நான்­கா­வது தட­வை­யாக மகு­டம் சூடி­யது மும்பை!!

நான்­கா­வது தட­வை­யாக மும்பை இந்­தி­யன்ஸ் ஐ.பி.எல். சம்­பி­யன் பட்­டத்தை தட்­டிச் சென்­றது. சென்னை சூப்­பர் கிங்ஸ் அணியை ஓர் ஓட்­டத்­தால் வெற்றி கொண்­டது மும்பை அணி. இறு­திப் பந்து வரை­யில் பர­ப­ரப்­பா­கச் சென்ற ஆட்­டம் இறு­தி­யில் மும்­பை­யின் பக்­கம் சாய்ந்­தது.

ஒன்­றரை மாத கால­மாக கோல­க­ல­மாக நடந்து வந்த ஐபி­எல் 12ஆவது பரு­வ­கா­லத்­தின் இறுதி ஆட்­டம் நேற்று இடம்­பெற்­றது. பெரிய எதிர்­பார்ப்­புக்கு மத்­தி­யில் ஹைத­ரா­பாத் ராஜீவ் காந்தி அரங்­கில் நடை­பெ­றும் இறுதி ஆட்­டத்­தில் டோனி தலை­மை­யி­லான சென்னை சூப்­பர்­கிங்ஸ் அணி­யும் ரோஹித் சர்மா தலை­மை­யி­லான மும்பை இந்­தி­யன்ஸ் அணி­யும் மோதின.

பூவா தலையா சுழற்­றிப் பார்த்­த­தில் வென்ற மும்பை அணி அணித் தலை­வர் ரோஹித் சர்மா யாருமே எதிர்­பார்க்­காத வகை­யில் முத­லில் துடுப்­பாட்­டத்தை தேர்வு செய்­தார். மும்பை அணி­யில் ஒரு மாற்­ற­மாக ஜெயந்த் யாத­வுக்கு பதி­லாக மிட்ச் மெக்­லே­னே­கன் இடம் பிடித்­துள்­ளார். சென்னை அணி­யில் மாற்­றம் எது­வும் செய்­யப்­ப­ட­வில்லை.

மும்பை அணி­யின் ஆரம்­பத் துடுப்­பாட்ட வீரர்­க­ளாக டீகொக், ரோஹித் சர்மா கள­மி­றங்­கி­ய­போது ரசி­கர்­கள் கர­கோ­சம் எழுப்பி வர­வேற்­ற­னர். நடப்பு சம்­பி­யன் சிஎஸ்கே அணி­யி­னர் டோனி தலை­மை­யில் கள­மி­றங்­கி­ய­போது, ரசி­கர்­கள் உற்­சா­கத்­தில் திளைத்­த­னர் கோச­மிட்­ட­னர். ஏறக்­கு­றைய 32 ஆயி­ரத்து 405 ரசி­கர்­கள் மைதா­னத்­தில் போட்­டியை கண்டு ரசித்­த­னர்.

சாஹர் முத­லா­வது பந்­துப் பரி­மாற்­றத்­தைக் கட்­டுக்­கோப்­பாக வீசி­னார். தாக்­கூர் வீசிய 2ஆவது பந்­துப் பரி­மாற்­றத்­தில் சர்மா ஆறு ஓட்­டம் அடித்து ரசி­கர்­களை குசிப்­ப­டுத்­தி­னார். சாஹர் வீசிய 3ஆவது பந்­துப் பரி­மாற்­றத்­தில் டீ கொக் 3 ஆறு ஓட்­டங்­களை விளாசி ரன்­ரேட்டை எகி­றச் செய்­தார். அதி­ரடி ஆட்­டத்­தால் மிரண்­டது சென்னை.
டோனி பந்து வீச்­சில் மாற்­றம் செய்­தார். ஹர்­ப­ஜனை அழைத்­தார்.

