தப்பிக்க முடியாத நெருக்கடிக்குள் இலங்கை!!

ஜெனிவாவில் அழுத்­தங்­கள் அதி­க­ரித்­துள்­ளமை தெளி­வா­கத் தெரி­கின்­றது. ஐ.நா.மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் தெரி­வித்­துள்ள கருத்­துக்­கள் இலங்­கையை மென் மே­லும் சங்­க­டத்­துக்­குள் ஆழ்த்­தி­விட்­டன. பொறுப்­புக்­கூ­றல் செயற்­பாட்­டில் இலங்கை மந்­த­க­தி­யில் செயற்­ப­டு­வ­தாக அவர் கடு­மை­யா­கச் சாடி­யுள்­ளார்.

ஆனால் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் கருத்­துக்­களை இலங்­கை­யின் சார்­பில் மறுக்­கப்­பட்­டமை அந்த நாட்­டின் உண்­மை­யான நிலைப்­பாட்டை தெளி­வாக எடுத்­துத் காட்டிவிட்டது.மாறு­பட்ட கருத்­து­கள் இறு­திப் போரின்­போது போர்க்­குற்­றங்­கள் எவை­யும் இடம்­பெ­ற­வில்­லை­யெ­ன­வும் இந்­தக் குற்­றங்­களை விசா­ரிக்­க­வென பன்­னாட்டு நீதி­ப­தி­களை இங்கு அனு­ம­திக்க வேண்­டிய தேவை எழ­வில்­லை­யெ­ன­வும் இலங்­கை­யின் வெளி­வி­வ­கார அமைச்­சர் ஜெனி­வா­வில் வைத்­துத் திட்­ட­வட்­ட­ மா­கத் தெரி­வித்­து­விட்­டார். ஆனால் இலங்­கை­யின் கோரிக்கை ஏற்­கப்­ப­டுமா? என்­பதை இப்­போ­தைக்கு நிச்­ச­ய­மா­கக் கூற முடி­ய­வில்லை.

இதே­வேளை இறு­திப் போரின்­போது இடம்­பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் போர்க் குற்­றங்­கள் தொடர்­பாக உள்­நாட்­டில் உட­ன­டி­யாக விசா­ர­ணை­களை ஆரம்­பிப்­ப­தன் ஊடாக பன்­னாட்டு விசா­ர­ணை­க­ளி­ லி­ருந்த தப்­பிக்க முடி­யு­மென இறு­திப்­போர் இடம்­பெற்­ற­போது இரா­ணு­வத் தள­ப­தி­யாக இருந்­த­வ­ரும் போர்க் குற்­றங்­கள் இடம்­பெற்­றதை ஒப்­புக்­கொண்­ட­வ­ரு­மான சரத் பொன்­சேகா அர­சுக்கு ஆலோ­சனை வழங்­கி­யுள்­ளார். இவ­ரது கருத்து ஜெனி­வா­வில் வைத்து இலங்­கை­யின் வெளி­வி­வ­கார அமைச்­சர் தெரிவித்த கருத்­துக்க நேர் மாறா­க­வுள்­ளது. ஏற்­க­னவே போர்க்­குற்­றங்­கள் இடம்­பெற்­றதை தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வும் முன்­னாள் அரச தலை­வர் சந்­தி­ரிகா அம்­மை­யா­ரும் உறுதி செய்­த­மை­யும் சுட்­டிக்­காட்­ட த்­தக்­கது. பன்­னா­டு­கள் இந்­தக் கருத்­துக்­க­ளை­யும் கவ­னத்­தில் கொண்­டி­ருக்­கும் என்­ப­தில் ஐய­மில்லை.

பன்­னா­டு­கள் விச­னம்
இலங்­கை­யில் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இது­வ­ரை­யில் தீர்வு எதை­யும் பெற்­றுக் கொடுக்­காமை குறித்து ஐரோப்­பிய ஒன்­றி­யம் கடும் விச­னத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது. அதே­வேளை ஐ.நா.மனித உரி­மை­கள் சபைக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தில் இலங்கை அச­மந்­த­மா­க­வும் அக்­க­றை­யின்­றி­யும் இருப்­பது குறித்து கனடா கடு­மை­யான கண்­ட­னத்­தைத் தெரி­ வித்­துள்­ளது. இதே­வேளை மனித உரி­மை­கள் இலங்­கை­யில் பாது­காக்­கப்­ப­டல் வேண்­டும் என­வும் வன்­மு­றை­க­ளுக்கு எதி­ராக அந்த நாடு கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ள­வேண்­டு­மெ­ன­வும் டென்­மார்க் நாடும் தனது மக்­க­ ளுக்கு இலங்­கை­யி­டம் கோரிக்கை விடுத்­துள்­ளது.

