சிங்கள அரசுகளால் தொடர்ந்து- ஏமாற்றப்படும் தமிழர் தரப்பு!!

மைத்­திரி – –ரணில் இணைந்த கூட்டு அரசு தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அலட்­சி­ய­மாக நடந்­து­கொள்­கின்­றது. போர் கார­ண­மாக நாடு முழு­வ­தும் பாதிப்­புக்­களை எதிர்­கொண்­டி­ருந்­தா­லும் அதில் மிக மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­­­கள் தமி­ழர்­கள்­தான். போர் ஓய்ந்து நீண்ட ­காலம் சென்­று­விட்ட நிலை­யி­லும் இன்­னல்­க­ளு­ட­னேயே அவர்­கள் இன்­ன­மும் வாழ்ந்­து­கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சிறீ­லங்கா ­சுதந்­தி­ரக் கட்­சி­யும் இணைந்து ஆட்­சி­ய­மைத்­த­போது தமி­ழர்­கள் எதிர்­கொண்டு வரு­கின்ற பிரச்­சி­னை­க­ளுக்­குத் தீர்வு கிடைக்­கு­மென்ற நம்­பிக்கை தமி­ழர்­க­ளி­டத்­தில் எழுந்­தது. முன்­னர் இந்­தக் கட்­சி­கள் இரண்­டும் எதி­ரும் புதி­ரு­மா­கச் செயற்­பட்­ட­தால் தமி­ழர்­க­ளின் விவ­கா­ரத்­தில் ஒரு முடிவை எட்ட முடி­ய­வில்லை. ஆனால் இந்­த­முறை இந்­தக் கட்­சி­கள் இணக்­கப்­பாட்­டுக்கு வந்­த­தால் நல்­ல­தொரு முடிவு கிடைக்­கு­மென்ற நம்­பிக்கை தமி­ழர்­க­ளி­டத்­தில் துளிர்­விட்­டது. ஆனால் அந்த நம்­பிக்கை பொய்த்­துப்­போன நிலை­யில் காணப்­ப­டு­கின்­றது.

இனப் பிரச்­சி­னைக்கு இன்­ன­மும்
மருந்து கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை
எந்த நோக்­கத்­துக்­கா­கத் தமி­ழர்­கள் ஆயு­த­மேந்­திப் போரா­டி­னார்­களோ அந்த நோக்­கம் இன்­ன­மும் நிறை­வே­றாத நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றது. அந்த நோக்­கம் நிறை­வே­றும்­போ­து­தான் தமி­ழர்­க­ளின் அர­சி­யல் உரி­மை­கள் மற்­றும் ஒடுக்கு முறை­க­ளுக்கு எதி­ரான போராட்­டங்­க­ளுக்கு அறு­தி­யும் இறு­தி­யு­மான ஒரு முடிவு கிடைக்­கும்.

அது­வ­ரைக்­கும் அர­சி­யல் ரீதி­யா­கவோ, ஆயுத ரீதி­யா­கவோ தமி­ழர்­க­ளின் போராட்­டம் நீடிப்­ப­தற்­கான சந்­தர்ப்­பங்­களே அதி­கம். ஆனால் அரசு இது பற்­றிச் சிந்­திப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. இனப்­ பிரச்­சினை இந்த நாட்­டைப் பிடித்­துள்­ள­தொரு கொடிய நோயா­கவே மாறி­விட்­டது. இதற்­கு­ரிய மருந்து இது­வரை கண்­டு­பி­டிக்­க­வில்லை. அதற்­கு­ரிய முயற்­சி­க­ளும் மேற்கொள்ளப் படுவதாகத் தெரி­ய­வில்லை. இந்த இனப் பிரச்­சி­னைக்கு ஒரு தீர்­வைக் கண்­டு­விட்­டால் ஏனைய பிரச்­சி­னை­கள் தாம­தா­கவே மறைந்­து­வி­டு­மென்­ப­தைக் கூறத் தேவை­யில்லை.

தந்தை செல்வா தொடங்கி இன்றுவரை சமஷ்டி வலி­யு­றுத்­தப்­பட்டு வரு­கி­றது

தமி­ழர்­கள் அதி­கா­ரப் பகிர்­வைக் கோரி நிற்­கின்­ற­னர். இதன்­ மூல­மா­கவே இந்த நாட்­டில் தன்­மா­னத்­து­டன் வாழ முடி­யு­மென்­பது அவர்­க­ளின் நம்­பிக்கை. ஆனால் தற்­போது நடை­றை­யில் உள்ள அர­ச­மைப்­பின் ­கீழ் அதி­கா­ரப் பகிர்­வுக்கு இட­மே­யில்லை. ஆட்­சி­யா­ளர்­கள் ஒற்­றை­யாட்சி என்ற ஒன்­றையே பற்­றிப் பிடித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். இதி­லி­ருந்து விடு­ப­டு­வ­தற்கு அவர்­க­ளால் முடி­ய­ வில்லை. மாகாண சபை­கள் அதி­கா­ர­மில்­லாத சபை­க­ளாக இருப்­ப­தற்­கும் இது­தான் கார­ண­மா­கும். இத­னால்­தான் தந்தை­ செல்வா அன்றே கூட்­டாட்சி என்­கின்ற சமஷ்­டியை வலி­யு­றுத்­தி­னார்.
கூட்­டாட்சி। முறை­யின் கீழ் தமி­ழர்­கள் ஓர­ளவு சுயாட்­சி­யைப் பெற­மு­டி­யும். ஆனால், தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் சமஷ்டி அல்­லது கூட்­டாட்சி என்ற சொற்­க­ளைக் கேட்­டாலே கிலி­பி­டித்து ஆடு­கி­றார்­கள். கூட்­டாட்சி வழங்­கப்­பட்­டால் நாடு பிள­வு­ பட்­டு­வி­டு­மெனத் தென்­ப­குதி அர­சி­யல்­வா­தி­கள் அஞ்­சு­கின்­ற­னர். மக்­க­ளுக்­கும் அதைக் கூறி அவர்­க­ளை­யும் குழப்­பு­கின்­ற­னர்.

