சிறை அலு­வ­லர்­கள் மூர்க்­கம்; சிறு­வ­னுக்கு சர­மா­ரி­யான அடி!!

கடு­மை­யா­கத் தாக்­கப்­பட்ட அடி காயங்­க­ளு­டன் 16 வய­துச் சிறு­வன் நேற்று கிளி­நொச்சி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டான்.

சிறைச்­சாலை அலு­வ­லர்­க­ளால் அந்­தச் சிறு­வன் உண­வ­கம் ஒன்­றி­னுள் வைத்து மிக மோச­மா­கத் தாக்­கப்­பட்­ட­தால் இந்­தக் காயங்­கள் ஏற்­பட்­டன என்று குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது.

சம்­ப­வம் நேற்று மாலை கிளி­நொச்சி, கர­டிப்­போக்கு சந்­திப் பகு­தி­யில் இடம்­பெற்­றது என்று சாட்­சி­கள் உத­யன் பத்­தி­ரி­கை­யி­டம் தெரி­வித்­த­னர். பாதிக்­கப்­பட்ட சிறு­வன் ஜூ.சி.ஈ. சாதா­ர­ண­த­ரப் பரீட்­சைக்­குத் தோற்­றி­விட்டு பெறு­பேற்­றுக்­கா­கக் காத்­தி­ருக்­கி­றார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

சம்­ப­வம் தொடர்­பில் நேரில் கண்ட சாட்­சி­கள் தெரி­வித்­த­தா­வது:
சிறைச்­சாலை வாக­னம் ஒன்­று­டன் குறித்த சிறு­வ­னின் துவிச்­சக்­கர வண்டி விபத்­துக்­குள்­ளா­னது. இத­னால் சிறு­வ­னுக்கு உர­சல் காயங்­கள் ஏற்­பட்­டன.

அரு­கில் உள்ள உண­வ­கம் ஒன்­றி­னுள் சென்று காயத்தை நீரால் கழு­விக் கொண்­டி­ருந்­தான் சிறு­வன். அப்­போது அதே உண­வ­கத்­தி­னுள் நுழைந்த சிறைச்­சாலை அலு­வ­லர்­கள் நால்­வர் கேட்­டுக் கேள்­வி­யின்­றிச் சிறு­வ­னைத் தாக்­கி­னர்.

எதிர்ப்­புத் தெரி­விக்­கத் திராணி சுவ­ரோடு சுவ­ராக மூலை­யில் முடங்­கிய சிறு­வனை நால்­வ­ரும் மாறி மாறி கைக­ளா­லும் கால்­க­ளா­லும் கையில் கிடைத்­த­வற்­றா­லும் சர­மா­ரி­யா­கத் தாக்­கி­னர்.

விபத்­துக்­குச் சிறு­வ­னு­டைய தவறே கார­ணம் என்று தெரி­வித்தே சிறு­வன் தாக்­கப்­பட்­டான். தாக்­கு­த­லால் காய­ம­டைந்த சிறு­வன் அங்­கி­ருந்த சில­ரால் கிளி­நொச்சி பொது வைத்­தி­ய­சாா­லை­யில் சேர்க்­கப்­பட்­டான் – என்று தெரி­வித்­த­னர்.

சிறைச்­சாலை அலு­வ­லர்­க­ளு­டைய மனி­தா­பி­மா­ன­மற்ற இந்­தச் செயற்­பாடு அதனை நேரில் பார்த்­த­வர்­க­ளை­யும் பெரு­ம­ள­வில் பாதித்­தது.

இந்­தச் சமம்­ப­வத்­து­டன் தொடர்புபட்­ட­வர்­கள் எந்­தச் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் என்று அறி­ய­மு­டி­ய­வில்லை. இது குறித்து முல்­லைத்­தீவு, வவு­னியா சிறைச்­சாலை அதி­கா­ரி­க­ளுக்­கும், அலு­வ­ல­கத்­துக்­கும் தொடர்­பு­களை ஏற்­ப­டுத்­தி­ய­போ­தும் உரிய அதி­கா­ரி­க­ளு­டன் பேச முடி­ய­வில்லை.

Tags

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close