தூத்துக்குடி படுகொலை- நினைவேந்தலுடன் மக்கள்!!

தமிழகம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு பல இடங்களில் மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

கடந்த ஆண்டு இதே நாளில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது, வன்முறை வெடித்தது.

அங்கு பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இதை முன்னிட்டு, விளையாட்டு மைதானம், கிறிஸ்தவ தேவாலயங்களில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.

பல இடங்களில் மக்கள் அஞ்சலி செலுத்திய வண்ணம் உள்ளனர். கண்காணிப்புக்காக, மாவட்டம் முழுவதும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

You might also like