side Add

தமி­ழ­னுக்கு இந்த நாட்­டில் -பேச்­சுச் சுதந்­தி­ர­மும் இல்­லையா?

ஐக்கிய தேசி­யக் கட்­சி­யின் இரா­ஜாங்க அமைச்­சர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் விடு­த­லைப் புலி­க­ளின் மீள் எழுச்சி குறித்­துத் தெரி­வித்த கருத்­துக்­க­ளின் விளை­வு­கள் செல்­லும் போக்கு திருப்­தி­க­ர­மா­ன­தாக இல்லை. விடு­த­லைப் புலி­களை மீளு­ரு­வாக்க வேண்­டும் என்­கிற விஜ­ய­க­லா­வின் கருத்து அவ­ரது சொந்த அர­சி­யல் நலன் சார் கருத்து என்­கி­ற­போ­தும் , அவர் தனது பத­வி­யில் இருந்து வில­கு­வ­தற்கு அவ­ரது கட்­சி­யி­ன­ரா­லேயே நிர்ப்­பந்­திக்­கப்­பட்­ட­த­னால் அவர் பதவி வில­கி­யி­ருக்­கி­றார்.

இப்­போது அவர் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் பத­வி­யில் இருந்து வில­க­வேண்­டும் என்­கிற அழுத்­தம் தொடங்­கி­யி­ருக்­கி­றது. அதற்­கும் மேலாக அவ­ரது கருத்­துக்­க­ளுக்கு எதி­ராக பொலிஸ் குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­னர் விசா­ர­ணை­களை ஆரம்­பித்­தி­ருக்­கின்­ற­னர்.

விஜ­ய­க­லா­வின் கருத்­துக்­க­ளுக்கு எதி­ராக மகிந்த தலை­மை­யி­லான எதி­ர­ணி­யி­னர் போர்க்­கொடி தூக்­கு­வது முழு அர­சி­யல். அதனை ஏற்­றுக்­கொள்ள முடி­யும். ஆனால், விஜ­ய­க­லா­வின் கருத்­துக்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வது இலங்­கை­யின் அர­ச­மைப்பு தனது குடி­மக்­க­ளுக்கு உறு­திப்­ப­டுத்­தும் அடிப்­ப­டைச் சுதந்­தி­ர­மான பேச்­சுச் சுதந்­தி­ரத்­தையே கேள்­விக்­குள்­ளாக்­கு­கின்­றது. இதனை எப்­படி அனு­ம­திப்­பது?

தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கம் தடை­செய்­யப்­பட்ட இயக்­கம் , அத­னால் விஜ­ய­க­லா­விற்கு எதி­ராக நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்­டும் என்­ப­தான ஒரு கருத்­தைப் பரப்­பு­வ­தற்கு தீவிர சிங்­க­ள, பௌத்த அர­சி­யல்­வா­தி­கள் முயல்­கி­றார்­கள். தடை செய்­யப்­பட்ட இயக்­கத்­திற்கு உத­வு­வ­தும், அதனை மீளு­ரு­வாக்­கம் செய்­வ­தற்கு முயற்­சிப்­ப­தும், அந்த இயக்­கத்­திற்கு நிதி வழங்­கு­வ­தும், சட்­டப்­படி குற்­ற­மாக இருக்­க­லாம். ஆனால் அந்த இயக்­கத்­தைப் பற்­றிப் பேசு­வது எப்­ப­டிக் குற்­ற­மாக முடி­யும்?

விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தைப் பற்­றிப் பேசு­வது அல்­லது அந்த இயக்­கத்­தின் பெயரை உச்­ச­ரிப்­பதே குற்­றம் என்­றால் இலங்­கை­யில் இருக்­கும் எந்­த­வொரு அர­சி­யல் தலை­வ­ரை­யும் விட்­டு­வைக்­கா­மல் கைது செய்­ய­வேண்­டி­யி­ருக்­கும், அவர்­கள் மீது சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டி­யி­ருக்­கும்.

ஏனெ­னில் அவர்­கள் எல்­லோ­ருமே ஏதோ­வொரு சந்­தர்ப்­பத்­தில் விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தைப் போற்­று­ம் கருத்­துக்­க­ளைப் பகி­ரங்­க­மா­கத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்­கள். புலி­க­ளின் போராட்­டம் நியா­ய­மா­னது, அத­னைப் புரிந்­து­கொள்­வ­தற்கு பன்­னாட்­டுச் சமூ­கம் தவ­றி­விட்­டது என்று எதிர்க் கட்­சித் தலை­வர் இரா.சம்­பந்­தன்­கூ­டத்­தான் தெரி­வித்­தி­ருந்­தார்.

