தமிழக அரசியலில் சகாப்தம் – தி.மு.க. தலைவர் கருணாநிதி!!

0 62

திரு­வா­ரூ­ரில் இருந்து 15 மைல் தூரத்­தில் உள்ள திருக்­கு­வளை என்ற கிரா­மத்­தில் 1924 ஜூன் 3ஆம் திகதி கரு­ணா­நிதி பிறந்­தார். பெற்­றோர்: முத்­து­வேல் – அஞ்­சு­கம் அம்­மை­யார். கரு­ணா­நி­திக்கு சண்­முக சுந்­த­ரம், பெரிய நாயகி என்று இரு சகோதரி கள். குடும்­பத்­துக்கு ஒரே ஆண் பிள்ளை அவர், பள்­ளி­யில் படிக்­கும்­போதே அர­சி­ய­லி­லும், இலக்­கி­யத்­தி­லும் ஆர்­வம் மிக்­க­வ­ரா­க விளங்­கி­னார். அப்­போது ‘மாணவ நேசன்’ என்ற கையெ­ழுத்­துப் பிர­தியை நடத்­தி­னார்.

‘தமிழ்­நாடு தமிழ் மாண­வர் மன்­றம்’ என்ற அமைப்­பைத் தொடங்­கி­யி­ருந்­தார். அப்­போது அண்­ணா­ம­லைப் பல்­க­லைக்­க­ழக மாண­வர்­க­ளாக விளங்­கிய அன்­ப­ழ­கன் கே.ஏ.மதி­ய­ழ­கன் ஆகி­யோரை அழைத்து மன்­றத்­தில் பேசியி­ருந்­தார்.

அண்­ணா­வின் பாராட்டு
1942ஆம் ஆண்டு அறி­ஞர் அண்ணா நடத்தி வந்த ‘திரா­விட நாடு’ ஏட்­டின் மூன்­றா­வது இத­ழில் கரு­ணா­நிதி எழு­திய ‘இள­மைப்­பலி’ என்ற எழுத்­தோ­வி­யம் பிர­சு­ர­மா­கி­யது. இக்­கட் டுரை அண்­ணாவை வெகு­வா­கக் கவர்ந்­தது.

1944 செப்­டம்­பர் 13ஆம் திகதி கரு­ணா­நி­திக்கு திரு­ம­ணம் நடந்­தது. மண­ம­கள் பெயர் பத்மா. கரு­ணா­நி­தி­யின் நாட­கங்­க­ளில் ஒன்­றைப் பார்த்­துப் பாராட்­டிய தந்தை பெரி­யார். அவர் நடத்தி வந்த ‘குடி­ய­ரசு’ வார இத­ழின் துணை ஆசி­ரி­ய­ராக கரு­ணா­நி­தியை நிய­மித்­தார். 1916ஆம் ஆண­்டில், திரா­வி­டக் கழ­கத்­தின் கொடி உரு­வாக்­கப்­பட்ட போது, நடு­வில் உள்ள சிவப்பு வண்­ணத்­துக்கு கரு­ணா­நிதி தன் ரத்­தத்தை காணிக்கை ஆக்­கி­னார். பெரி­யா­ரு­டன் கூட்­டங்­க­ளில் கலந்து கொண்­டு சொற் பொ­ழி­வு­கள் நிகழ்த்­தி­னார்.

