side Add

நல்லூர் றோட்டறிக் கழகத்தால் -21 மாணவர்களுக்கு சைக்கிள்!!

வடக்கு மாகாணத்தில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு 21 பேருக்கு நல்லூர் றோட்டறிக் கழகத்தினால் சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, முகமாலை றோமன் கத்தோலிக்க பாடசாலை, யாழ்.ரில்கோ விருந்தினர் விடுதி ஆகிய இடங்களில் வைத்து கட்டம் கட்டமாக சைக்கிள்கள் வழங்கப்பட்டன.

நல்லூர் றோட்டரிக் கழகத்தின் தலைவர் றொட்டேரியன் றோய் சத்தியசுதாகர் , றொட்டேரியன் றவினதாஸ் மற்றும் ரில்கோ விருந்தினர் விடுதி நிறைவேற்று முகாமைத்துவ பணிப்பாளர் திலகராஷ் ஆகியோர் இவற்றை வழங்கி வைத்தனர்.

சுவிஸ்சர்லாந்தில் வசிக்கும் மனித நேயர் தம்பையா அன்ரன் ரமேஷின் நிதி அனுசரணையின் கீழ் இவை வழங்கப்பட்டன.

You might also like