தலை­வர்­க­ளும் புரி­த­லும் !!

புதிய அர­ச­மைப்­பில் இலங்கை ஒற்­றை­யாட்சி நாடா­கத்­தான் இருக்­கும் என்று தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்து வந்­தார். ஊட­கங்­கள் அதனை வெளி­யிட்­ட­போது, ரணில் விக்­கி­ர­ம­சிங்க “ஏக்­கிய ராஜ்ய” என்று சிங்­க­ளத்­தில் கூறு­வ­தைத் தமிழ் ஊட­கங்­கள் பிழை­யாக ஒற்­றை­யாட்சி என்று அர்த்­தப்­ப­டுத்தி வெளி­யி­டு­கின்­றன. ஏக்­கிய ராஜ்ய என்­ப­தன் சரி­யான பொருள் ஒரு­மித்த நாடு என்­பதே என்று அதற்­கொரு விளக்­கம் சொன்­னார் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் ஏப்­ர­காம் சுமந்­தி­ரன்.

ஆனால், ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவோ பொதுக்­கூட்­டம் ஒன்­றில் ஏக்­கிய ராஜ்ய என்­ப­தற்­கான விளக்­கத்தை யுனிட்­டரி ஸ்ரேட்ஸ் என்று ஆங்­கி­லத்­தி­லும் குறிப்­பி­டப்­போ­வ­தா­க­வும் அந்­தப் பொதுக் கூட்­டத்­தில் விளக்­கம் கூறி­யி­ருந்­தார். இத­னைச் சுட்­டிக்­காட்­டிய தமிழ் ஊட­கங்­கள், இவ்­வாறு தலைமை அமைச்­சர் ஏக்­கிய ராஜ்ய என்­பது ஒற்­றை­யாட்­சி­தான் என்று கூறு­கின்­ற­போது, புதிய அர­ச­மைப்­பி­லும் அந்­தப் பொரு­ளி­லேயே அந்­தச் சொல் கையா­ளப்­ப­டும் என்று எழு­தின.

நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ரனோ அத­னை­யும் அடி­யோடு நிரா­க­ரித்­தார். சிங்­கள மக்­க­ளைச் சமா­ளிப்­ப­தற்­காக, தமது அர­சி­ய­லுக்­கா­கத் தலைமை அமைச்­சர் இப்­படி எத­னை­யா­வது சொல்­லக்­கூ­டும், ஆனால் ஏக்­கிய ராஜ்ய என்­றால் ஒரு­மித்­த­நாடு என்­பது எழுத்­தில் இருக்­கின்­றது. அப்­ப­டி­யி­ருக்­கும்­போது ரணில் என்ன கூறு­கின்­றார் என்­பது தேவை­யற்­றது என்று வாதம் செய்­தார்.

கடை­சி­யில் இத்­தனை விவா­தங்­க­ளை­யும் சர்ச்­சை­க­ளை­யும் உரு­வாக்­கிய புதிய அர­ச­மைப்பு முயற்­சியை ரணில் விக்­கி­ர­ம­சிங்க அடி­யோடு கைவிட்­டு­விட்­டார் என்­பது ஒரு­பு­ற­மி­ருக்க, இப்­போது ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்­றும் திட்­ட­வட்­ட­மா­கக் கூறி­விட்­டார் ரணில் விக்­கி­ர­ம­சிங்க. குறிப்­பாக வெளி­நாட்டு நீதி­ப­தி­களை உள்­ள­டக்­கிய கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையை ஏற்­றுக்­கொள்­ளவே முடி­யாது என்­றும் தெரி­வித்­து­விட்­டார்.

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் தீர்­மா­ன­மும் எழுத்­தில்­தான் உள்­ளது. அதற்கு இணை அனு­ச­ரணை வழங்கி அதனை நிறை­வேற்­று­வ­தி­லும் கொழும்பு அரசு உடன்­பட்­டி­ருந்­தது. அதற்­கா­க­வெல்­லாம் அந்­தத் தீர்­மா­னத்­தில் கூறப்­பட்­டி­ருக்­கும் அனைத்­துப் பரிந்­து­ரை­க­ளை­யும் நடை­மு­றைப்­ப­டுத்­தி­விட முடி­யாது என்­றும் கூட்­ட­மைப்­பை­யும் குறிப்­பாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சுமந்­தி­ர­னை­யும் தூக்­கித் தூரப் போட்­டு­விட்­டார் ரணில்.

சிங்­கள அர­சி­யல்­வா­தி­களே இப்­ப­டித்­தான், தமி­ழர்­கள் விட­யத்­தில் ஒன்­றைச் சொல்­லு­வார்­கள் ஆனால், அத­னைப் பின்­னர் கடைப்­பி­டிக்க மாட்­டார்­கள் என்­ப­தா­லேயே தீர்வு விட­யத்­தில் எது­வாக இருந்­தா­லும் அது தெளி­வாக இடம்­பெ­ற­வேண்­டும் என்று ஊட­கங்­கள் வலி­யு­றுத்­தின. இப்­போது ஐ.நா. தீர்­மான விட­யத்­தி­லும் சிங்­க­ளத் தலை­வர்­கள் தமது குண­ந­லனை மீண்­டும் ஒரு தடவை சந்­தே­கத்­துக்கு இட­மின்றி நிரூ­பித்­து­விட்­டார்­கள். அனைத்­துச் சிங்­க­ளத் தலை­வர்­க­ளும் ஒரே அணி­யில் நின்­று­கொண்டு கலப்பு நீதி­மன்­றப் பொறி­மு­றையை எதிர்க்­கி­றார்­கள். அத்­த­கைய ஒரு பொறி­முறை இலங்­கை­யின் இறை­மை­யைப் பாதிக்­கும் என்­கி­றார்­கள். அத­னால் கூட்­ட­மைப்பு நாட்­டின் அர­ச­மைப்பை மதித்து நடக்­க­வேண்­டும் என்­கி­றார்­கள். இப்­ப­டிப்­பட்ட தலை­வர்­களை எப்­படி நம்­பு­வது?

எழுத்­தில் என்ன இருந்­தா­லும் இந்­தத் தலை­வர்­கள் அதற்கு என்ன அர்த்­தம் கற்­பிக்­கி­றார்­களோ அது­தான் நடை­மு­றைக்­கு­வ­ரும் என்­பதை அனு­ப­வம் மூலம் கற்­று­ணர்ந்­த­த­னா­லேயே தமி­ழர்­கள் இது விட­யத்­தில் எச்­ச­ரிக்­கை­யாக இருக்­கி­றார்­கள் என்­ப­தைத் தலை­வர்­கள் இனி­யா­வது புரிந்­து­கொண்­டால் சரி­தான்.

You might also like