திரை உல­கப் பிர­வே­சம்
இந்­தச் சம­யத்­தில் கோவை ஜூபி­டர் நிறு­வ­னத்­தி­னர் தயா­ரித்த ‘ராஜ­கு­மாரி’ படத்­துக்கு வச­னம் எழு­தும் வாய்ப்பு கரு­ணா­நி­திக்கு கிடைத்­தது. இந்­தப் படத்­தில்­தான் எம்.ஜி.ஆர். முதன் முத­லா­கக் கதா­நா­ய­க­னாக நடித்­தார். கரு­ணா­நி­திக்கு தொடர்ந்து சினிமா வாய்ப்­பு­கள் வரத்­தொ­டங்­கின. மனைவி பத்­மா­வு­டன் கோவை­யில் குடி­யே­றிஇ ‘அபி­மன்யு’ படத்­திற்கு வச­னம் எழு­தி­னார். ஆனால் படத்­தில் அவர் பெயர் விளம்­ப­ரப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. திரா­வி­டர் கழ­கத்­தில் சிறந்த எழுத்­தா­ள­ரா­க­வும், பேச்­சா­ள­ரா­க­வும், திரைப்­பட வச­ன­கர்த்­தா­வா­க­வும் கரு­ணா­நிதி வளர்ந்து கொண்­டி­ருந்த நேரத்­தில், அவர் மனைவி பத்மா இயற்கை எய்­தி­னார். 1948 செப்­டம்­பர் 15ஆம் திகதி தயாளு அம்­மாளை கரு­ணா­நிதி மணந்­தார்

திரா­வி­டர் கழ­கத்­தில் பிளவு
1949 ஜூலை 9ஆம் திகதி தனக்கு வாரி­சு­ரிமை வேண்­டு­மென்­ப­தற்­காக மணி­யம்­மையை பெரி­யார் மணந்­தார். இத­னால் திரா­வி­டர் கழ­கம் பிள­வு­பட்­டு செப்­ரெம்­பர் 17ஆம் திகதி அண்ணா தலை­மை­யில் தி.மு.கழ­கம் உத­ய­மா­யிற்று. தி.மு.கழ­கத்­தின் முக்­கி­யத் தலை­வர்­க­ளில் ஒரு­வ­ராய் விளங்­கிய கரு­ணா­நிதி, மாடர்ன் தியேட்­டர் தயா­ரித்த ‘மந்­திரி குமாரி’ படத்­துக்கு வச­னம் எழு­திப் புகழ் பெற்­றார். 1952ஆம் ஆண்டு ‘பரா­சக்தி’ படத்­துக்கு வச­னம் எழு­தி புக­ழின் சிக­ரத்­தைத் தொட்­டார்.

இப்­ப­டத்­தில்­தான் சிவா­ஜி­க­ணே­சன் அறி­மு­க­மா­னார். 1953 ஜூலை மாதத்­தில் தி.மு. கழ­கம் ‘மும்­மு­னைப் போராட்­டம்’ நடத்­தி­யது. டால்­மி­யா­ புரத்­தின் பெய­ரைக் ‘கல்­லக்­குடி’ என்று மாற்­றக் கோரி நடந்த போராட்­டத்­தில் தண்­ட­ வா­ளத்­தில் தலை வைத்­துப்படுத்­தார் கலை­ஞர். அவ­ரைப் பொலி­ஸார் கைது செய்­த­னர். அவ­ருக்கு 6 மாதம் கடுங்­கா­வல் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

1957இல் தேர்­த­லில் தி.மு.கழ­கம் முதன் முத­லாகச் சட்­ட­ச­பைத் தேர்­த­லில் கள­மி­றங்­கி­யது. குளித்­த­லைத் தொகு­தி­யில் போட்­டி­யிட்டு கரு­ணா­நிதி வெற்றி பெற்­றார். 1965இல் தமிழ்­நாட்­டில் நடந்த இந்தி எதிர்ப்­புப் போராட்­டத்தைத் தொடர்ந்து பாது­காப்­புச்­சட்­டத்­தின் கீழ் கைது செய்­யப்­பட்டு பாளை­யங்­கோட்­டை­யில் தனி­மைச் சிறை­யில் அடைக்­கப்­பட்­டார்.