ஹர்­ப­ஜன் பந்­துப் பரி­மாற்­றத்­தில் ரோஹித் சர்மா நான்கு ஓட்­டம் அடித்­தார். 5ஆவது பந்­துப் பரி­மாற்­றத்தை தாக்­கூர் வீசி­னார். 4ஆவது பந்­தில் லெக் திசை­யில் டீகொக் ஆறு ஓட்­டம் விளா­சி­னார். ஆனால் அடுத்­த­பந்து ஷேhர்ட் பிட்­சாக வந்­தது. இதை சரி­யாக கணிக்­கத் தவறி டீகொக் அடித்­த­தால் அது டோனி­யி­டம் தஞ்­சம் புகுந்­தது. டீகொக் 29 ஓட்­டங்­க­ளில் ஆட்­ட­மி­ழந்­தார். டீ கொக்கை ஆட்­ட­மி­ழக்­கச் செய்­த­போது, தாக்­கூர் அவரை வெளியே போகு­மாறு செய்கை செய்­தார். இது ஐபி­எல் விதி­மு­றை­யின்­படி தவ­றா­கும்.

அடுத்து சூர்­ய­கு­மார் யாதவ் வந்து, சர்­மா­வு­டன் சேர்ந்­தார். சாஹர் வீசிய 6ஆவது பந்­துப் பரி­மாற்­றத்­தின் 2ஆவது பந்­தில் டோனி­யி­டம் பிடி கொடுத்து 15 ஓட்­டங்­க­ளில் ரோஹித் சர்மா நடை­யைக் கட்­டி­னார். இந்­தப் பந்து பரி­மாற்­றத்தை ஓட்­ட­மற்ற பந்­துப் பரி­மாற்­ற­மாக சாஹர் வீசி­னார்.

ரோஹித் சர்­மாவை ஆட்­ட­மி­ழக்­கச் செய்­த­போது, டோனி ஐபி­எல் போட்­டி­யில் புதிய சாத­னையை எட்­டி­னார். ஐபி­எல் போட்­டி­யில் இது­வரை 132 பிடி­களை எடுத்து டோனி சாதனை படைத்­துள்­ளார். இதற்கு முன்­னர் தினேஷ; கார்த்­திக் 131 பிடி­களை எடுத்­தி­ருந்த நிலை­யில், அதை டோனி முறி­ய­டித்­துள்­ளார். ‘பவர்ப்ளே’ முடி­வில் 2 இலக்­கு­கள் இழப்­புக்கு 42 ஓட்­டங்­கள்­கள் சேர்த்­தி­ருந்­தது மும்பை இந்­தி­யன்ஸ் அணி.

இசான் கிசன், சூர்­ய­கு­மார் யாதவ் நிதா­ன­மாக துடுப்­பெ­டுத்­தா­டி­னர். பிராவோ வீசிய 10ஆவது பந்­துப் பரி­மாற்­றத்­தில் இசான் கிசான் 2 நான்கு ஓட்­டங்­களை விளா­சி­னார். ஹர்­ப­ஜன் வீசிய 11ஆவது பந்­துப் பரி­மாற்­றத்­தில் யாதவ், கிசான் தலா ஒரு நான்கு ஓட்­டங்­களை அடித்­த­னர். 12ஆவது பந்­துப் பரி­மாற்­றத்தை இம்­ரான் தாஹீர் வீசி­னார்.

அவ­ரின் 2ஆவது பந்­தில் சூர்­ய­கு­மார் யாதவ் 15 ஓட்­டங்­கள் சேர்த்­தி­ருந்த நிலை­யில், பந்து நேர­டி­யா­கத் தாக்­கி­ய­தில் ஆட்­ட­மி­ழந்­தார். அடுத்து குர்­னால் பாண்­டியா வந்­தார். மீண்­டும் தாக்­கூர் பந்­து­வீச அழைக்­கப்­பட்­டார். 13ஆவது பந்து பரி­மாற்­றத்தை தாக்­கூர் வீசி­னார். 7 ஓட்­டங்­கள் சேர்த்த நிலை­யில், குர்­னால் பாண்­டியா அடித்த பந்தை தாக்­கூர் பிடித்து ஆட்­ட­மி­ழக்­கச் செய்­தார்.

