தவ­றான முடி­வெ­டுத்து தீ மூட்­டிய மாணவி!!

தவ­றான முடி­வெ­டுத்­துத் தனக்­குத் தானே மண்­ணெண்ணை ஊற்­றித் தீ மூட்­டிக் கொண்ட மாணவி ஒரு­வர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார்.

இந்­தச் சம்­ப­வம் வட­ம­ராட்சி நவிண்­டில் பிர­தே­சத்­தில்நடந்­துள்­ளது.

வீட்­டில் ஏற்­பட்ட பிணக்கை அடுத்­துக் கடந்த சனிக்­கி­ழமை 18 வய­து­டைய மாணவி ஒரு­வர் தவ­றான முடி­வெ­டுத்து தனக்­குத் தானே தீ மூட்­டிக் கொண்­டார்.

அவர் உட­ன­டி­யாக உற­வி­னர்­க­ளால் பருத்­தித்­துறை ஆதார மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டார். அவ­ரது உட­லில் 80 வீதம் தீக்­கா­யம் ஏற்­பட்­டி­ருந்த நிலை­யில் அவர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டார்.

அவ­ருக்­குச் சிகிச்­சை­கள் வழங்­கப்­பட்டு வந்­த­நி­லை­யில் சிகிச்சை பய­னின்றி நேற்று உயி­ரி­ழந்­தார். இந்­தச் சம்­ப­வம் தொடர்­பான விசா­ர­ணை­கள் பருத்­தித்­து­றைப் பொலி­ஸா­ரால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றன.

அதே­வேளை, கடந்த ஒரு மாதத்­தில் வட­ம­ராட்­சிப் பகு­தி­யில் மூவர் தவ­றான முடி­வெ­டுத்­துத் தமக்­குத் தாமே தீ மூட்­டிக் கொண்­டுள்­ள­னர். அவர்­க­ளில் இரு­வர் உயி­ரி­ழந்­துள்­ள­னர். இது மக்­கள் மத்­தி­யில் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

You might also like