தவறான நினைவுக்கல்லை அகற்றியது மாநகர சபை!!

யாழ்ப்பாணம் பிரதான நூலகத்தில் கடந்த 13 ஆண்டுகளாக இருந்த தவறான வரலாற்றை பிரதிபலித்த நினைவுக் கல் யாழ்ப்பாணம் மாநகர சபையால் அகற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நூலகம் 1981 ஆம் ஆண்டு எரிக்கப்பட்ட பின்னர், மீண்டும் புனரமைப்புச் செய்யப்பட்டு மீள மக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டது.

இந்த நிகழ்வு இடம்பெற்ற திகதி, நிகழ்வில் பங்குகொண்டிராத மூத்த அரசியல்வாதி நூலகத்தை திறந்து வைத்தார் எனத் தவறான ஓர் கல்வெட்டு வைக்கப்பட்டிருந்தது.

இந்தக் கல்லை அகற்றுவது தொடர்பான தீர்மானம் மாநகர சபையில் நிறைவேற்றப்பட்டது. தீர்மானம் ஆராயப்பட்ட நிலையில் குறித்த கல் நூலகத்தில் இருந்து அகற்றப்பட்டுள்ளது.

You might also like