அடுத்து வந்த பொலார்ட், கிசா­னு­டன் சேர்ந்­தார். தாஹீர் வீசிய 15ஆவது பந்­துப் பரி­மாற்­றத்­தின் முதல் பந்­தில் பொலார்ட் ஆறு ஓட்­டம் அடித்­தார். அந்­தப் பந்து பரி­மாற்­றத்­தின் 5ஆவது பந்­தில் இசான் கிசான் ரெய்­னா­வி­டம் பிடி கொடுத்து 23 ஓட்­டங்­க­ளில் வெளி­யே­றி­னார்.

82 ஓட்­டங்­க­ளுக்கு 3-வது விக்­கெட்டை இழந்த மும்பை அணி, அடுத்து 19 ஓட்­டங்­க­ளுக்கு 3 இலக்­கு­களை இழந்­தது. தாக்­கூர் வீசிய 18ஆவது பந்­துப் பரி­மாற்­றத்­தில் ஹர்­திக், பொலார்ட் தலா ஒரு ஆறு ஓட்­டம் விளா­சி­னர். 19ஆவது பந்­துப் பரி­மாற்­றத்தை தீபக் சாஹர் வீசி­னார். 16 ஓட்­டங்­கள் சேர்த்த நிலை­யில், ஹர்­திக் பாண்­டியா எல்­பி­ட­பிள்யு முறை­யில் வெளி­யே­றி­னார்.

அடுத்து வந்த ராகுல் சாஹர் ஓட்­டம் எது­வும் எடுக்­கா­மல் டூப்­பி­ள­சி­ஸி­டம் பிடி கொடுத்து ஆட்­ட­மி­ழந்­தார். அடுத்து மெக்­ல­ன­ஹன் கள­மி­றங்­கி­னார். கடைசி பந்­துப் பரி­மாற்­றத்தை பிராவோ வீசி­னார். முதல் மூன்று பந்­து­கள் டொட் பந்­து­க­ளா­க­வும் பிராவோ வீசி­னார். 4ஆவது பந்­தில் மெக்­ல­ன­ஹன் டக்­அ­வுட்­டில் ரன் அவுட்­டா­கி­னார். கடைசி இரு பந்­து­க­ளில் பொலார்ட் இரு நான்கு ஓட்­டங்­கள் அடிக்க ஆட்­டம் முடி­வுக்கு வந்­தது.

கடைசி இரு பந்­துப் பரி­மாற்­றங்­க­ளில் 3 நான்கு ஓட்­டங்­கள், 3 இலக்­கு­கள் வீழ்ந்­தன. 20 பந்­துப் பரி­மாற்­றங்­கள் முடி­வில் மும்பை இந்­தி­யன்ஸ் அணி 20 பந்­துப் பரி­மாற்ங்­க­ளில் 8 இலக்­கு­கள் இழப்­புக்கு 149 ஓட்­டங்­கள் சேர்த்­தது. பொலார்ட் 46 ஓட்­டங்­க­ளில் இறு­தி­வரை ஆட்­ட­மி­ழக்­கா­மல் இருந்­தார். சிஎஸ்கே தரப்­பில் சாஹர் 3 இலக்­கு­க­ளை­யும், தாக்­கூர், இம்­ரான் தாஹிர் தலா 2 இலக்­கு­க­ளை­யும் வீழ்த்­தி­னர்.

150 ஓட்­டங்­களை விரட்ட டூபி­ளெ­சிஸ், வொட்­சன் ஜோடி கள­மி­றங்­கி­யது. இறுதி ஆட்­டத்­துக்­காக கொண்டு வரப்­பட்ட மெக்­லே­னே­கன் முதல் பந்­துப் பரி­மாற்­றத்தை வீசி­னார். மூன்­றா­வது பந்­தில் நான்கு ஓட்­டத்தை அடித்­தார் பிளெ­சிஸ். குர்­னால் பாண்­டி­யா­வின் அடுத்த பந்­துப் பரி­மாற்­றத்­தில் ஒரு நான்கு ஓட்­டம் அடிக்­கப்­பட்­டது. மந்­த­மாக ஆரம்­பித்­தா­லும் நான்­கா­வது பந்­துப் பரி­மாற்­றத்தை குர்­னால் பாண்­டியா வீச வெழுத்து வாங்­கி­னார் பிளெ­சிஸ். இரண்டு நான்கு ஓட்­டங்­கள், ஓர் ஆறு ஆட்­டம் என்று விளா­சி­ய­வர் இறு­திப் பந்­தில் டீகொக்­கி­டம் பிடி­கொ­டுத்து 26 ஓட்­டங்­க­ளு­டன் வெளி­யே­றி­னார். 33 ஓட்­டங்­க­ளில் சென்­னை­யின் முத­லா­வது இலக்கு வீழ்த்­தப்­பட்­டது.

