தமிழ் மக்களின் ஆதரவின்றி கோத்தபாய வெல்ல முடியாது- சுமந்திரன் எம்.பி.!!

தமிழ் மக்­க­ளின் ஆத­ரவு இன்றி கோத்­த­பாய ராஜ­பக்ச வெற்­றி­பெற முடி­யாது. இத­னால்­தான், அவர் தனது முன்­னைய நிலைப்­பாட்டை மாற்­றிக்கொண்­டுள்­ளார்.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், அந்­தக் கட்­சி­யின் பேச்­சா­ள­ரு­மான எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

மட்­டக்­க­ளப்பு களு­வாஞ்­சிக்­கு­டி­யில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர்­கள் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

தமிழ் மக்­க­ளின் ஆத­ரவு இன்றி வெல்­லு­வேன் என்று கோத்­த­பாய ராஜ­பக்ச கூறி­ய­தாக செய்­தி­கள் வந்­தன. அதன் பின்­னர், தான் அவ்­வாறு சொல்­ல­வில்லை என்று கூறி­னார். அவர் அப்­ப­டிக் கூறி­னாரா? இல்­லையா என்று எனக்­குத் தெரி­யாது.

தமிழ் மக்­க­ளின் வேண­வாக்­களை நிறை­வேற்­று­வேன் என்று தனது உரை­யில் கோத்­த­பாய சொல்­லி­யி­ருக்­கின்­றார். தமிழ் மக்­க­ளின் ஆத­ரவு இன்றி நிச்­ச­யம் வெல்ல முடி­யாது என்­ப­தால்­தான், முத­லில் அப்­ப­டிக் கூறி­யி­ருந்­தா­லும் பின்­னர் தனது நிலைப்­பாட்டை மாற்­றிக் கொண்­டுள்­ளார்.

கேள்வி: ஐக்­கிய தேசி­யக்­கட்சி சார்­பாக சஜித், கரு­ஜெ­ய­சூ­ரிய இரு­வ­ரில் யார் போட்­டி­யிட்­டால், கோத்­த­பாய ராஜ­பக்­சவை எதிர்த்து வெற்­றி­பெ­று­வார் என்று நினைக்­கின்­றீர்­கள் ?

பதில்: ஐக்­கிய தேசிய கட்சி வேட்­பா­ளர்­களை தீர்­மா­னிப்­பது அது உட்­கட்சி விவ­கா­ரம். இதனை நாங்­கள் தீர்­மா­னிக்க முடி­யாது. அதில் தாக்­கம் செலுத்­தும் படி­யான கருத்­துக்­களை நாங்­கள் தெரி­விக்க முடி­யாது.

கேள்வி: தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பி­னர் கோத்­த­பாய ராஜ­பக்­சவை ஆத­ரிப்­பார்­களா?

பதில்: நாங்­கள் யாரை ஆத­ரிப்­பது யாரை ஆத­ரிக்­கா­மல் விடு­வது யாரை­யும் ஆத­ரிப்­பதா என்ற எந்த தீர்­மா­ன­மும் இன்­னும் எடுக்­க­வில்லை.

கேள்வி: அவ்­வா­றென்­றால் மகிந்த அரசு வந்து விடக் கூடாது என்­ப­தற்­காக ஐக்­கிய தேசிய கட்சி அர­சைக் கொண்டு வந்­த­தாக நீங்­கள் பகி­ரங்­க­மாக அறி­வித்­தி­ருந்­தீர்­கள். மகிந்த சார்­பான ஒரு­வ­ரான கோத்­த­பாய ராஜ­பக்­சவை ஆர­த­ரிக்க முடி­யுமா இல்­லையா என்று தற்­போது அழுத்­தம் திருத்­த­மாக தெரி­விக்­க­மு­டி­யாதா?

பதில்: அழுத்­தம் திருத்­த­மாக நாங்­கள் சரி­யான நேரத்­தில் சரி­யான ஒரு கருத்தை வெளி­யி­டு­வோம். அதற்­கான நேரம் இப்­போ­தில்லை.

கேள்வி: உங்­க­ளது கோரிக்­கை­க­ளுக்கு கோத்­த­பாய ராஜ­பக்ச ஆத­ர­வ­ளித்­தால் எத்­த­கைய நிலைப்­பாடு எடுப்­பீர்­கள்?

பதில்: நான் ஏற்­க­னவே சொன்­ன­தைப் போன்று ஆத­ரவு வழங்­கு­வதா? இல்­லையா என்ற தீர்­மா­னங்­கள் எல்­லா­வற்­றிக்­கும் மேலாக அனைத்து கட்­சி­க­ளும் தங்­க­ளு­டைய வேட்­பா­ளர்­களை அறி­விக்­கட்­டும். எல்லா கட்­சி­க­ளும் தங்­க­ளின் கொள்­கை­களை முன்­வைக்­கட்­டும். நாங்­கள் அனைத்து கட்சி வேட்­பா­ளர்­க­ளு­ட­னும் பேசு­வோம். அதன் பின்­னர் நிதா­ன­மான ஒரு முடிவை எடுப்­போம்.

You might also like