தொடருந்து மோதி- முதியவர் உயிரிழப்பு!!

கிளிநொச்சி இரணைமடுச் சந்தியில் யாழ்ப்பா ணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த தொடருந்து மோதியதில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இராசேந்திரம் (வயது-62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணத்திலிருந்து நேற்று இரவு புறப்பட்ட தபால் தொடருந்து இரவு 8.30 மணியளவில் இரணைமடுச் சந்தியை அண்மித்த போது, தொடருந்துடன் மோதி முதியவர் உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.

உயிரிழந்தவரின் சடலம் அறிவியல்நகர் தொடருந்து நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது. கிளிநொச்சி மருத்துவமனையில் சடலம் பின்னர் ஒப்படைக்கப்பட்டது.

You might also like