தூக்­கு­மேடை தயார்!!

இலங்­கை­யில் மீண்­டும் சாவுத் தண்­ட­னையை நடை­மு­றைப்­ப­டுத்­த­வுள்­ள­தாக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ள நிலை­யில், தூக்­கி­லிட பயன்­ப­டுத்­தும் தூக்­கு­மே­டையை அதி­கா­ரி­கள்நேற்­றுப் பரி­சோ­தித்­துள்­ள­னர்.

மிகப்­பெ­ரும் போதைப் பொருள் சூத்­தி­ர­தா­ரி­களை தூக்­கி­லி­டு­வ­தற்­காக அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன கடும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றார். அதற்­கான ஆயத்­தங்­கள் தற்­போது மும்­மு­ர­மாக இடம்­பெற்று வரு­கின்­றன. அந்­த­வ­கை­யில், தூக்­கி­லிட பயன்­ப­டுத்­தும் தூக்­கு­மே­டையை அதி­கா­ரி­கள் நேற்று பரி­சோ­தித்­துள்­ள­னர். இதன்­போது மணல் மூட்­டை­யொன்று தூக்­கிட்டு பரி­சோ­திக்­கப்­பட்­டுள்­ளது.

நாட்­டில் அதி­க­ரிக்­கும் குற்­றச்­செ­யல்­க­ளுக்கு போதைப்­பொ­ருளே கார­ணம் என்று தெரி­வித்­துள்ள அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன, விமர்­ச­னங்­களை கடந்து தூக்­குத்­தண்­ட­னையை நிறை­வேற்­று­வேன் என உறு­தி­யா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.

அந்த வகை­யில், முதற்­கட்­ட­மாக தூக்­கி­லி­டப்­ப­ட­வுள்­ளோ ­ரின் பட்­டி­யல் தமக்கு கிடைக்­கப்­பெற்­றுள்­ள­தாக கடந்த வாரம் குறிப்­பிட்­டி­ருந்­தார். இந்த நிலை­யில், தற்­போது தூக்­கு­மேடை பரி­சீ­லிக்­கப்­பட்­டுள்­ளது. இதே­வேளை, நிலை­யான சமா­தா­னத்தை நோக்கி நக­ரும் இலங்கை, தூக்­குத்­தண்­ட­னையை நடை­மு­றைப்­ப­டுத்­தக்­கூ­டாது என்று மனித உரிமை அமைப்­பு­கள் மற்­றும் சமூ­க­நல அமைப்­பு­கள் வலி­யு­றுத்தி வரு­கின்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like