side Add

தாய்ப்­பால் – அவ­சி­ய­மான அரு­ம­ருந்து!!

தாய்ப்­பால் கொடுப்­பது காலம் கால­மா­கப் பெண்­கள் இயற்­கை­யா­கவே செய்து வந்த பணி. சமீப காலத்­தில் தாய்ப்­பால் அளிப்­பது பெரு­ம­ள­வில் குறைந்து வரு­கி­றது. தாய்ப்­பா­லின் முக்­கி­யத்­து­வத்தை வலி­யு­றுத்தி உல­க­ளா­விய விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தும் வித­மாக ஒவ்­வோர் ஆண்­டும் தாய்ப்­பால் தினம் கடைப்­பி­டிக்­கப்­ப­டு­கி­றது. இதன்­படி ஓகஸ்ட் மாதத்­தின் முதல் நாளான இன்று உலக தாய்ப்­பால் தினம்.

தாய்ப்­பா­லில் அதி­ச­யிக்­கத்­தக்க ஆற்­றல் படைத்த ரசா­ய­னப் பொருள் இருக்­கி­றது. அது பிறந்த குழந்­தை­யின் செரி­மான உறுப்­புக்­களை பாது­காக்­க­வும் குறை­க­ளைப் போக்­க­வும் பெரி­தும் உத­வு­கி­றது. குழந்தை பிறந்­த­வு­டன் சில நாள்­க­ளுக்­குச் சுரக்­கின்ற சீம்­பா­லில் அதிக அள­வில் தாதுப் பொருள் இருக்­கி­றது.

இது குழந்­தை­யின் குடல் பகு­தி­களை மற்ற அமி­லச்­சு­ரப்­பி­னால் பாதிப்பு ஏற்­ப­டா­மல் பாது­காக்­கி­றது. குழந்தை இனி­மேல் சாப்­பி­டப் போகும் உண­வு­களை ஏற்­றுக்­கொள்­ளும் வித­மாக பக்­கு­வப்­ப­டுத்­து­கி­றது. ஆகவே எல்­லா­வித சத்­துக்­க­ளும் அடங்­கிய பால் குழந்­தை­யின் வளர்ச்­சிக்­குப் பெரி­தும் உத­வு­கி­றது. தாய் பால் பரு­கும் குழந்­தை­கள் நல்ல ஆரோக்­கி­யத்­து­டன் வளர்­வர். கார­ணம் தாய்ப்­பா­லில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன்.

தாய்ப்­பா­லில் குழந்­தைக்கு வேண்­டிய அனைத்துச் சத்­துப் பொருள்­க­ளும் சரி­யான விகி­தத்­தில் உள்­ளன. மூளை வளர்ச்சி சரி­யாக அமைய மிகத் தேவை­யான புர­தங்­கள், அத்­தி­யா­வ­சிய கொழுப்­புச் சத்­து­கள் தாய்ப்­பா­லில் மட்­டுமே உள்­ளன. தாய்ப்­பால் இயற்­கை­யி­லேயே சரி­யான நிலை­யில் உட­னுக்­கு­டன் புதி­தா­கக் கிடைக்­கும் உணவு. உற்­பத்தி செய்­யப்­ப­டாத உண­வுப் பொருள் என்­ப­தால் எவ்­வித மாசிற்­கும் இட­மில்லை. மாறாக கிரு­மி­க­ளைக் கொல்­லும் பொருள்­க­ளைத் தன்­ன­கத்தே உடை­யது அதன் தனிச் சிறப்­பா­கும்.

தாய்ப்­பா­லில் உள்ள கொழுப்பு அமி­லங்­கள் மற்­றும் சில பொருள்­க­ளின் அற்­பு­தக் கலவை குழந்­தை­யின் மூளை வளர்ச்­சிக்கு உத­வு­கி­றது. ஒரு வய­திற்­குட்­பட்ட குழந்­தை­க­ளின் சாவைக் குறைக்க உலக நாடு­கள் முனைந்து செயல்­ப­டு­கின்­றன. குழந்தை பிறந்த முதல் 2 ஆண்­டு­கள் உடல், மன, மூளை வளர்ச்சி அதி­வே­க­மாக இருக்­கும். இந்தப் ப­ரு­வத்­தில் குழந்­தை­யின் ஒருங்­கி­ணைந்த வளர்ச்­சிக்கு ஏதே­னும் தடை ஏற்­பட்­டால் வாழ்­நாள் முழு­தும் சீராக்க முடி­யாத பாதிப்பை ஏற்­ப­டுத்­தும். எனவே, வளர்ச்­சிக்கு உறு­து­ணை­யாக தாய்ப்­பால் அளிப்­பது தாய்­மார்­க­ளின் கடமை.

6 மாதங்­க­ளுக்­கா­வது தாய் பாலூட்ட வேண்­டு­மென மருத்­து­வர்­கள் அறி­வு­றுத்­து­கின்­ற­னர். பிறகு தாய் அல்­லது குழந்தை ஆகிய இரு­வ­ரில் ஒரு­வர் வேண்­டாம் எனத் தீர்­மா­னிக்­கும் வரை குழந்­தைக்­குத் தாய்ப்­பால் தேவை. தாய் தன் மார்­போ­ட­ணைத்­துப் பாலூட்­டு­கை­யில் தொப்­புள் கொடிக்­குப் பிறகு மறு­படி ஒரு பிணைப்பு உடல் ரீதி­யாக ஏற்­ப­டு­கி­றது.

கலா­சா­ரத்­தில் தாய்ப்­பால் ஊட்­ட­லுக்கு தொன்­று­தொட்டே சரி­யான இடம் கொடுக்­கப்­பட்­டுள்­ளதை இலக்­கி­யங்­க­ளில் இருந்­தும் காவி­யங்­க­ளில் இருந்­தும் அறி­ய­லாம். புட்­டிப்­பால் என்­பது நாக­ரிக காலத்­தின் இடைச் செரு­கலே. தாய், பாலை மட்­டுமா ஊட்­டு­கி­றாள்? பாலோடு வாஞ்­சை­யை­யும் பாசத்­தை­யும் மட்­டு­மல்ல பண்­பை­யும் சேர்த்­தல்­லவா ஊட்­டு­கி­றாள்? எனவெ நாமும் பெண்­மை­யின் தாய்­மை­யினை பொற்­று­வோம். தாய்ப்­பால் ஊட்­ட­லினை வலுப்­ப­டுத்­து­வோம்.

You might also like