அமைச்­ச­ரா­னார்
1967இல் பொதுத்­தேர்­தல் தமி­ழக அர­சி­ய­லில் ஒரு பெரும் திருப்­பத்தை ஏற்­ப­டுத்­தி­யது. 20 ஆண்­டு­கள் ஆட்­சி­யி­லி­ருந்த காங்­கி­ரஸ் தோல்வி அடைந்து தி.மு.கழ­கம் ஆட்சி பீடம் ஏறி­யது. பேர­றி­ஞர் அண்ணா முதல்­வ­ரா­னார். கரு­ணா­நிதி பொதுப்­ப­ணித்­துறை அமைச்­ச­ரா­னார். பின்­னர் போக்­கு­வ­ரத்­துத் துறைக்­கும் பொறுப்­பேற்­றார். அப்­போது பேருந்­து­களை அர­சு­டை­மை­யாக்­கும் திட்­டத்­தைக் கொண்டு வந்­தார்.

முத­ல­மைச்­சர்
ஆட்­சிக்கு வந்து இரண்­டாண்­டு­கள் கூட முடி­யாத நிலை­யில் 1969ஆம் ஆண்டு பெப்­ர­வரி 2ஆம் திகதி நள்­ளி­ரவு அண்ணா மறைந்­தார். அறி­ஞர் அண்­ணா­வின் அர­சி­யல் வாரிசு என்று அனை­வ­ரா­லும் ஏற்­றுக் கொள்­ளப்­பட்ட கரு­ணா­நிதி முத­ல­மைச்­ச­ரா­ னார்.

1969 பெப்­ர­வரி 10ஆம் திகதி கரு­ணா­நி­தி­யின் அமைச்­ச­ரவை பதவி ஏற்­றது. மத்­தி­ய-­ மா­நில அதி­கா­ரப் பங்­கீடு பற்றி நிர்­ண­யிக்க ‘ராஜ மன்­னார் குழு’ வை அமைத்­தார். 1971இல் நாடா­ளு­மன்­றத்­தைத் கலைத்து விட்டு தேர்­த­லைச் சந்­திக்­க தலைமை அமைச்­சர் இந்­தி­ரா­காந்தி முடிவு செய்­தார். இந்­திரா காந்­தி­யு­டன் கூட்­டணி அமைத்த கலை­ஞர் தமி­ழக சட்­ட­ச­பை­யை­யும் கலைத்து விட்டு நாடா­ளு­மன்­றத் தேர்­த­லு­டன் சட்­ட­ச­பைத் தேர்­த­லை­யும் நடத்­தத் துணிச்­ச­லாக முடிவு எடுத்­தார்.

ராஜா­ஜி­யும், காம­ரா­ஜ­ரும் கூட்­டணி அமைத்து எதிர்த்­தும், கலை­ஞரை வீழ்த்த முடி­ய­வில்லை. தேர்­த­லில் தி.மு.கழ­கம் 184 இடங்­க­ளில் மகத்­தான வெற்றி பெற்று மீண்­டும் ஆட்­சி­யைக் கைப்­பற்­றி­யது. 1971 மார்ச் 15ஆம் திகதி கரு­ணா­நிதி இரண்­டா­வது முறை­யாக முத­ல­ மைச்­ச­ரா­னார். பின்­னர், கரு­ணா­நி­திக்­கும் எம்.ஜி.ஆருக்­கும் கருத்து வேற்­றுமை ஏற்­பட்­டது. தி.மு.கழ­கத்­தி­லி­ருந்து பிரிந்த எம்.ஜி.ஆர். ‘அண்ணா தி.மு.க.’ என்ற பெய­ரில் தனிக் கட்சி தொடங்­கி­னார்.

