side Add

தமிழர் தாயகத்துக்கு -உதவி கிடைக்காதா?

இலங்­கை­யைப் பொறுத்­தள­வில் தமி­ழர்­க­ளின் இரா­ஜ­தந்­தி­ரம் தோற்­றுப் போயுள்­ள­தையே தமி­ழர் தாயக மக்­க­ளின் அவ­ல­நிலை எடுத்­துக் காட்­டு­கின்­றது. அயல் நாடு­கள் தமி­ழர் தரப்­பின் நியா­யத்­தைப் புரிந்து கொள்­ள­வில்­லையா? அல்­லது புரிந்­து­கொள்­ளா­ததைப் போன்று நடிக்­கின்­ற­னவா என்­பது புரி­ய­வில்லை.

தமி­ழர்­கள் இலங்­கை­யில் மட்­டுமே வாழ­வில்லை. உல­கம் முழு­வ­தும் அவர்­கள் பரந்து வாழ்­கின்­ற­னர் என்று கூறு­கின்­றோம். எமக்கு மிக அரு­கில் தமிழ்­நாடு அமைந்­துள்­ளது. அங்கு பெரி­ய­ள­வான எண்­ணிக்­கை­யில் எமது உற­வு­கள் வாழ்­கின்­ற­னர். ஆனால் எமது துன்ப துய­ரங்­க­ளுக்­கான தீர்­வுக்கு அவர்­கள் உத­வு­வ­தா­கத் தெரி­ய­வில்லை. வெறு­மனே ஆத­ர­வுக் குரல்­கள் மட்­டுமே தீர்­வுக்கு வழி­யாகி விடாது. அதற்­கும் மேலே இரா­ஜ­தந்­திர உத­வி­கள் இன்று தேவை­யா­க­வுள்­ளன. அவை அயல் நாடு­களை இலங்­கைத் தமி­ழர்­கள்­பால் ஈர்க்­கக்­கூ­டிய வகை­யில் அமைந்­தி­ருத்­தல் வேண்­டும்.

எங்கு சென்­றது இந்­தியா?
பாகிஸ்­தான் படை­கள் அப்­போ­தைய கிழக்கு வங்­கா­ளத்­தில் நுழைந்து அட்­டூ­ழி­யம் புரிந்­த­போது இந்­தியா சிலிர்த்து எழுந்து பாகிஸ்­தா­னுக்கு எதி­ராய் போரிட்­டது. பெரு­ம­ளவு பாகிஸ்­தான் படை­கள் இந்­தி­யப் படை­க­ளி­டம் சர­ண­டைந்­தன. கிழக்கு வங்­கா­ளம் பாகிஸ்­தா­னின் பிடி­யி­லி­ருந்து விடு­பட்டு பங்­க­ளா­தேஷ் என்ற சுதந்­தி­ரத் தனி­நாடு உரு­வா­னது.

ஆனால் அதே இந்­தியா இலங்­கை­யில் இடம்­பெற்ற இறு­திப் போரின் போது பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தமி­ழர்­கள் கொல்­லப்­ப­டு­வ­தற்­குத் துணை புரிந்­தது என்­கிற குற்­றச்­சாட்டு உண்டு. இலங்­கைத் தமி­ழர்­கள் இந்­தியா மீது அளவு கடந்த பாசம் கொண்­ட­வர்­கள். இந்­தி­யா­வின் நல­னில் அக்­கறை கொண்­ட­வர்­கள். இதற்கு மேலாக சுமார் ஏழு கோடிக்­கும் மேற்­பட்ட தமி­ழர்­கள் இந்­தி­யா­வில் வசிக்­கின்­ற­னர்.

குறிப்­பா­கத் தமிழ்­நாட்­டில் அதி­க­ள­வான தமி­ழர்­கள் வாழ்­கின்­ற­னர். இவ்­வ­ள­வும் இருந்த போதி­லும் இலங்­கைத் தமி­ழர்­களை இந்­தியா நட்­டாற்­றில் கைவிட்டு விட்­ட­தன் கார­ணம் புரி­ய­வில்லை.
தமிழ்த் தலை­வர்­கள் இந்­தியா மீது எப்­போ­துமே நம்­பிக்கை கொண்­ட­வர்­க­ளாக இருந்­துள்­ள­னர். இந்­தியா ஒரு­போ­துமே எம்­மைக் கைவி­டா­தெ­னப் பேசி வந்­துள்­ள­னர்.

தமிழ் மக்­க­ளுக்கு நம்­பிக்­கை­யூட்­டி­னர். சக­ல­தை­யும் இந்­தியா பார்த்­துக் கொள்­ளு­மென்­பதே அவர்­க­ளது நம்­பிக்­கை­யாக இருந்­தது. இறு­தி­யில் தமி­ழர் விரோ­தப் போக்கை கடைப்­பி­டித்த இந்­தியா தமி­ழர் தாய­கத்­துக்கு பெரும் துரோகம் புரிந்­து­விட்­டது.