கூட்­ட­மைப்­பின் பொறுமை தகா­தது
அர­சி­யல் கைதி­கள் என்ற பெய­ரில் விசா­ர­ணை­கள் எது­வு­மின்­றித் தமி­ழர்­க­ளைச் சிறை­க­ளில் தடுத்து வைத்­தி­ருப்­பதை எந்த வகை­யி­லும் நியா­யப்­ப­டுத்த முடி­யாது. இவர்­க­ளில் சிலர் முன்­னாள் புலி­க­ளாக இருந்­தா­லும் அவர்­க­ளும் இந்த நாட்டு மக்­களே என்­பதை மறுக்க முடி­யாது. தமி­ழர்­கள் என்­ப­தால் நீதி மறுக்­கப்­ப­டு­வது எந்த வகை­யி­லும் ஏற்­றுக்­கொள்­ள­மு­டி­யா­தது. இந்த நாட்­டின் நீதித்­துறை அனை­வ­ருக்­குமே பொது­வா­னது. இதில் எந்­தப் பாகு­பாட்­டுக்­கும் இட­மில்லை. தமி­ழர்­க­ளின் முதன்­மைக் கட்­சி­யா­கக் கரு­தப்­ப­டும் கூட்­ட­மைப்­பின் தலைமை இந்த விட­யத்­தில் தொடர்ந்­தும் பொறு­மை­காத்­துக் கொண்­டி­ருப்­பது அர­சுக்­குச் சாத­க­மாகி விட்­டது. அர­சுக்கு ஆத­ரவை வழங்­கிக்­கொண்டு அரசு செய்­வ­தை­யெல்­லாம் அது வேடிக்கை பார்த்­துக்­கொண்­டி­ருப்­பதை மக்­கள் தொடர்ந்­தும் ஏற்க மாட்­டார்­கள்.

தமி­ழர்­க­ளின் பிளவு ஏற்­ற­தல்ல
இக்­கட்­டான இந்த நேரத்­தில் தமி­ழர்­கள் தமக்­குள் பிள­வு­பட்டு நிற்­கின்­றமை நல்­ல­தல்ல. வடக்கு மாகாண அமைச்­சர் அனந்தி தனிக்­கட்சி ஆரம்­பிக்­க­வுள்­ள­தா­க­வும் விக்­னேஸ்­வ­ரன் தனது எதிர்­கால அர­சி­யல் தொடர்­பாக அறி­விப்பு விடுவித்தி ருந்தமையும் தமி­ழர்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் நல்­ல­தா­கத் தெரி­ய­வில்லை. இவை­யெல்­லாம் எதி­ரி­க­ளுக்கு வாய்ப்­பாக அமைந்­து­வி­டும்.

சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் தமது இருப்­பைத் தக்­க­வைத்­துக்­கொள்­வ­தி­லேயே குறி­யாக இருக்­கின்­ற­னர். அர­சைக் கவிழ்த்­து­விட்டு மாற்று அர­சொன்றை அமைப்­ப­தில் மகிந்த தரப்புத் தீவி­ர­மாக ஈடு­பட்­டுள்­ளது. மகிந்­த­வு­டன் கைகோர்த்­துச் செயற்­ப­டு­வ­தற்கு மைத்­தி­ரி­யும் தயா­ராக இருப்­பதை அவ­தா­னிக்க முடி­கின்­றது. இவர்­கள் இரு­வ­ரும் இணை­வ­தால் தமி­ழர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான பய­னும் ஏற்­ப­டப்­போ­வ­தில்லை.

மாறி மாறி ஆட்­சிக்கு வரு­கின்ற சிங்­கள அர­சு­கள் தொடர்ந்­தும் தம்மை ஏமாற்றி வரு­வ­தைத் தமி­ழர் தலை­மை­கள் அனைத்­தும் இனி­யா­வது புரிந்­து­கொண்டு இரா­ஜ­தந்­தி­ரத்­து­டன் செயற்­பட வேண்­டிய தேவை தற்­போது எழுந்­துள்­ளது. சிங்­கள அர­சு­க­ளின் ஏமாற்று வேலை­க­ளுக்­குப் பதி­லடி வழங்­கு­வ­தற்­குத் தமி­ழர்­கள் ஒற்­று­மை­யு­டன் செயற்­ப­டு­வது அவ­சி­ய­மா­கும்.

You might also like