தொடருந்தில் வந்திறங்கிய வெளிநாட்டுப் பெண் கைது!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தொடருந்தில், பயணித்த ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் சந்தேகத்துக்கு இடமான பொருள்களுடன் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாண பொலிஸார் தொடருந்து நிலையத்தில் வைத்து பெண்ணைச் சோதனையிட்டனர். அவரது உடமைகளையும் சோதனையிட்டனர். அவரது உடமையில் சில இலத்திரனியல் பொருள்கள் மீட்கப்பட்டன.

அவரிடம் தற்போது பொலிஸ் நிலையத்தில் வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

You might also like