திரு­மலை மாண­வர் ஐவர் படு­கொலை- குற்­ற­வா­ளி­களை தண்­டிப்­பது அவ­சி­யம்!!

திரு­கோ­ண­ம­லை­யில் 5 தமிழ் மாண­வர்­கள் அரச படை­யி­ன­ரா­லேயே சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர். அதில் மாற்­றுக் கருத்­துக்­க­ளுக்கு இட­மில்லை. படு­கொ­லையை நிரூ­பிக்­கும் தகுந்த சாட்­சி­கள் இல்லை என்று கூறி சந்­தேக நபர்­களை நிர­ப­ரா­தி­கள் என எப்­படி விடு­விக்க முடி­யும்?. இந்­தப் படு­கொ­லை­யு­டன் தொடர்­பு­டைய அனை­வ­ரும் தண்­டிக்­கப்­பட வேண்­டும். கொலைக் குற்­ற­வா­ளி­கள் தப்­பிக்­கவே முடி­யாது.

இவ்­வாறு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும் திரு­கோ­ண­மலை மாவட்ட நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இரா.சம்­பந்­தன் தெரி­வித்­தார்.

திரு­கோ­ண­ம­லை­யில் தமிழ் மாண­வர்­கள் 5 பேர் சுட்­டுப் படு­கொலை செய்­யப்­பட்ட வழக்­கில் குற்­றம்­சாட்­டப்­பட்­டி­ருந்த அரச படை­யி­னர் அனை­வ­ரும் நிர­ப­ரா­தி­கள் என திரு­கோ­ண­மலை நீதி­வான் நீதி­மன்­றம் தீர்ப்­ப­ளித்­துள்­ளது. வழக்கு விசா­ர­ணையை எதிர்­கொண்­டி­ருந்த 12 சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரும், ஒரு பொலிஸ் அதி­கா­ரி­யும் என அரச படை­யைச் சேர்ந்த 13 பேரும் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

2006 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 2ஆம் திகதி திரு­கோ­ண­ம­லை­யில் 5 மாண­வர்­கள் சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர். அவர்­கள் அன்­றி­ரவு 7 மணி­ய­ள­வில் திரு­கோ­ண­மலை கடற்­க­ரை­யில் – காந்தி சிலைக்கு அரு­கில் விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கும்­போது அங்கு வந்த அரச படை­யி­ன­ரால் கைது­செய்­யப்­பட்­டுப் பின்­னர் சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர். மாண­வர்­கள் அனை­வ­ரும் ஜி.சீ.ஈ. உயர்­த­ரப் பரீட்­சையை முடித்­து­விட்டு பல்­க­லைக்­க­ழக நுழைவு அனு­ம­தியை எதிர்­பார்த்­துக் காத்­தி­ருந்­த­வர்­க­ளா­வர். இந்­தச் சம்­ப­வத்­தில் மேலும் 2 மாண­வர்­கள் காய­ம­டைந்­த­னர்.

மனோ­க­ரன் ரஜீ­கர், யோக­ராஜா ஹேமச்­சந்­திரா, லோகி­த­ராஜா ரோகன், தங்­க­துரை சிவா­னந்தா மற்­றும் சண்­மு­க­ராஜா கஜேந்­தி­ரன் ஆகி­யோரே இந்­தச் சம்­ப­வத்­தில் உயி­ரி­ழந்­த­னர். .

இந்­தக் படு­கொ­லையை அர­சும், இரா­ணு­வத்­தி­ன­ரும், பொலி­ஸா­ரும் ஆரம்­பத்­தில் மறுத்­தி­ருந்­தா­லும், பின்­னர் அவர்­கள் அனை­வ­ரும் விடு­த­லைப் புலி­கள் என்­றும், அரச படை­கள் மீது இவர்­கள் கைக்­குண்டு கொண்டு தாக்க முற்­பட்ட வேளை­யில் கைக்­குண்டு வெடித்து அவர்­கள் உயி­ரிந்­த­னர் என்­றும் கூறி­னர்.

