நிதி திரும்­பிச் செல்­வ­தற்கு நாம் எது­வும் செய்ய முடி­யாது – அவைத் தலை­வர் சி.வி.கே.!!

0 21

சங்­கி­லி­யன் தோப்பு, மந்­தி­ரி­மனை, ஐமுனா ஏரிக்­கு­ளம் போன்­றவை உலக வங்­கி­யின் தந்­தி­ரோ­பாய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தில் புரா­தனச் சின்­னங்­க­ளைப் பாது­காக்­கும் திட்­டத்­தில் உள்­வாங்­கப்­பட்­டது. இவற்­றைச் சுவீ­க­ரிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­யில் பல இடர்­பா­டு­கள் இருப்­ப­தால் இந்­தத் திட்­டத்­துக்கு ஒதுக்­கப்­பட்ட நிதி திரும்­பிச் செல்­லும் நிலமை ஏற்­பட்­டுள்­ளது.

வடக்கு மாகாண சபை­யின் அமர்வு நேற்று இடம்­பெற்­றது. ஆளும் கட்சி உறுப்­பி­னர் இ.ஜெய­சே­க­ரன், வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ் வ­ர­னி­டம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.

‘யாழ்ப்­பா­ணம் புரா­தன நல்­லூர் இராசதா­னி­யில் அமைந்­துள்ள சங்­கி­லி­யன் தோப்பு, மந்­தி­ரி­மனை, ஜமுனா ஏரிக்­கு­ளம் போன்ற வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க இடங்­களை மறு­சீ­ர­மைத்து, அபி­வி­ருத்தி செய்து எமது புரா­தன இடங்­க­ளைப் பாது­காப்­ப­தற்கு உலக வங்­கி­யின் தந்­தி­ரோ­பாய அபி­வி­ருத்­தித் திட்­டத்­தில் உள்­வாங்­கப்­பட்­டன.

ஆனால் அந்­தக் காணி உரி­மம் தொடர்­பாக சர்ச்சை இருப்­ப­த­னால் அந்­தக் காணி­யைச் சுவீ­க­ரிப்­புச் செய்­வ­தற்­காக கொழும்பு அர­சின் காணி அமைச்­சுக்கு முத­ல­மைச்­சர் அமைச்­சி­னால் முயற்­சி­கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தாக நான் அறி­கின்­றேன்.

அந்­தக் காணி சுவீ­க­ரிப்­புத் தொடர்­பான தற்­போ­தைய நிலைப்­பாடு என்ன?, முத­ல­மைச்­சர் அமைச்­சி­னால் தொடர் நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டதா?, அந்­தக் காணி சுவீ­க­ரிக்­கப்­ப­டாத பட்­சத்­தில் உலக வங்­கி­யி­னால் ஒதுக்­கப்­பட்ட நிதி­ தி­ரும்­பிச் செல்­வ­தற்­கான வாய்ப்­புக்­கள் ஏற்­ப­டும்.

எமது வர­லாற்­றுச் சின்­னங்­கள் அழி­வ­டை­யக் கூடிய துர்ப்­பாக்­கிய நிலை ஏற்­ப­டும். இந்த விட­யத்­தில் முத­ல­மைச்­ச­ரு­டைய அமைச்சு விரைந்து செயற்­ப­ட­வேண்­டும்’ என்று ஜெய­சே­க­ரன் கேள்வி முன்­வைத்­தி­ருந்­தார்.

2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி காணி சுவீ­க­ரி ப்­புக்­கான அறி­வு­றுத்­தல் கொழும்பு அர­சின் அமைச்­சுக்கு அனுப்­பப்­பட்­ட­தா­கத் தெரி­வித்­தார். தொடர் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் குறிப்­பிட்­டார்.

இந்த விட­யம் தொடர்­பில் கருத்­துத் தெரி­வித்த அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம், அந்­தப் பகு­தி­யில் மிகக் குறு­கிய தூரத்­தில் இருப்­ப­வன் நான். இந்த விட­யங்­களை மாந­கர சபை அதி­கா­ரி­யாக இருந்து கையாண்­டி­ருக்­கின்­றேன். இந்­தக் காணி­கள் தனி­யார் காணி­க­ளைச் சுவீ­க­ரிப்­பது போன்று சுவீ­க­ரிக்க முடி­யாது. காணி­கள் நம்­பிக்­கைப் பொறுப்­புச் சபைக்கு உரி­யது.

நம்­பிக்­கைப் பொறுப்­புச் சபை­யின் உரி­மை­யா­ளர்­கள் என்று சொல்­லிக் கொள்­ப­வர்­க­ளுக்­கும் இன்­னொரு தரப்­புக்­கும் இடை­யில் நீதி­மன்­றில் வழக்கு நிலு­வை­யில் இருக்­கின்­றது. இப்­ப­டி­யொரு சூழ­லில் இதனை இல­கு­வாக்க தீர்க்க முடி­யாது என்று கூறி­னார்.

‘இந்­தத் திட்­டத்தை முன்­னெ­டுக்க முன்­னர் யாழ்ப்­பாண மாவட்­டச் செய­ல­கத்­தில், மாவட்­டச் செய­லர் தலை­மை­யில் கலந்­து­ரை­யா­டல் நடந்­தது. துறை­சார் அதி­கா­ரி­கள் கலந்து கொண்­ட­னர். அவர்­க­ளுக்கு சில­வேளை இந்த விட­யங்­கள் தெரி­யா­மல் இருந்­தி­ருக்­க­லாம்’ என்று ஜெய­சே­க­ரன் கூறி­னார்.

அவர்­க­ளுக்கு தெரி­யா­மல் இருந்­தற்கு நாங்­கள் ஒன்­றும் செய்ய முடி­யாது. அவர்­க­ளுக்கு தெரி­யாது என்­றால் ஏன் செய்­தார்­கள்? என்று அவைத் தலை­வர் கேள்வி எழுப்­பி­னார்.
நீங்­கள் சொல்­வ­தைப் பார்த்­தால் இந்­தத் திட்­டம் நடை­பெ­றாது போல் இருக்­கின்­றது என்று கேள்­வியை முன்­வைத்த உறுப்­பி­னர் ஜெய­சே­கர் கூற, அதற்கு நான் ஒன்­றும் செய்ய முடி­யாது என்று பதி­ல­ளித்­தார் அவைத் தலை­வர் சி.வி.கே.சிவ­ஞா­னம்.

You might also like