side Add

சேதமடைந்தும்- கண்­டு­கொள்­ளப்­ப­டாத தபால் பெட்டி!!

தபால் பெட்­டிக் கத­வின் பூட்டு வேலை செய்­யாத நிலையை அறி­யாது பொது­மக்­கள் அத­னுள் தபால்­க­ளைப் போட்­டு­விட்­டுச் செல்­கின்­ற­னர். கதவு சேத­ம­டைந்­தமை குறித்­துத் தபால்த் திணைக்­க­ளம் இது­வரை கண்­டு­கொள்­ள­வில்லை என்று பிர­தேச மக்­கள் சுட்­டிக்­காட்­டு­கின்­ற­னர்.

யாழ்ப்­பா­ணம் பலாலி வீதி­யில் கந்­தர்­ம­டம் சந்­தி­யில் உள்ள தபால் பெட்­டியே இவ்வாறு சீர்கேடாகவுள்ளது. அந்­தப் பெட்டி இன்­று­வரை பயன்­பாட்­டில் உள்­ள­போ­தும் அதன் சேதங்­க­ளைச் சீர­மைக்­க­வில்லை. பொது­மக்­கள் தபால்­களை அந்­தத் தபால் பெட்­டி­யில் போட்­டுச் செல்­கின்­ற­னர். தபால்த் திணைக்­கள ஊழி­யர்­கள் தம்­வ­சம் உள்ள திறப்­பைக்­கொண்டு அதற்­குள்­ளி­ருக்­கும் தபால்­களை எடுத்­துச் செல்­வது வழமை.

தபால் பெட்டி பாது­காப்­பற்ற முறை­யில் சாதா­ர­ண­மாக எவ­ரும் திறந்து சாத்­தும் தன்­மை­யு­ட­னேயே காணப்­ப­டு­கின்­றது. ஒரு­வர் போட்­டுச் செல்­லும் தபாலை ஏனை­ய­வர்­கள் எடுக்க வாய்ப்­புள்­ளது.

எனவே நம்­ப­கத் தன்­மையை உறுதி செய்ய வேண்­டும் என்று பிர­தே­சத்­தைச் சேர்ந்­த­வர்­கள் கோரிக்கை விடுக்­கின்­ற­னர்.

‘‘இந்த தொடர்­பில் உட­ன­டி­யா­கப் பரி­சீ­லிக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டும்” என்று வடக்கு மாகாண பிர­தித் தபால்மா அதி­பர் தெரி­வித்­தார்.

You might also like