எம்.ஜி.ஆர்.
ஆட்சி கலைப்பு
எம்.ஜி.ஆர். ஆட்சி கலைக்­கப்­பட்டு, சட்­ட­ ச­பைக்­குத் தேர்­தல் நடத்­தப்­பட்­டது. அதில் எம்.ஜி.ஆர். வெற்றி பெற்று மீண்­டும் ஆட்சி அமைத்­தார். எம்.ஜி.ஆர். மறை­வுக்­குப்­பி­றகு ஆட்­சிக்கு வந்த ஜானகி அம்­மாள் மந்­தி­ரி­ சபை அ.தி.மு.க. பிளவு பட்ட கார­ணத்­தால் 24 நாள்­க­ளில் கவிழ்ந்­தது.
1989இல் ஆண்டு தொடக்­கத்­தில் நடை­பெற்ற சட்­ட­ச­பைத் தேர்­த­லில் தி.மு.கழ­கம் மகத்­தான வெற்றி பெற்று ஆட்­சி­யைப் பிடித்­தது. 13 ஆண்டு இடை­வெ­ளிக்­குப்­பி­ற­கு கரு­ணா­நிதி மீண்­டும். (3ஆவது முறை­யாக) முத­ல­மைச்­ச­ரா­னார்.

13 முறை வெற்றி
1957இல் குளித்­தலை தொகு­தி­யி­லும், 1962இல் தஞ்­சை­யி­லும் 1967, 1971 ஆகிய தேர்­தல்­க­ளில் சைதாப்­பேட்­டை­யி­லும், 1977, 1980 ஆகிய தேர்­தல்­க­ளில் அண்ணா நக­ரி­லும், 1989, 1991 தேர்­தல்­க­ளில் துறை­மு­கத்­தி­லும், 1996-,2001 மற்­றும் 2006 தேர்­தல்­க­ளில் சேப்­பாக்­கத்­தி­லும் 2011 மற்­றும் 2016ஆம் ஆண்­டு­க­ளில் நடந்த தேர்­தல்­க­ளில் திரு­வா­ரூ­ரி­லும் போட்­டி­யிட்டு வெற்றி பெற்­றார்.

கலை­யு­ல­க சாதனை
அர­சி­ய­லில் பெரும் சாத­னை­கள் படைத்­துள்ள கரு­ணா­நிதி, திரைப்­ப­டத் துறை­யி­லும் தனது முத்­தி­ரையை ஆழ­மா­கப் பதித்­துள்­ளார். 20 படங்­க­ளுக்கு கதை, திரைக்­க­தை வச­னம் எழு­திய அவர் 33 படங்­க­ளுக்­குத் திரைக்­கதை வச­னம் எழு­தி­னார். அவர் எழு­திய வச­னங்­கள் காலத்தை வென்று வாழ்­கின்­றன. 26 படங்­களை அவர் தயா­ரித்­துள்­ளார். 18 படங்­க­ளுக்கு பாடல்­கள் எழு­தி­யுள்­ளார். சிவா­ஜி­க­ணே­சன், எம் ஜி ஆர், எஸ்.எஸ்.ராஜேந்­தி­ரன், உள்­பட பிர­பல நட்­சத்­தி­ரங்­கள் அவ­ரு­டைய வச­னத்­தைப் பேசி நடித்­துள்­ள­னர்.

இலக்­கி­யப்­பணி
புதை­யல், வெள்­ளிக்­கி­ழமை, ரோமா­பு­ரிப்­பாண்­டி­யன், பொன்­னர் சங்­கர், தென்­பாண்­டிச் சிங்­கம் உள்­பட 15 சமூக சரித்­திர நாவல்­கள் படைத்­துள்ள கலை­ஞர், தூக்­கு­மேடை, அனார்­கலி, சாக்­ர­டிஸ், மணி­ம­கு­டம் உள்­பட 18 நாட­கங்­களை எழு­தி­யுள்­ளார். திருக்­கு­ற­ளுக்கு இவர் எழு­திய எளிய – இனிய உரை மிக­வும் புகழ் பெற்­றது. குற­ளின் சிறப்பை விளக்கி இவர் எழு­திய குற­ளோ­வி­யம், இந்­தி­யி­லும் மொழி பெயர்க்­கப்­பட்­டுள்­ளது. .தன் சுய­ச­ரி­தையை ‘நெஞ்­சுக்கு நீதி’ என்ற தலைப்­பில் மூன்று நூல்­க­ளாக எழு­தி­யுள்­ளார். தன் வர­லாற்­று­டன்இ சம­கா­லத்­தில் நடை­பெற்ற இந்­திய நிகழ்ச்­சி­க­ளை­யும், உலக நிகழ்ச்­சி­க­ளை­யும் பொருத்­த­மாக இணைத்­து, ‘உலக வர­லாறு’ என்று சொல்­லத் தக்­க­வ­கை­யில் அரு­மை­யாக எழு­தப்­பட்­டுள்ள நூல் ‘நெஞ்­சுக்கு நீதி’