பன்­னாட்­டுச் சமூ­க­மும்
தமி­ழர்­க­ளுக்கு உத­வ­வில்லை
இந்­தியா மட்­டு­மல்ல உல­கின் வேறு நாடு­க­ளும் தமி­ழர்­க­ளுக்­குப் பெரும் துரோ­கத்­தைப் புரிந்து விட்­டன. லக்ஸ்­மன் கதிர்­கா­மர் பெய­ர­ள­வில் மட்­டுமே ஒரு தமி­ழ­ராக இருந்­த­வர். தாம் சார்ந்த இனத்­தின் மீது துளி­கூட கரி­சனை இல்­லாத மனி­தர் இவர். பதவி ஒன்­றையே குதிக்­கோ­ளாக கொண்ட இவர் தமது இனத்­துக்கு எதி­ரா­ன­வர்­க­ளுக்­குச் சேவ­கம் புரி­வ­தில் இன்­பத்­தைக் கண்­ட­வர்.

இவர் இலங்­கை­யின் அய­லு­ற­வுத் துறை அமைச்­ச­ராக இருந்­த­போது புலி­க­ளுக்கு எதி­ரான பரப்­பு­ரை­க­ளிலும் தீவி­ர­மாக ஈடு­பட்­டார். இவ­ரை­யும் ஒரு தமி­ழ­ரா­கவே கரு­திய பல நாடு­கள் புலி­க­ளுக்­குத் தடை­வி­தித்­தன. அமெ­ரிக்கா மற்­றும் ஐரோப்­பிய நாடு­க­ளும் இதில் உள்­ள­டக்­கம். ஈழத் தமி­ழர்­க­ளின் போராட்­டத்­தில் புலி­க­ளுக்கு எதி­ராக விதிக்­கப்­பட்ட தடை­கள் பெரும் பாதிப்பை ஏற்­ப­டுத்தி விட்­டன.

இறு­திப் போரில் புலி­கள் தோற்­க­டிக்­கப்­ப­டு­வ­தற்­கும் இதுவே முதன்­மைக் கார­ண­மாகி விட்­டது. லக்ஸ்­மன் கதிர்­கா­ம­ரின் பர­ப­ரப்­பு­ரை­களை முறி­ய­ டிப்­ப­தற்­கான இரா­ஜ­தந்­திர வல்­லமை அப்­போது இருந்­தி­ருந்­தால் எல்­லாமே தலை­கீ­ழாக மாறி­யி­ருக்­கும் என்­ப­தைக் கூறத் தேவை­யில்லை.

ஆனால் எம்­ம­வ­ரின் இரா­ஜ­தந்­தி­ரம் அப்­போ­தும் வேலை செய்­ய­வில்லை, தற்­போ­தும் வேலை செய்­ய­வில்லை. இறு­திப் போரின் போது இடம் பெற்­ற­தா­கக் கூறப்­ப­டும் போர்க் குற்­றங்­கள் மற்­றும் மனித உரிமை மீறல்­கள் தொடர்­பாக விசா­ரணை எது­வும் நடை­பெற்­றுக் குற்­ற­வா­ளி­கள் தண்­டிக்­கப்­பட்­ட­தா­கத் தெரி­ய­வில்லை.

இது தொடர்­பாக ஐ.நா மற்­றும் பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­னால் இலங்கை அரசை எது­வுமே செய்ய முடி­ய­வில்லை. ஜெனி­வா­வில் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டங்­கள் ஆண்­டு­தோ­றும் இடம்­பெ­றும்­போது தமிழ் அர­சி­யல்­வா­தி­கள் அங்கு செல்­வதை வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கின்­ற­னர்.

தம்­மால் தயா­ரிக்­கப்­பட்டு அங்கு எடுத்­துச் செல்­லப்­ப­டு­கின்ற உரை­களை வாசிப்­ப­தை­யும் இவர்­கள் வழக்­க­மா­கக் கொண்­டி­ருக்­கின்­ற­னர். ஆனால் அவர்­க­ளது இராஜ தந்­தி­ரம் வேலை செய்­த­தா­கத் தெரி­ய­வில்லை. இலங்­கை­யின் நழு­வல் போக்கு தொட­ரத்­தான் செய்­கின்­றது.

தமிழ்த் தலை­மை­கள்
செய­லாற்ற வேண்­டும்
தமிழ்த் தலை­வர்­கள் இனி­யா­வது விழித்­தெழ வேண்­டிய கட்­டா­யத்­துக்கு வந்­து­விட்­ட­னர். தம்­மை­யும் ஏமாற்றி தாம் சார்ந்த மக்­க­ளை­யும் ஏமாற்­றித் தமது சுய­நல அர­சி­யலை மேற்­கொள்­வதை அவர்­கள் உட­ன­டி­யா­கக் கைவிட வேண்­டும். பன்­னாட்­டுச் சமூ­கத்தை வெல்­லக் கூடிய இராஜ தந்­தி­ரமே இன்­றைய தேவை என்­பதை இவர்­கள் உணர்ந்து செயற்­பட வேண்­டிய தரு­ணம் தற்­போது வந்­து­விட்­டது. இதைத் தவற விடு­வ­தால் முழுத் தமி­ழி­னமே பாதிக்­கப்­பட்டு விடு­மென்­பது மறுக்க முடி­யாது உண்­மை­யா­கும்.

You might also like
X