side Add

சீ.ரி.ஸ்கானர் பழுதால் -நோயாளர்கள் சிரமம்!!

யாழ்ப்­பா­ணக் குடா­நாட்­டில் இயங்­கும் 30 மருத்­து­வ­ம­னை­க­ளுக்­கும் பொது­வாக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் மட்­டுமே சீ.ரி. ஸ்கானர் உள்ள நிலை­யில் குறித்த ஸ்கான­ரும் கடந்த 20 தினங்­க­ளாக பழு­த­டைந்த நிலை­யி­லேயே உள்­ளது.

இதன் கார­ண­மாக நோயா­ளர்­கள் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­மா­வட்­டங்­க­ளுக்கே அனுப்பி வைக்­கப்­ப­டு­கின்­ற­னர். இதற்கு நோயா­ளர்­கள் கடும் விச­னம் தெரி­வித்­துள்­ள­னர்.

குறித்த விட­யம் தொடர்­பில் யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் பணிப்­பா­ளர் சத்­தி­ய­மூர்த்­தி­யு­டன் தொடர்பு கொண்டு கேட்­ட­போது, ‘‘யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ ம­னை­யில் உள்ள ஸ்கானர் 8 ஆண்­டு­கள் பழ­மை­யா­னது.

அதே­நே­ரம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் பயன்­பாட்­டுக்கு இரண்டு ஸ்கானர்கள் தேவை­யா­ன­போ­தி­லும் ஒரே­யொரு ஸ்கானர் மட்­டுமே உள்­ளது. இந்த ஸ்கான­ரில் நாள் ஒன்­றுக்கு 60 ஸ்கானிங் இடம்­பெற்­றன. இவ்­வாறு அதி­க­ரித்த வேலைப் பளு­வின் கார­ண­மாக குறித்த ஸ்கானர் பளு­த­டைந்­தி­ருக்­க­லாம். எனி­னும் குறித்த ஸ்கானர் சீர்­செய்ய ஆவண செய்­யப்­பட்­டுள்­ளது’’ – என்­றார்.

You might also like