ஐந்­து­முறை
முதலமைச்­சர்
கரு­ணா­நி­திஇ தமி­ழக முதல் அமைச்­ச­ராக ஐந்து முறை பதவி வகித்­தார்.
1. அறி­ஞர் அண்ணா மறை­வுக்­குப்­பின், 1969 முதல் 1971 வரை.
2. 1971இல் சட்­ட­ச­பையை கலைத்­து­விட்டு தேர்­தலை சந்­தித்­தார். காம­ரா­ஜ­ருக்கு ஆத­ர­வாக ராஜாஜி பிர­சா­ரம் செய்­தும் காங்­கி­ரஸ் தோற்­றது. கரு­ணா­நிதி மகத்­தான வெற்றி பெற்று முத­ல­மைச்­ச­ரா­னார். 1976 வரை பத­வி­யில் இருந்­தார்.
3. 1977 முதல் 1988 வரை தமி­ழக முதல்-­அ­மைச்­ச­ராக எம்.ஜி.ஆர். பதவி வகித்­தார். அந்­தக் காலக்­கட்­டத்­தில் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருந்த கரு­ணா­நிதி, எம்.ஜி.ஆர். மறை­வுக்கு பின் நடந்த தேர்­த­லில் வெற்­றி­பெற்று 1989இல் மூன்­றா­வது முறை­யாக முத­ல­மைச்­சர் ஆனார்.
4. 1996 முதல் 2001-ம் ஆண்டு வரை நான்­கா­வது முறை­யாக முத­ல­மைச்­ச­ரா­கப் பதவி வகித்­தார்.
5. 2006-ம் ஆண்டு முதல் 2011 வரை ஐந்­தாம் தட­வை­யாக ஆட்சி நடத்­தி­னார்.

இலங்­கைத் தமி­ழர்­க­ளு­டைய விடை­யங்­க­ளி ­லும் கரு­ணா­நிதி கவ­னம் செலுத்­தி­யி­ருந்­தார்.

அவ­ரின் கால­கட்­டத்­தில் வடக்கு கிழக்கு இணைந்த மாகா­ண­சபை அரசு தமிழ் மக்­க­ளா­கிய எங்­க­ளுக்கு கிடைக்­கப்­பெற்­றது. இலங்கை அர­சின் அடக்­கு­மு­றை­க­ளுக்கு எதி­ராக பல்­வேறு வகை­யான உணவு ஒறுப்­புப் போராட்­டங்­களை நடத்­திய பெருமை கலை­ஞர் கரு­ணா­நி­தியை சாரும். அவர் தமிழ் மீது கொண்ட பற்­றின் கார­ண­மாக அவ­ரது திரைப்­ப­டங்­க­ளி­லும் சரி கவி­தை­க­ளி­லும் சரி பாடல்­க­ளி­லும் சரி அர­சி­யல் பேச்­சுக்­க­ளி­லும் சரி தமிழை முன்­னி­லைப்­ப­டுத்தி கருத்­துக்­களை வெளி­யி­டும் ஒரு சிறந்த தலை­வர்.

You might also like