நீதி ஒரு நாளும் போராடாமல் வராது- மனித உரிமை ஆர்வலர் ஷ்றீன் அப்துல் சரூருடன் ஒரு சந்திப்பு- காயா!!

காயா: – இறு­திப்­போர்க்­குற்­றம் சார்ந்த ஐ.நா.விவ­கா­ரங்­க­ளு­டன் அதி­க­ளவு பரீட்­ச­யம் உள்­ள­வர் நீங்­கள். அந்த அடிப்­ப­டை­யில் , முள்­ளி­வாய்க்­கா­ லில் இரா­ணு­வம் நிகழ்த்­திய கொலை­களை, இனப்­ப­டு­கொலை என்று நிறு­வு­வ­தி­லி­ருக்­கின்ற சிக்­கல்­கள் பற்­றிச் சொல்­லுங்­கள்?

சரூர்: – முள்­ளி­வாய்க்­கா­லில் இரா­ணு­வம் இனப்­ப­டு­கொலை செய்­தது உண்மை. அதைப் பன்­னா­டு­க­ளுக்­குக் கொண்­டு ­சேர்க்­கத்­தான் இந்த முப்­ப­தின் கீழ் ஒன்று என்­பது ஐக்­கிய நாடு­கள் சபை­யில் கொண்­டு­வ­ரப்­பட்­டது. முள்­ளி­வாய்க்­கா­லில் நடந்­தது போர். அந்­தப்­போ­ரில் இரண்டு தரப்­பு­க­ளும் சண்டை பிடிக்­கும்­போது எங்கு போர்க்­குற்­றம் நடந்­தி­ருக்­கும் என்று பார்த்­தால், நிறைய இடங்­க­ளில் நடந்­தி­ருக்­கி­றது. மக்­களை ஓர் இடத்­துக்கு வரச்­சொல்­லி­விட்டு, பாது­காப்பு வல­யத்­துக்­குள் வரச் சொல்­லி­விட்டு, தாங்­கள் அதற்­குள் தாக்­கு­தல் நடத்த மாட்­டோம் என்­று­விட்டு, ‘பொக்ஸ்’ பண்­ணிப்­போட்டு மக்­கள் மீது குண்­டு­களை வீசிக் கொன்­றது… மருத்­து­வ­ம­னைகள் மீது குண்டு வீசி­யது… காயப்­பட்­ட­வர்­க­ளைக் கொன்­றது… சர­ண­டைந்­த­வர்­க­ளைக் கொன்­றது… இப்­ப­டிப் பல­வி­த­மான மனி­த­நே­யக் குற்­றங்­களை இலங்கை இரா­ணு­வம் செய்­தி­ருக்­கி­றது. அது எங்­கள் எல்­லோ­ருக்­கும் தெரிந்த விட­யம். அதை மூடி மறைக்க இய­லாது. ஏனென்று சொன்­னால், பன்­னாட்டு ரீதி­யாக அது தொடர்­பாக ஒரு விசா­ரணை நடந்­துள்­ளது. நிறைய ஆவ­ணப்­ப­டுத்­தல்­கள் நடந்­தி­ருக்­கின்­றன. ஏதோ ஒரு விதத்­தில்… ஒரு காலப்­ப­கு­தி­யில் அதற்­குப் பொறுப்­புக்­கூ­ற ­வேண்­டிய கட்­டா­யம் இலங்­கைக்கு வரும். அது எப்­பிடி வரும் என்று சொன்­னால், இந்த நாட்டு ஆட்­சி­யா­ளர்­கள் ஒரு­வ­ருக்­கும் தங்­கட இரா­ணு­வத்­தைக் காட்­டிக் கொடுக்­கிற… இரா­ணு­வம் பிழை செய்­தது என்­பதை ஏற்­றுக்­கொள்­ளு­கிற… தன்மை எந்­த­வொரு பெரும்­பான்­மைத் தலை­வ­ருக்­கும் இல்லை. இப்ப இருக்­கிற தலை­வ­ருக்­கும் இல்லை. ஆத­லால், பன்­னாட்டு ரீதி­யா­கத்­தான் இந்த நாட்­டில் இரா­ணு­வத்­தைப் பொறுப்­புக்­கூற