தெரிவுக்குழு இன்று மாலை கூடும்- முக்கிய பிரதிநிதிகள் இருவரிடம் விசாரணை!!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு இன்று பிற்பகல் 2 மணிக்கு கூடவுள்ளது.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இளங்கக்கோன் ஆகியோருடம் விசாரணைகள் இடம்பெறவுள்ளது.

அத்துடன் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோரும் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

You might also like