தீயில் எரிந்த இளம் தாய் – சிகிச்சை பய­னின்றி உயிரிழப்பு!!

தீப்பற்­றிப் படு­கா­ய­ம­டைந்து சிகிச்சை பெற்­று­வந்த இளம் தாய் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார்.

தேரா­வில், விசு­வ­ம­டு­ வைச் சேர்ந்த மயூ­ரன் துளசி (வயது-23) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார்.

தீக்­கா­ய­ம­டைந்த நிலை­யில் துளசி தர்­ம­பு­ரம் மருத்­து­வ­ம­னைக்­குக் கொண்டு செல்­லப்­பட்­டுள்­ளார். அங்­கி­ருந்து கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார்.

இவர் மேல­திக சிகிச்­சைக்­கா­கக் கடந்த 10ஆம் திகதி யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னைக்கு மாற்­றப்­பட்­டுள்­ளார். 11ஆம் திகதி சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்­தார்.

இறப்பு விசா­ர­ணை­களை யாழ்ப்­பா­ணம் போதனா மருத்­து­வ­ம­னை­யின் திடீர் இறப்பு விசா­ரணை அதி­காரி நா.பிறே­ம­கு­மார் மேற்­கொண்­டார்.

இவ­ரது கண­வரே இவ­ருக்­குத் தீ வைத்­துள்­ளார் என்று உற­வி­னர்­க­ளால் குற்­றஞ்­சாட்­டப்­ப­டு­கின்­றது. கடந்த 5 ஆம் திகதி இந்­தப் பெண்­ணின் கண­வ­ரும், நண்­பர் ஒரு­வ­ரும் வீட்­டில் மது அருந்­தி­யுள்­ள­னர்.

அதன்­போது கண­வன், மனை­விக்கு இடையே ஏற்­பட்ட வாய்த்­தர்க்­கத்­தின் முடி­வில் கண­வர் மனை­விக்கு தீ வைத்­தார் என்று கூறப்­ப­டு­கின்­றது.

நடை­பெற்ற சம்­ப­வங்­கள் தொடர்­பில் கண­வ­ரின் நண்­பர் பொலி­ஸா­ரி­டம் வாக்­கு­மூ­லம் வழங்­கி­யுள்­ளார் என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close