தொடர்ந்து ரெய்னா நுழைந்­தார். மலிங்க ஆறா­வது பந்­துப் பரி­மாற்­றதை வீசி­னார். வொட்­சன் 2 நான்கு ஓட்­டங்­கள், ஆறு ஓட்­டம் அதி­ர­டி­யாக அடிக்க பவர் பிளே முடி­வில் 53 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. ரெய்னா சொதப்­பி­னார். 14 பந்­து­க­ளில் 8 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார். இதன் பின்­னர் சென்னை அணி ஆட்­டம் காணத் தொடங்­கி­யது.
தொடர் முழு­வ­தும் சிறப்­பாக ஆடிய ராயுடு வந்த வேகத்­தில் வெளி­யே­றி­னார். டோனி நுழைந்­தார். அவ­ரும் துர­திஷ;டவ­ச­மாக ரன்­அ­வுட்­டாக சென்­னை­யின் ஆர­வா­ரம் அடங்­கி­யது. 82 ஓட்­டங்­க­ளுக்கு 4 இலக்­கு­களை இழந்து தடு­மா­றி­யது.

இதன் பின்­னர் பிராவோ, வொட்­சன் இணை ஆட்­டத்தை நகர்த்­தி­யது. இலக்கு இழப்­பு­க­ளி­லி­ருந்து மெது­வாக அணியை மீட்­டது. 16ஆவது பந்­துப் பரி­மாற்­றத்தை மலிங்க வீசி, தாண்­ட­வம் ஆடி­னார் வொட்­சன். 20 ஓட்­டங்­களை அதி­ர­டி­யா­கப் பெற்று வெற்றி வாய்ப்பை தக்­க­வைத்­தது. குர்­னால் பாண்­டியா வீசிய 18 ஆவது பந்­துப் பரி­மாற்­றத்­தில் வொட்­சன் அடுத்­த­டுத்து 3 ஆறு ஓட்­டங்­கள் விளாசி வெற்­றியை நோக்கி நகர்த்­தி­னார். அடுத்த பந்­துப் பரி­மாற்­றத்­தில் பிராவோ ஆட்­ட­மி­ழக்க ஆட்­டம் மீண்­டும் தடு­மா­றி­யது.

இறு­திப் பந்­துப் பரி­மாற்­றத்­தில் 9 ஓட்­டங்­கள் சென்­னை­யின் வெற்­றிக் தேவை என்ற நிலை­யில், மலிங்­கவை பந்து வீச அழைத்­தார் ரோகித். மலிங்­க­வுக்கு கொடுத்த பொறுப்பை அவர் சிறப்­பாக நிறை­வேற்­றி­னார். வொட்­சனை 59 பந்­து­க­ளில் 80 ஓட்­டங்­க­ளு­டன் ரன் அவுட்­டில் வெளி­யேற்றி ஆட்­டத்தை தமது பக்­கம் கொண்டு வந்­தது மும்பை. இறு­திப் பந்­தில் இரண்டு ஆட்­டங்­கள் பெற்­றால் வெற்றி என்ற நிலை­யில் இறு­திப் பந்­தில் மலிங்க இறுதி இலக்கை சரிக்க, மும்பை ஓர் ஓட்­டத்­தால் வெற்றி பெற்­றது.

இந்த ஐபி­எல் தொட­ரில் நான்கு தட­வை­கள் மும்­பையை சந்­தித்த சென்னை, நான்கு ஆட்­டங்­க­ளி­லும் தோல்­வி­யையே சந்­தித்­துள்­ளது.

You might also like