ஞான­சா­ரரின் விடுவிப்பை -வர­வேற்­கி­றது சிவ­சேனை!!

பொது­ப­ல­சேனா அமைப்­பின் பொதுச் செய­லர் ஞான­சார தேரரை, அரச தலை­வர் மன்­னிப்­ப­ளித்து விடு­வித்­தமையை சிவ­சேனை அமைப்பு வர­வேற்­றுள்­ளது.

இது தொடர்­பில் அந்த அமைப்­பின் தலை­வர் மற­வன்­பு­லவு க.சச்­சி­தா­னந்­தம் செய்­திக் குறிப்பைஅனுப்பி வைத்­துள்­ளார்.
அதில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது:

இலங்­கைக்கு அண்­மை­யில் வந்த சம­யங்­க­ளான கிறித்­து­வம், முக­ம­தி­யம் இரண்­டும் இலங்­கை­யின் நெடுங்­கால பாராம்­ப­ரி­யத்­தைப் பேணு­கின்ற சம­யங்­க­ளான புத்­தத்­தை­யும் சைவத்­தை­யும் தாக்கி மத­மாற்­றும் நோக்­கம் கொண்­டி­ருப்­பன. வந்த சம­யங்­க­ளான கிறித்­து­வம் முக­ம­தி­யம் இரண்­டி­லி­ருந்து புத்த தேசி­யத்தை காக்க வேண்­டும் என்ற முனைப்­போடு செயற்­பட்­ட­வர் ஞான­சா­ர தேரர்.

நோக்­கத்­தில் தூய்­மை­யா­கச் செயற்­பட்ட அவர் சினந்து சொன்ன சொற்­கள் இலங்­கை­யின் சட்­டங்­க­ளுக்­குப் புறம்­பா­ன­தென நீதி­மன்­றம் கண்­ட­றிந்­த­தால் அவர் சில காலம் சிறை­யில் இருக்க நேரிட்­டது. அவர் வெளியே வந்­தி­ருக்­கி­றார் மீண்­டும் தன் பணி­யைத் தொடர்­கி­றார் என்­ப­தில் சைவர்­க­ளா­கிய நாங்­கள் மிக­வும் மகிழ்ச்சி அடை­கி­றோம். தண்­ட­னைக் காலம் முடி­வ­தற்கு முன்­பாக ஞான­சா­சர தேரரை மன்­னித்து விடு­வித்த இலங்கை அர­சுக்­குப் பாராட்­டு­க­ளைத் தெரி­வித்­துக் கொள்­கி­றோம்.

பொது பல சேனை­யும் அதன் தலை­வர் ஞான­சா­கர தேர­ரும் அவ­ரோடு இணைந்து கைகோர்த்­துப் பணி­பு­ரி­கின்ற இலட்­சக்­க­ணக்­கா­னோ­ரும் இந்த மண்­ணின் மர­பைக் காப்­ப­தற்கு முயற்சி செய்­கின்ற மாபெ­ரும் தொண்­டர்­கள். சைவ சம­யத்தை வந்­தே­றிச் சம­யங்­கள் அழிப்­ப­தில் இருந்து காக்­கப் பொது­பல சேனை சைவர்­க­ளுக்­குத் துணை நிற்­கும் என நம்­பு­கி­றோம் – என்­றுள்­ளது.

You might also like