தொழிற்பயிற்சிகளுக்கு- விண்ணப்பங்கள் கோரல்!!

இலங்கைத் தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ்ப்பாணம் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற் பயிற்சிகள் தகவல் தொடர்பாடல் தொழில்நுட்பம், தையல், அலுமினியம் பொருத்துனர், உணவு மற்றும் குளிர்பானம் பரிமாறுபவர், அறை பராமரிப்பாளர், வெதுப்பாளர், நீர் குழாய் பொருத்துனர், முச்சக்கர வண்டி திருத்துனர், மரவேலை ஆகிய துறைகளுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

குறித்த கற்கை நெறிகளைப் பயில விரும்புவோர் எதிர்வரும் 15.06.2019 ஆம் திகதிக்கு முன்னர் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பதிவு செய்து கொள்ளுமாறு நிலைய முகாமையாளர் அறிவித்துள்ளார்.

0212211793, 0710318862,0771289302 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

You might also like