நீதிமன்றில் உயிரிழந்தார் முன்னாள் ஜனாதிபதி!!

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி முகம்மது மோர்சி வழக்கு விசாரணை நீதிமன்றில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, அங்கு வீழ்ந்து உயிரிழந்தார்.

ஜனாதிபதி மாளிகையின் முன்பு போராட்டம் நடத்தியவர்களைக் கொன்ற குற்றத்துக்காக முகமது மோர்சிக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் வழக்கு விசாரணையின் போதே அவர் மயங்கி வீழந்து உயிரிழந்துள்ளா்.

அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முகம்மது மோர்சி கொலை செய்யப்பட்டுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

You might also like