தேக்கவத்தையில் பொங்கல் விழா!!

பொங்கல் விழா மற்றும் கிராம நிகழ்வுகள் வவுனியா தேக்கவத்தைப் பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று நடைபெற்றன.

வவுனியா நகரசபை உறுப்பினர் சமந்தா செபராணி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வவுனியா நகரசபை உறுப்பினர்கள் மற்றும் மதகுருமார்கள் கலந்து கொண்டனர்.

தைத்திருநானை முன்னிட்டு நடத்தப்பட்ட நிகழ்வில் தேக்கவத்தை இளைஞர் கழகம் மற்றும் சிறுவர் கழகங்கள் இணைந்து கலை நிகழ்வுகளை நடாத்தின.

You might also like