நாவற்­கு­ழி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரால் – காணா­மல் ஆக்­கப்­பட்­டோர் இரா­ணுவ முகா­மில் இல்லை!!

நாவற்­கு­ழி­யில் காணா­மல் ஆக்­கப்­பட்ட எவ­ரும் எந்த இரா­ணுவ முகா­மி­லும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தனை என்­னால் உறு­தி­யா­கக் கூற முடி­யும் என்று சட்­டமா அதி­பர் திணைக்­கள பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி செய்த்­திய குண­சே­கர தெரி­வித்­தார். இதே கருத்தை இரா­ணு­வத்­தி­னர் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­யும் தெரி­வித்­தார்.

நாவற்­குழி பகு­தி­யில் அமைந்­தி­ருந்த இரா­ணுவ முகாம் அதி­கா­ரி­யால் கைது செய்­யப்­பட்டு பின்­னர் காணா­மல் ஆக்­கப்­பட்ட 24 இளை­ஞர்­கள் தொடர்­பி­லான ஆள்­கொ­ணர்வு மனு மீதான விசா­ரணை யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்­றில் நீதி­பதி மா. இளஞ்­செ­ழி­யன் முன்­னி­லை­யில் நேற்று நடை­பெற்­றது.

மனு­தார்­கள் சார்­பில் மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­கள், “மனு­தா­ரர்­கள் இன்­றும் தமது உற­வு­கள் இரா­ணுவ தடுப்பு முகாம்­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்டு உள்­ள­னர் என்று நம்­பு­கின்­ற­னர். நாவற்­குழி இரா­ணுவ முகாம் இரா­ணு­வத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்ட ஒரு­வரை தாம் கண்­டோம் என்று அவ­ரது உற­வி­னர்­க­ளி­டம் சிலர் கூறி உள்­ள­னர். துர­திஸ்ட வச­மா­கக் குறித்த உற­வி­னர் கடந்த நான்கு மாதங்­க­ளுக்கு முன்­னர் இயற்கை எய்தி விட்­டார்” என்று மன்­றில் தெரி­வித்­த­னர்.

அதன்­போது, “நாவற்­குழி முகாம் இரா­ணு­வத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்டு காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் என்று எவ­ரும் இல்லை. நாங்­கள் தமிழ் மக்­க­ளுக்கு எதி­ரா­ன­வர்­கள் அல்ல. எனக்­குக் கிடைத்த தக­வ­லின் பிர­கா­ரம் நாவற்­குழி இரா­ணு­வத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்ட எவ­ரும் இரா­ணுவ முகாம்­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­ப­தனை உறு­தி­யாக கூற­மு­டி­யும்.

அவ்­வாறு எவ­ரே­னும் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­தால் அவர்­களை மீட்டு அவர்­க­ளின் அடிப்­படை உரிமை மீறப்­பட்­ட­மைக்கு எதி­ராக இந்த நீதி­மன்­றில் வழக்கு தாக்­கல் செய்து நட­வ­டிக்கை எடுப்­பேன” – என்று தெரி­வித்­தார்.

இரா­ணு­வம் சார்பு
சட்­டத்­த­ர­ணி­யும்
மறுத்­து­ரைப்பு
இதே­வேளை, “நாவற்­கு­ழி­யில் இரா­ணு­வத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்ட எவ­ரும் இரா­ணுவ தடுப்பு முகாம்­க­ளில் இல்லை” என்று இரா­ணு­வத்­தி­னர் சார்­பில் மேல்­நீ­தி­மன்­றில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி தெரி­வித்­தார்.

“நாவற்­குழி இரா­ணுவ முகாம் இரா­ணு­வத்­தி­ன­ரால் கைது செய்­யப்­பட்­ட­தாக கூறப்­ப­டும் எவ­ரும் இரா­ணுவ தடுப்பு முகாம்­க­ளில் இல்லை. காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் இரா­ணுவ தடுப்பு முகாம்­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்டு உள்­ள­னர் என்று கூறப்­பட்ட சம்­ப­வத்­தின் உண்மை தன்­மை­களை அறி­வ­தற்­காக ஐ.நா பிர­தி­நி­தி­கள் இரா­ணுவ முகாம்­கள் பல­வற்­றில் சோத­னை­யிட்­ட­னர்.

