திருமலை துறைமுக அபிவிருத்தி தொடர்பில் கலந்தாய்வு!!

திருகோணமலைத் துறைமுகத்தின் எதிர்கால அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் மற்றும் துறை முகங்கள் அதிகார சபை தலைவர் காவன் டீ ரத்நாயக்க ஆகியோருக்குமிடையிலான சந்திப்பு திருகோணமலையில் உள்ள பிரதியமைச்சரின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.

அதில் திருகோணமலைத் துறை முக அபிவிருத்தி, புதிய திட்டங்கள், அதிக செலவாணியை ஈட்டிக் கொள்ளும் வழி முறைகள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.

சந்திப்பில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான எம்.பீ.எம்.முஸ்தபா, எஸ்.எம்.றிபாய் மற்றும் பிரதியமைச்சரின் ஆலோசகர் பொறியியலாளர் எஸ்.ஐ.மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

You might also like