சுஷ்மா சுவராஜ் காலமானார்!!

முன்னாள் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் திடீர் உடல்நலக் குறைவு காரணமாக நேற்றுச் செவ்வாய்க்கிழமை இரவு காலமானார்.

1952ஆம் ஆண்டு பெப்ரவரி 14ஆம் திகதி பிறந்த சுஷ்மா சுவராஜுக்கு 67 வயது.

அவர் திடீர் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு நேற்று மாலை எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் இரவு 10.15 மணியளவில் உயிரிழந்தார் என்று இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.

உடல் நலக்குறைவு காரணமாக சுஷ்மா 2019 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. வழக்கறிஞரான சுஷ்மா சுவராஜ் பா.ஜ.கவின் டெல்லி முதல்வராக 1998ஆம் ஆண்டு சிறிது காலம் பதவி வகித்து இருக்கிறார். 25 வயதில் ஹரியானா மாநில அமைச்சராக பதவி ஏற்றார். ஒளிப்பரப்புத் துறை, குடும்ப நலம், வெளியுறவு என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றி இருக்கிறார்.

சுஷ்மாவின் மறைவையிட்டு “இந்திய அரசியலின் மகத்தானதொரு அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ளது என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி தமது ருவிற்றரில் பதிவிட்டுள்ளார்.

You might also like