தோட்டக்காணியில் உரப்பையில் வெடிபொருள்கள்!!

வவுனியா வேலங்குளம் பகுதியில் தோட்ட காணியிலிருந்து வெடிபொருள்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.

காணி உரிமையாளர் உழவியந்திரம் மூலம் நிலத்தை பண்படுத்திய போது, உரப்பையில் சுற்றி காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொருள்களை அவதானித்து பொலிஸாருக்கு தெரியபடுத்தியுள்ளார்.

அங்கு விரைந்த பூவரசங்குளம் பொலிஸார் உரப்பையில் இருந்து, ஐந்து கைக்குண்டுகள் இருப்பதை அவதானித்தனர்.

விஷேட அதிரடிபடையினருக்குத் தகவல் வழங்கப்பட்டது. அதனையடுத்து மீட்கப்பட்ட குண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like