்த அட்­டூ­ழி­யங்­கள் தொடர்­பா­கக் கூறி­யி­ருப்­ப­வர்­கள் ஒரு சாதா­ரண சிங்­க­ள­வ­ரல்ல. இந்த நாட்­டின் அதி­யு­யர்ந்த பத­வியை வகிக்­கின்ற அரச தலை­வரே இதைக் கூறி­யுள்­ளார். தமி­ழர்­கள் இந்த நாட்­டின் தொடர்ந்தும் வஞ்­சிக்­கப்­ப­டு­வார்­க­ளா­னால் தமி­ழர்­கள் மத்­தி­யில் இன்­னு­மொரு பிர­பா­க­ரன் தோன்­றி­வி­ரு­வா­ரென்­ப­தை­யும் அவர் அறி­யா­த­வ­ரல்ல. அவ­ரது ஆட்­சி­யில் தமி­ழர்­க­ளுக்கு எந்­தத் தீர்­வும் வழங்­கப்­ப­ட­வில்­லை­யென்ற உண்­மை­யும் அவர்­க­ளுக்­குத் தெரி­யாத விட­ய­மல்ல.

டி.எஸ்.சேனா­நா­யக்கா காலத்­தில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட சிங்­க­ளக் குடி­யேற்­றங்­க­ளும் நில ஆக்­கி­ர­மிப்­பும் இவ­ரது ஆட்­சிக் காலத்­தி­லும் இடம்­பெ­றத்­தான் செய்­கின்­றன.

அதை­யெல்­லாம் பார்த்­துக்­கொண்டு அமை­தி­யாக இருக்­கவே இவ­ரால் முடி­கின்­றது. ஒரு சிங்­க­ள­வர் என்ற வகை­யில் தமது இனத்­த­வர்­கள் தமி­ழர்­க­ளுக்­குப் புரிந்த அட்­டூ­ழி­யங்­க­ளுக்கு சிறு பிர­ாயச் சித்­தமா­வது புரி­வ­தற்கு இவர் முன்­வந்­தி­ ருக்க வேண்­டும். ஆனால் அதைச் செய்­வ­தற்­கும் இவ­ரால் முடி­ய­வில்லை.

மெத்­தப்­ப­டித்­த­வர்­க­ளும்
விதி­வி­லக்கு இல்லை!
அர­சி­யல்­வா­தி­க­ளும் மெத்­தப்­ப­டித்­து­விட்டு பல்­க­லைக்­க­ழ­கங்­க­ளில் பேரா­சி­ரி­யர்­க­ளா­கப் பணி­பு­ரி­ப­வர்­க­ளும் இன­வா­தச் சிந்­த­னை­யு­டன் செயற்­ப­டு­கின்­ற­னர். மெத்­தப் படித்­த­வர்­க­ளின் தவா­றான ஆலோ­ச­னை­க­ள் கார­ண­மாக ஆட்­சி­யில் இருப்­ப­வர்­கள் தவ­றான முடி­வு­களை மேற்­கொள்­வ­தை­யும் காண­மு­டி­கின்­றது. இத்­த­கை­ய­வர்­கள் தவ­றான முடி­வு­களை மேற்­கொண்­டு­விட்டு அதற்­கான பழியை சாதா­ரண சிங்­கள மக்­கள் மீது சுமத்­து­வது வேடிக்­கை­யா­க­வுள்­ளது. சிங்­கள மக்­களை இவர்­கள் சரி­யான பாதை­யில் அழைத்­துச் சென்­றி­ருந்­தால் இன மோதல்­க­ளுக்­கும் கல­வ­ரங்­க­ளுக்­கும் நாட்­டில் இடம்­பெற்­றி­ருக்­காது. தம்மை முற்­போக்­குச் சக்­தி­க­ளென இனம் காட்­டிக் கொண்­டி­ருக்­கும் சிங்­கள இட­து­சா­ரித் தலை­வர்­கள்­கூட அர­சி­ய­லில் தமது இருப்­பைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தற்­காக இன­வா­தத்­தைக் கையில் தூக்­கிக்­கொண்டு திரி­வ­தைக் காண முடி­கின்­றது.

பேரா­சி­ரி­யர் திஸ்­ஸ­வி­தா­ரண, வாசு­தேவ நாண­யக்­கார ஆகி­யோரை இதற்கு உதா­ர­ண­மா­கக் கூற முடி­யும். இவர்­க­ளைப் பார்த்­துப் பரி­தா­பப்­ப­டு­வ­தைத் தவிர வேறென்­ன­செய்ய முடி­யும். சிங்­கள மக்­க­ளுக்கு நல்­வ­ழி­காட்டி அழைத்­துச் செல்­லக்­கூ­டிய நல்ல தலை­வர்­கள் உரு­வா­கும் வரை­யில் இனப்­பி­ரச்­சினை தொட­ரவே செய்­யும். தமி­ழர்­கள் தமது உரி­மை­க­ளைப் பெறு­வ­தற்­கா­கப் போராட வேண்­டிய கட்­டாய நிலைக்­குத் தள்­ளப்­ப­டவே செய்­வார்­கள்.

You might also like