சென்.பீற்­றர்ஸ் தேவா­ல­யத்­தில் கொல்­லப்­பட்­டோ­ருக்கு அஞ்­சலி

இலங்கை வான் படை நவாலி சென்.பீற்­றர்ஸ் தேவா­ல­யம் மீது நடத்­திய குண்டு வீச்­சி­ல் உயி­ரி­ழந்த 65 பொது­மக்­க­ளின் நினை­வேந்­தல் நேற்று நடத்­தப்­பட்­டது.

1995ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் நவாலி சென். பீற்­றர்ஸ் தேவா­ல­யம் மீது இலங்கை வான்­படை நடத்­திய தாக்­கு­த­லில் அங்கு தஞ்­சம்­பு­குத்­தி­ருந்த 65 பொது மக்­கள் உடல் சிதறி உயி­ரி­ழந்­த­னர். 150 பேருக்கு மேல் காய­ம­டைந்­த­னர்.

தமிழ் இன அழிப்பு வாரத்­தின் மூன்­றாம் நாளான நேற்று நவாலி சென்.பீற்­றர்ஸ் தேவா­ல­யத்­துக்கு முன்­பாக நினை­வேந்­தல் நடத்­தப்­பட்­டது.வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் எம்.கே. சிவா­ஜி­லிங்­கம் உட்­பட அர­சி­யல் தலை­வர்­கள், பொது­மக்­கள் எனப் பலர் நினை­வேந்­த­லில் கலந்து கொண்­ட­னர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close