திருகோணமலையில் குடி தண்ணீருக்கு தட்டுப்பாடு!!

திருகோணமலை மாவட்டத்தில் நீடித்து வரும் கடும் வரட்சியான காலநிலை காரணமாக, நீர்நிலைகள் வற்றியுள்ளதுடன் குடி தண்ணீருக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மூதூர், மூதூர் கிழக்கு, சேருவில, வெருகல், கிண்ணியா, தம்பலகாமம் பகுதியிலுள்ள சிறிய குளங்கள் நீரின்றி வரண்டு காணப்படுகின்றன.

மூதூர் கிழக்கில் அமைந்துள்ள சிறிய குளங்கள் அனைத்திலும் முற்றாக நீர் வற்றிவிட்டது.

இதேவைளை மூதூர் பிரதேசத்தில் சில பகுதிகளில் பவுஸரின் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like