அதன்­போது இரா­ணுவ முகாம்­க­ளில் தடுத்து வைக்­கப்­பட்டு இருந்­தார்­கள் என்று எவ­ரும் கண்­டு­பி­டிக்­கப்­ப­ட­வில்லை. எனவே இரா­ணுவ முகாம்­க­ளில் எவ­ரும் தடுத்து வைக்­கப்­ப­ட­வில்லை என்­ப­தனை உறு­தி­யாக கூற முடி­யும்” என்று சட்­டத்­த­ரணி தெரி­வித்­தார்.

கால­தா­ம­தம் ஆகி­ய­தால்
தள்­ளு­படி செய்­ய­ வேண்­டும்

“நீண்ட கால தாம­தத்­துக்­குப் பின்­னர் குறித்த மனு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ள­தால் அத­னைத் தள்­ளு­படி செய்ய வேண்­டும்” என்று மன்­றா­டி­யார் அதி­பதி செய்த்­திய குண­சே­கர கோரி­னார்.

“நாட்­டில் கடந்த காலங்­க­ளில் ஏற்­பட்­டி­ருந்த சூழ் நிலை­கா­ர­ண­மாக – அச்­சத்­தால்­தான் மனு தாக்­கல் செய்­ய­வில்லை. தற்­போ­தைய நிலை­யில் அத­னைத் தாக்­கல் செய்­துள்­ளோம். மனு­தா­ரர்­கள் அச்­சம் கார­ண­மாக மனுத்­தாக்­கல் செய்ய பின்­நின்ற போதி­லும் குறித்த மனு மீதான விசா­ர­ணையை யாழ்ப்­பாண மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி நடத்­து­வார் என்ற நம்­பிக்­கை­யில்­தான் தற்­போது மனுத் தாக்­கல் செய்ய முன்­வந்­தார்­கள்” என்று மனு­தா­ரர்­கள் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ர­ணி­கள் தெரி­வித்­த­னர்.

மன்­றா­டி­யா­ரின்
தவ­றான கருத்து

“ஆள்­கொ­ணர்வு மனு­வு­டன் அணைக்­கப்­பட்­டுள்ள ஆவ­ணங்­க­ளில் , சாவ­கச்­சேரி பிர­தேச செய­லா­ள­ரால் வழங்­கப்­பட்­ட­தாக கூறப்­ப­டும் ஆவ­ணம் பொய்­யா­னது. அனைத்து ஆவ­ணங்­க­ளும் அதன் உண்மை பிரதி இணைக்­கப்­ப­டா­மல் பிர­தி­கள் மாத்­தி­ரமே இணைக்­கப்­பட்­டுள்­ளன” என்று மன்­றா­டி­யார் அதி­பதி செய்த்­திய குண­சே­கர மன்­றில் தெரி­வித்­தி­ருந்­தார்.

அது தொடர்­பில், வழக்கு நிறை­வ­டைந்த பின்­னர் மனு­தா­ரர் சார்­பில் முன்­னி­லை­யான சட்­டத்­த­ரணி சுபா­ஜினி கிஷோ­ரி­டம் ஊட­க­வி­ய­லா­ளர்­கள் கேள்வி எழுப்­பி­னர்.

“சாவ­கச்­சேரி பிர­தேச செய­லா­ள­ரால் வழங்­கப்­பட்ட ஆவ­ணம் பொய்­யா­னது என்று பிரதி மன்­றா­டி­யார் அதி­பதி கூறி­யுள்­ளார். அந்­தக் காலப் பகு­தி­யில் பிர­தேச செய­லா­ள­ரா­கக் கட­மை­யாற்­றிய சுந்­த­ரம்­பிள்ளை தற்­போ­தும் இருக்­கி­றார். குறித்த ஆவ­ணம் உண்­மை­யா­னது என்­ப­தனை நிரூ­பிக்­கும் வகை­யில் அவ­ரி­டம் சத்­தி­யக் கட­தாசி வாங்க உள்­ளோம். மனு­வு­டன் அணைக்­கப்­பட்ட ஆவ­ணங்­க­ளின் உண்மை பிர­தி­கள் எம்­மி­டம் உள்­ளன. அவற்­றை­யும் மனு­வு­டன் இணைக்­க­வுள்­ளோம்” என்று மனு­தா­ரர் சார்பு சட்­டத்­த­ரணி மேலும் தெரி­வித்­தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close
Close