சும்மா மிரட்­டு­வ­தில் பய­னில்லை!

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் 2015ஆம் ஆண்டு – ஆட்­சிக்கு வந்த புதி­தில் – தான் ஏற்­றுக்­கொண்ட பரிந்­து­ரையை நான்கு ஆண்­டு­கள் கழித்து இப்­போது நிரா­க­ரித்­தி­ருக்­கி­றது கொழும்பு அரசு. இறு­திப் போரின் போது நடந்த மனித உரிமை மீறல்­கள் மற்­றும் மனித குலத்துக்கு எதி­ரான குற்­றங்­கள் குறித்து விசா­ரணை செய்­வ­தற்கு வெளி­நாட்டு நீதி­ப­தி­கள், வழக்­கு­ரை­ஞர்­கள், வழக்­குத் தொடு­நர்­கள் உள்­ள­டங்­க­லாக ஒரு கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையை ஏற்­ப­டுத்த வேண்­டும் என்­பதே அந்­தப் பரிந்­துரை.

இந்­தப் பரிந்­துரை முன்­வைக்­கப்­பட்ட தீர்­மா­னத்­துக்கு இணை அனு­ச­ரணை வழங்கி அதனை அப்­ப­டியே ஏற்­றுக்­கொண்­டி­ருந்­தது கொழும்பு. ஆனால், இப்­போது அதனை நிறை­வேற்ற முடி­யாது என்று மறுத்­தி­ருக்­கின்­றது.
அர­சின் இந்த நிலைப்­பாட்­டைக் கடு­மை­யா­கக் கண்­டித்­தி­ருக்­கி­றார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஏப்­ர­காம் சுமந்­தி­ரன். நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று உரை­யாற்­றும்­போது ஆட்­சி­யா­ளர்­க­ளின் இந்த முடி­வுக்­காக அவர்­க­ளைக் கடு­மை­யாக விமர்­சித்­தார். அத்­தோடு, இலங்கை ஆட்­சி­யா­ளர்­க­ளின் முடிவு இது­தான் என்­றி­ருந்­தால், இந்த விவ­கா­ரத்­தைப் பன்­னாட்­டுக் குற்­ற­வி­யல் நீதி­மன்றுக்கு எடுத்­துச் செல்ல வேண்­டி­யி­ருக்­கும் என்­றும் எச்­ச­ரிக்கை விடுத்­தி­ருக்­கி­றார்.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் சார்­பில் கொழும்பு அர­சுக்­கும் அதன் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் இது­போன்ற பல எச்­ச­ரிக்­கை­கள் கொடுக்­கப்­பட்­டுள்­ளன. “போராட்­டம் வெடிக்­கும்” என்­கிற எச்­ச­ரிக்கை அதில் மிக முக்­கி­ய­மா­னது. இருந்­தா­லும் அத்­த­கைய போராட்­டங்­கள் எவை­யும் இது­வ­ரை­யில் நடந்­த­தில்லை. அதே­நே­ரத்­தில் கொழும்­பின் அத்­து­மீ­றல்­கள், வாக்­கு­றுதி மீறல்­கள் எல்­லா­வற்­றை­யும் “எமக்கு வேறு வழி­யில்லை” என்­கிற அடிப்­ப­டை­யி­லும் “ஒன்­றுமே நடக்­கா­மல் இருப்­ப­தை­விட ஏதோ நடப்­பது பர­வா­யில்லை” என்­கிற அடிப்­ப­டை­யி­லும் கூட்­ட­மைப்புக் கடந்து சென்­றதே நடந்­தி­ருக்­கி­றது.

இது கொழும்­பின் ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­கும் நன்கு தெரி­யும்.
இத­னால், அவர்­கள் கூட்­ட­மைப்­பின் அழுத்­தங்­க­ளையோ தமிழ் மக்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட வாக்­கு­று­தி­க­ளையோ தூக்கி எறி­வ­தற்­குத் தயங்­கி­ய­தில்லை. இப்­போ­தும் அத­னை­யே­தான் செய்­தி­ருக்­கின்­றார்கள். புதிய அர­ச­மைப்­பாக இருக்­கட்­டும், ஐ.நா. மனித உரி­மை­கள் தீர்­மா­ன­மாக இருக்­கட்­டும் காணி விடு­விப்­பாக இருக்­கட்­டும், அர­சி­யல் கைதி­க­ளின் விடு­விப்­பாக இருக்­கட்­டும், காணா­மற்­போ­னோர் தொடர்­பான விசா­ர­ணை­க­ளாக இருக்­கட்­டும், பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டத்தை நீக்­கு­வ­தாக இருக்கட்டும் அனைத்­தி­லும் கொழும்­பின் அணு­குமுறை தமி­ழர்­க­ளைச் சீற்­றங்­கொள்ள வைக்­கும் வகை­யி­லான புறக்­க­ணிப்­பா­கவே அமைந்­தி­ருக்­கின்­றது.

அப்­ப­டி­யி­ருந்­தும் அந்த அர­சுக்கு நாடா­ளு­மன்­றத்­தி­லும் அதற்கு வெளி­யி­லும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புத்­தான் முண்­டு­கொ­டுத்து நின்­று­கொண்­டி­ருக்­கின்­றது. இத்தகைய அரசைக் கண்­டித்­தும், மிரட்­டி­யும் அறிக்­கை­வி­டு­வ­தால் பயன் ஏதும் கிட்­டப்­போ­வ­தில்லை . இரா­ஜ­தந்­தி­ரம் என்­கிற ரீதி­யில் கூட்­ட­மைப்­புத் தலை­வர்­கள் விடுக்­கக்­கூ­டிய போராட்ட மிரட்­டல்­க­ளுக்­கும் கொழும்பு அஞ்­சிப் பணி­யப்­போ­வ­தில்லை என்­பது உறுதி.

எனவே வெறு­மனே மிரட்­டல்­களை மட்­டும் விடுத்­துக் கொண்­டி­ரா­மல் உருப்­ப­டி­யான எதிர் நட­வ­டிக்­கை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு இறங்­க­வேண்­டும். இது காலத்­தின் கட்­டா­யம்.

You might also like