இதே­வேளை இறு­திப் போரின்­போது சகல வகை­யில் இலங்­கைக்கு உத­விய பாகிஸ்­தான் போரால் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு இழப்­பீடு வழங்­கு­வது அவ­சி­ய­மென மட்­டுமே தெரி­வித்­தது. போருக்­குப் பின்­ன­ரான செயற்­பாடு குறித்த அந்த நாடு இலங்­கை­யைப் பாராட்­ட­வும் தவ­ற­வில்லை. இலங்­கை­யின் மிக நெருங்­கிய நண்­பன் என்ற வகை­யில் பாகிஸ்­தா­னின் கருத்து எதிர்­பார்க்­கப்­பட்­ட­தொன்­று­தான்.

புதிய தீர்­மா­னம்
இந்த நிலை­யில் ஐ.நாவில் பிரிட்­டன் தலை­மை­யி­லான நாடு­க­ளால் இலங்கை குறித்து புதிய தீர்­மா­ன­மொன்று நிறை­வேற்றி வைக்­கப்­பட்­டுள்­ளது. இரண்டு வருட காலத்­துக்­குள் இந்­தத் தீர்­மா­னத்­தில் குறிக்­கப்­பட்­ட­வற்றை நிறை­வேற்றி வைக்க வேண்­டிய பொறுப்பு இலங்­கை­யின் தலை­யில் சுமத்­தப்­பட்­டுள்­ளது. அதை ஏற்­ப­தா­கக் கூறிய இலங்கை அதற்கு இணை அனு­ச­ர­ணை­யும் வழங்­கி­யி­ருந்­தது. இத­னால் பொறுப்­புக் கூறு­வ­தி­லி­ருந்து இலங்கை இனி­மே­லும் ஒதுங்­கி­யி­ருக்க முடி­யாது. அதே­வேளை ஐ.நாவில் நிறை­வேற்­றப்­பட்­டுள்ள தீர்­மா­னத்தை முற்­று­மு­ழு­தாக ஏற்­றுக்­கொண்­டுள்ள இலங்கை அதை நிறை­வேற்­று­வ­தற்­கா­க­வும் வாக்­கு­றுதி வழங்­கி­யமை முக்­கி­யத்­து­வம் பெறு­கின்­றது.

அஞ்­சு­வது ஏன்?
போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் இலங்­கை­யில் இடம்­பெ­றா­தி­ருந்­தால் எந்த வித­மான விசா­ர­ணை­க­ளுக்­கும் அஞ்ச வேண்­டிய அவ­சி­யமே எழாது. பன்­னாட்டு நீதிப் பொறி­மு­றை­யின் கீழ் தன்­னை­யொரு நிர­ப­ரா­தி­யென நிரூ­பிப்­ப­தற்கு இலங்கை தயங்க வேண்­டி­ய­து­மில்லை. ஆனால் மனித உரி­மை­கள்­கள் சபை என்­றாலே இலங்கை வெட­வெ­டத்­துப்­போய் நிற்­ப­தையே காண முடி­கின்­றது.

குற்­றம் புரி­யா­த­வர்­கள் எந்­த­வொரு ஆணைக்­கு­ழு­வுக்கும் அஞ்­ச­வேண்­டி­ய­தில்லை. முன்­னைய அரச தலை­வ­ரும் தற்­போ­தைய எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான மகிந்த ராஜ­பக்ச ஐ.நா.மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கை­யின் இணை அனு­ச­ர­ணை­யு­டன் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னம் தொடர்­பா­கக் கடும் அச்­சம் கொண்­டுள்­ளதை அவ­ரது அறிக்­கை­கள் வாயி­லா­கப் புரிந்­து­கொள்ள முடி­கின்­றது.

இறு­திப்­போர் இடம்­பெற்­ற­போது அரச தலை­வர் பத­வியை அவரே வகித்­த­தால் போர்க்­குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பாக விசா­ர­ணை­கள் இடம்­பெ­றும்­போது தமக்­கும் பாதிப்பு ஏற்­பட்­டு­வி­டுமோ என அவர் அச்­ச­ம­டைந்­தி­ருக்­க­லாம். இந்­தியா கூட ஐ.நா.மனித உரி­மை­கள் சபை­யில் இலங்­கை­யைக் காப்­பாற்­றும் வித­மாக நடந்­து­கொண்­டமை கண்­டிக்­கத்­தக்­கது. இறு­திப்­போ­ரில் இந்­தி­யா­வும் முக்­கிய பங்கை வகித்­த­தால் போர்க் குற்றங்களில் தாமும் மாட்­டப்­ப­டக்­கூ­டு­மென்ற அச்­ச­வு­ணர்வு இந்­தி­யா­வி­டம் நிறை­யவே உள்­ளது.

எவர் எதைக் கூறி­னா­லும் ஐ.நாவை­யும் பன்­னாட்­டுச் சமூ­கத்­தை­யும் இலங்­கை­யால் இனி­யும் ஏமாற்ற முடி­யாது என்­பதை ஒப்­புக்­கொள்­ளத்­தான் வேண்­டும். இலங்கை நிர்க்­க­தி­யான நிலைக்­குத் தள்­ளப்­பட்­டுள்­ளது என்­பதே யதார்த்­த­மா­கும்.

You might also like