தற்கொலைக் குண்டுதாரியின்- தலையை அடையாளம் காட்டிய பெற்றோர்!!

உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு கொட்டாஞ்சேனை புனித அந்தோனியார் ஆலயத்தில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட அலாவுதீன் அஹமட் முவாத்தின் தலை பகுதி தனது மகனுடையது என்று அவரின் பெற்றோர் இனங்கண்டுள்ளனர்.

தற்கொலை குண்டுதாரியின் இறப்பு விசாரணை கொழும்பு நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட போது பெற்றோர் அடையாளம் காட்டினர்.

மட்டக்குளிப் பகுதியைச் சேர்ந்த தற்கொலை குண்டுதாரியின் தந்தை தனது சாட்சியில், உயிரிழந்துள்ள 22 வயதான தனது மகன் சட்டம் குறித்த ஆரம்ப கல்வியை முடித்தவர் எனத் தெரிவித்துள்ளார்.

சாய்ந்தமருது பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் ஒருவரின் மகளை திருமணம் செய்துள்ள அவர், பின்னர் ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் வீட்டை விட்டு வெளியேறினார் என்றும், பின்னர் தம்முடன் தொடர்பு கொள்ளவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

தற்கொலை குண்டுதாரியின் தாய் மற்றும் அவரின் இரண்டு உறவினர்கள் நீதிமன்றில் சாட்சியம் அளித்தனர்.

You might also like