சுயதொழில் முயற்சியாளர்களுக்கு -உதவித் திட்டங்கள்!!

வடக்கு மாகாணத்தில் குழுவாக இணைந்து சுயதொழில் முயற்சிகளை மேற்கொண்டு வரும் பெண்களுக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு ஊடாக உதவித் திட்டங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைவாக வேலணை கிழக்கு முதலாம் வட்டாரத்தில் சாட்டி கிராமத்தில் அமைந்துள்ள ‘யோசப் மெழுகுதிரிகள்’ உற்பத்தி செய்யும் நிலையத்துக்கு உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இங்கு மெழுகுதிரி உற்பத்தியில் பெண் தலைமைத்துவக் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுக்கு 2018 ஆம் ஆண்டு மாகாண குறித்தொதுக்கப்பட்ட அபிவிருத்திக் கொடை நிதி ஊடாக உற்பத்தி உபகரணங்கள், தளபாடங்கள் மற்றும் கொட்டகை அமைப்பதற்கான நிதி என்பன வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் வாழைநார் சார் உற்பத்தியில் ஈடுபட்டுவரும் வவுனியா வெங்கலச்செட்டிக்குளத்தைச் சேர்ந்த 12 பேர் கொண்ட அமைப்புக்கு, 2018 ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட மூலதன நிதியினூடாக வாழைநார் பிரித்தெடுக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது.

You might also like