ஆனால் இறந்த மாண­வர்­க­ளின் தலை­கள் உட்­பட உடல்­க­ளில் துப்­பாக்­கிச் சூடு­கள் காணப்­ப­டு­கின்­றன, அவர்­கள் மிகக் கிட்­டிய தூரத்­தில் இருந்து சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர் என­வும் சட்ட மருத்­துவ பரி­சோ­த­னை­யின் மூலம் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. இந்த விட­யத்­தைப் ஒளிப்­பட ஆதா­ரத்­து­டன் அறிக்­கை­யிட்ட ‘உத­யன்’ – ‘சுடர் ஒளி’ திரு­கோ­ண­மலை செய்­தி­யா­ளர் எஸ்.சுகிர்­த­ரா­ஜ­னும் சில நாள்­க­ளின் பின்­னர் சுட்­டுக்­கொல்­லப்­பட்­டார்.

அதே­வேளை, படு­கொலை செய்­யப்­பட்ட மாண­வர்­க­ளின் பெற்­றோர் மற்­றும் உற­வு­கள் ஆகி­யோ­ருக்­கும் கொலை அச்­சு­றுத்­தல் விடுக்­கப்­பட்­ட­தால் அவர்­கள் நாட்­டை­விட்­டுத் தப்பி வெளி­நாட்­டில் புக­லி­டம் கோரி­னர். எனி­னும் மாண­வர்­க­ளின் படு­கொலை தொடர்­பில் அவர்­க­ளின் பெற்­றோர் மற்­றும் உற­வு­கள் நீதி கோரி நீண்ட சட்­டப் போராட்­டம் நடத்­தி­னர். சுட்­டுக்­கொல்­லப்­பட்ட மாண­வர்­க­ளில் ஒரு­வ­ரான ரஜீ­க­ரின் தந்தை மரு­த­து­வர் மனோ­க­ரன் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யி­லும் சாட்­சி­ய­ம­ளித்­தி­ருந்­தார்.

மாண­வர்­க­ளின் படு­கொலை தொடர்­பில் சந்­தே­கத்­தின் அடிப்­ப­டை­யில் 12 சிறப்பு அதி­ர­டிப் படை­யி­ன­ரும், உத­விப் பொலிஸ் அத்­தி­யட்­ச­கர் ஒரு­வ­ரும் குற்­றப்­பு­ல­னாய்­வுப் பிரி­வி­ன­ரால் 2013ஆம் ஆண்டு ஜுலை 5ஆம் திகதி கைது­செய்­யப்­பட்­ட­னர். கைது­செய்­யப்­பட்ட அனை­வ­ரும் 2013ஆம் ஆண்டு ஒக்­ரோ­பர் 14ஆம் திகதி திரு­கோ­ண­மலை நீதி­வான் நீதி­மன்­றத்­தால் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­ட­னர்.
இலங்­கை­யின் நீதிப்­பொ­றி­முறை குறித்து சர்­வ­தேச அள­வில் கவ­னத்தை ஈர்த்த விவ­கா­ர­மாக இந்­தப் படு­கொலை வழக்கு விளங்­கி­யது. பன்­னாட்டு அமைப்­பு­கள் இந்­தப் படு­கொ­லை­யைப் பகி­ரங்­க­மா­கக் கண்­டித்­தி­ருந்­தன.

திரு­கோ­ண­மலை நீதி­மன்ற நீதி­வான் எம்.எம்.மொக­மெட் ஹம்சா முன்­னி­லை­யில் கடந்த புதன்­கி­ழமை இந்த வழக்கு கட்­ட­ளைக்­காக வந்­தது.