அமைச்­சர் விஜ­ய­க­லா­வின் பிரச்­சினை எழுந்­த­போது இது­போன்­ற­தொரு விட­யத்தை நல்­லி­ணக்க அமைச்­சர் மனோ­க­ணே­சன் சுட்­டி­க்காட்­டி­யி­ருந்­தார். தமி­ழீழ விடு­த­லைப் புலி­கள் இயக்­கத்­தின் தலை­வர் பிர­பா­க­ரன் சிங்­கள அர­சி­யல் தலை­வர்­க­ளை­வி­டச் சிறந்­த­வர் என்று கருத்­துத் தெரி­வித்த கெல உறு­ம­ய­வின் தலை­வர் ஞான­சார தேர­ரை­விட்­டு­விட்டு விஜ­ய­கலா மீது பாய்­வது ஏன் என்று கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார் அவர்.

இப்­போது அதை­யும் தாண்டி விஜ­ய­க­லா­வின் மீது சட்­டம் பாயும்­போ­து, அர­ச­மைப்­பின் ஊடாக அவ­ருக்­குக் கிடைக்­கக்­கூ­டிய பேச்­சுச் சுதந்­தி­ரம் பாதிக்­கப்­ப­டும்­போது, அது பற்­றிக் கேள்வி கேட்க தமிழ் அர­சி­யல் தலை­வர்­கள் எவ­ரும் முன்­வ­ரா­தது ஆச்­ச­ரி­ய­ம­ளிக்­கின்­றது. இந்த ஆட்­சி­யில் ஓர் அமைச்­ச­ருக்கே பேச்­சுச் சுதந்­தி­ரம் இல்லை என்­றால், பொது­மக்­க­ளின் நிலை என்ன?

ஆக மொத்­தத்­தில், விஜ­ய­க­லா­வின் பேச்சு மீது எடுக்­கப்­ப­டும் சட்ட நட­வ­டிக்கை என்­பது தமி­ழர்­க­ளின் பேச்­சுச் சுதந்­தி­ரத்தை முடக்­கு­வ­தற்­கும், எதிர்ப்­புக் குரல்­களை ஒடுக்­கு­வ­தற்­கு­மான கொழும்­பின் அதி­கார அடக்­கு­மு­றை­தான். உண்­மை­யில் இந்­தச் செய­லுக்கு எதி­ரா­கத் தமிழ்த் தலை­வர்­கள் அனை­வ­ரும் ஒன்­றி­ணைந்து போர்க்­கொடி தூக்கி வீதிக்கு இறங்­கிப் போரா­டி­யி­ருக்­க­வேண்­டும். துன்­பி­ய­லாக அப்­படி எது­வும் நடக்­கா­த­து­டன், விஜ­ய­கலா மீதான சட்ட நட­வ­டிக்­கைக்கு எதி­ரா­கக் கருத்­துக்­கூ­டச் சொல்­லாது அமைதி காக்­கி­றார்­கள் எல்­லாத் தமிழ்த் தலை­வர்­க­ளுமே!

இன்று விஜ­ய­க­லா­வுக்கு நடப்­பது நாளை தமக்­கும் நடக்­கும் என்­ப­தைப் புரிந்­து­கொள்­ளா­த­வர்­க­ளாக இருக்­கி­றார்­களா அல்­லது புரிந்­து­கொண்­டும் எனக்­கில்லை யாருக்­கோ­தானே என்று வாளா­வி­ருக்­கி­றார்­களா என்­பது தெரி­ய­வில்லை. எப்­ப­டி­யி­ருந்­தா­லும், விஜ­ய­கலா மீது அவ­ரது கருத்­துக்­காக பௌத்த சிங்­கள தேசி­ய­வா­தி­க­ளைத் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­கா­கச் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மாக இருந்­தால், அது தமி­ழர்­கள் அனை­வ­ரின் வாய்­க­ளுக்­கும் போடப்­ப­டும் பூட்­டா­க­வே­யி­ருக்­கும் . விழித்­துக்­கொள்­ளுங்­கள்!

You might also like
X