துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கிய பொலிஸை -அடையாளம் காட்­டி­னார் சிறுமி!!

துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கிய பொலிஸ் அதி­கா­ரியை அடை­யாள அணி­வ­குப்­பில் அடை­யா­ளம் காட்­டி­னார் சிறுமி. சந்­தேக நப­ரைத் தொடர்ந்து விளக்­க­ம­றி­ய­லில் வைத்­தது கிளி­நொச்சி நீதி­மன்று.

கிளி­நொச்­சி­யில் 14 வய­துச் சிறுமி ஒரு­வர் பொலிஸ் அதி­கா­ரி­யால் துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கப்­பட்­டார் என்று குற்­ற­ஞ­சாட்­டப்­ப­டு­கின்­றது.

இதற்­குத் தாயும் உடந்தை என்று சிறுமி வழங்­கிய வாக்­கு­மூ­லத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது தொடர்­பில் கடந்த மாதம் கிளி­நொச்சி நீத­வான் மன்­றில் வழக்­குத் தாக்­கல் செய்­யப்­பட்­டது.

நேற்று அடை­யாள அணி­வ­குப்பு நடத்­தப்­பட்­டது. பொலிஸ் அதி­காரி, வாக­னச் சாரதி என இரு­வர் சிறு­மி­யால் அடை­யா­ளம் காட்­டப்­பட்­ட­னர்.

சாரதி மீது துரந்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கி­யமை தொடர்­பான குற்­றச்­சாட்டு இல்­லா­த­தால் அவர் பிணை­யில் செல்ல அனு­ம­திக்­கப்­பட்­டார். பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் விளக்­க­ம­றி­ய­லில் வைக்­கப்­பட்­டார்.

இது தொடர்­பாக மேல­திக விசா­ர­ணை­கள் நடை­பெ­று­கின்­றன என்­றும், சிறு­மி­யி­டம் வாக்­கு­மூ­லம் ஒன்று பெறப்­ப­ட­வுள்­ளது என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close