“வழக்­கில் குற்­றஞ்­சாட்­டப்­பட்ட 13 எதி­ரி­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் மன்று திருப்­தி­ய­டை­யும் வகை­யில் சான்­றா­தா­ரங்­கள் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. அத­னால் குற்­ற­வி­யல் நடை­மு­றைச் சட்­டக்­கோவை 153 மற்­றும் 154ஆம் பிரி­வு­க­ளின் கீழ் எதி­ரி­கள் மீதான குற்­றச்­சாட்­டுக்­கள் சான்­றா­தா­ரங்­க­ளு­டன் முன்­வைக்­கப்­ப­ட­வில்லை. அத­னால் 13 எதி­ரி­க­ளும் அனைத்­துக் குற்­றச்­சாட்­டுக்­க­ளில் இருந்­தும் விடு­விக்­கப்­ப­டு­கின்­ற­னர்” என்று நீதி­வான் எம்.எம்.மொக­மெட் ஹம்சா கட்­டளை வழங்­கி­னார்.

படு­கொ­லை­யு­டன் சம்­பந்­தப்­பட்ட அரச படை­யி­னர் 13 பேரும் நிர­ப­ரா­தி­கள் என விடு­விக்­கப்­பட்­டமை நீதியை எதிர்­பார்த்த மாண­வர்­க­ளின் பெற்­றோர் மற்­றும் உற­வு­க­ளுக்கு பெரும் ஏமாற்­றத்தை அளித்­தது. இது தொடர்ப்­பில் அவர்­கள் கவலை வெளி­யிட்­டுள்­ள­னர்.
இது தொடர்­பில் தமிழ்த் தேசி­யக் கூட்ட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­பந்­த­னி­டம் ‘உத­யன்’ நேற்­றி­ரவு வின­வி­யது.

“2006ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் 02 ஆம் திகதி திரு­கோ­ண­ம­லை­யில் 5 தமிழ் மாண­வர்­கள் அரச படை­யி­ன­ரா­லேயே சுட்­டுக்­கொல்­லப்­பட்­ட­னர். இதில் மாற்­றுக்­க­ருத்­துக்­க­ளுக்கு இட­மில்லை. 5 மாண­வர்­க­ளும் துப்­பாக்­கி­யால் மிகக்­கிட்­டிய தூரத்­தில் வைத்து சுட்­டுக் கொல்­லப்­பட்­ட­னர் என்ற சட்ட மருத்­துவ பரி­சோ­த­னை­யின் அறிக்­கை­யும் நீதி­மன்­றத்­தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது.

இந்­தச் சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த 2 மாண­வர்­கள் நேர­டிச் சாட்­சி­க­ளாக உள்­ள­னர். இவர்­கள் இரு­வ­ரும் உயிர் அச்­சு­றுத்­தல் கார­ண­மாக வெளி­நா­டு­க­ளில் தஞ்­சம் புகுந்­துள்­ள­னர். 6 சாட்­சி­கள் உயிர் அச்­சு­றுத்­தல் கார­ண­மாக நீதி­மன்­றில் சாட்­சி­ய­ம­ளிக்­க­வில்லை. படு­கொ­லையை நிரூ­பிக்­கும் தகுந்த சாட்­சி­கள் இல்லை என்று கூறி சந்­தே­க­ந­பர்­களை நிர­ப­ரா­தி­கள் என எப்­படி விடு­விக்க முடி­யும்?. இந்­தப் படு­கொ­லை­யு­டன் தொடர்­பு­டைய அனை­வ­ரும் தண்­டிக்­கப்­பட வேண்­டும். படு­கொ­லைக் குற்­ற­வா­ளி­கள் தப்­பிக்­கவே முடி­யாது. நீதி­மன்­றத்­தின் இந்­தத் தீர்ப்பு தொடர்­பில் பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் கவ­னத்தை ஈர்க்­கும் வகை­யில் மிகக்­காட்­ட­மான அறிக்­கை­யொன்றை விரை­வில் நான் வெளி­யி­ட­வுள்­ளேன்” – என்று அவர் தெரி­வித்­தார்.

You might also like