side Add

தொழிலுக்காக -அரசியலை கைவிட்ட பிரதேச உறுப்பினர்!!

யாழ்ப்­பா­ணம்,  வல்­வெட்­டித்­துறை நகர சபைக்கு அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி (தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னணி) ஊடா­கத் தெரிவு செய்­யப்­பட்ட சிவ­சோதி நவ­கோடி உறுப்­பி­னர் பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தா­கக் கோரி­ய­தற்கு அமை­வாக அவ­ரது உறுப்­பு­ரிமை வெற்­றி­ட­மாக்­கப்­பட்­டுள்­ள­து­டன், அவ­ரது இடத்­துக்கு தாமோ­த­ரம்­பிள்ளை சதா­சி­வம் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார்.

இது தொடர்­பான அர­சி­தழ் அறி­வித்­தலை வல்­வெட்­டித்­துறை நகர சபை தெரி­வத்­தாட்சி அலு­வ­லர் த.அகி­லன் வெளி­யிட்­டுள்­ளார்.

அகில இலங்­கைத் தமிழ்க் காங்­கி­ரஸ் கட்சி சார்­பில் தெரிவு செய்­யப்­பட்ட சிவ­சோதி நவ­கோடி பத­வி­யி­லி­ருந்து வில­கு­வ­தற்கு கோரி கடி­தம் அனுப்­பி­யி­ருந்­தார்.

‘நான் கடற்­றொ­ழிலை நம்­பியே வாழ்­வா­தா­ரத்தை முன்­னெ­டுக்­கின்­றேன். ஆழ்­க­ட­லுக்கு தொழி­லுக்­குச் சென்­றால், 10 தொடக்­கம் 15 நாள்­கள் கட­லில் இருக்­க­வேண்­டும். சபைக் கூட்­டங்­க­ளுக்கு ஒழுங்­கா­கச் சமூ­க­ம­ளிக்க முடி­யா­மல் இருக்­கின்­றது. இத­னா­லேயே நானாக விரும்பி எனது பத­வி­யைத் துறந்­தேன்’ என்று சிவ­சோதி நவ­கோடி தெரி­வித்­தார்.

You might also like