வைக்­க­வே­ணும். அதற்­குத்­தான் முப்­ப­தின் கீழ் ஒன்று என்­கிற சிறப்பு நீதி­மன்­றம் என்று ஒன்று இருக்­கி­றது. அந்த நீதி­மன்­றத்­தில் இரா­ணு­வத்­தைக் கொண்­டு­போய் விசா­ரிக்­கி­றது. உள்­நாட்­டில அது வர­வில்லை என்று சொன்­னால், வெளி­நாட்­டில அதை அமைப்­ப­தற்கு நாங்­கள் வேலை செய்­ய­வேண்­டும். மனித உரிமை சம்­பந்­தமா வேலை செய்­கின்­ற­வர்­கள் என்­ற­ப­டி­யால், நாங்­கள் பன்­னாட்டு ரீதி­யாக இலங்கை இரா­ணு­வத்தை இந்த மனி­த­நே­யத்­துக்­கும், மனித குலத்­துக்­கும் எதி­ரா­கச் செய்த குற்­றங்­க­ளுக்கு வகைப்­பொ­றுப்­புக் கூற வைக்­க­வேண்­டும். அதற்­கு­ரிய ஆவ­ணப்­ப­டுத்­தல்­கள் எல்­லாம் வெளி­யில் நடந்­தி­ருக்­கின்­றன. ‘சனல்-1’ இதற்கு ஒரு நல்ல உதா­ர­ணம். சோ… நிறைய ஆவ­ணங்­க­ளும் ஆதா­ரங்­க­ளும் பன்­னாட்டு ரீதி­யாக இருக்­கின்­றன. ஆனால் உட­ன­டி­யாக இது நடக்­காது… இது காலம் தாழ்த்­தித்­தான் வரும்.  நாங்­கள் விரும்­பியோ விரும்­பா­மலோ மற்ற மற்ற நாடு­க­ளிலை எல்­லாம் இப்­படி இரா­ணு­வத்­தால செய்­யப்­பட்ட பெரி­ய­ அள­வி­லான கொலை­கள், குற்­றங்­கள் என்று சொன்­னால் பத்து, இரு­பது வரு­டங்­க­ளுக்­குப் பிற­கு­தான் தண்­ட­னை­கள், தீர்­வு­கள் வழங்­கப்­பட்­டி­ருக்­கின்­றன. ஆர்­ஜென்­ரீனா, பெரு, கம்­போ­டியா என்­கிற நாடு­க­ளி­லும் கம­ரூச் இயக்­கம் சம்­பந்­த­மான குற்­ற­வி­யல் மன்­றம் எல்­லா­வற்­றுக்­கும் தீர்வு கிடைப்­ப­தற்­குப் பதி­னெட்டு, இரு­பது வரு­ட­கா­லங்­கள் எடுத்­துள்­ளன. குற்­றம் நடந்­தது உண்மை. குற்­றத்­துக்கு நீதி கிடைக்­கும். அந்த நீதி எப்­ப­வும் தாம­த­மா­கத்­தான் கிடைக்­கும். அது­வும் இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் பன்­னாட்டு ரீதி­யா­கத்­தான் தீர்வு வரும்.

வெளி­நாட்­டுப் பொறி­மு­றையை
தொடர்ந்து மறுக்­கி­றார் மைத்­திரி

காயா: – ஐக்கிய நாடு­கள்சபையின் தீர்­மா­னத்தை இலங்கை அரசு கால நீடிப்­பு­டன் இணை அனுச­ரணை வழங்கி ஏற்­றுக் கொண்­டது. அந்­தத் தீர்­மா­னங்­களை நிறை­வேற்­று­வ­தான ‘அர­சி­யல் விருப்­பம்’ அர­சி­டம் இருப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை. அரசு ஐ.நா தீர்­மா­னத்­தின் பரிந்­து­ரை­களை நிறை­வேற்­றும் என்று நீங்­கள் நம்­பு­கி­றீர்­களா?

சரூர்: – நான் இதற்கு முன்­பும் பல தட­வை­கள் சொல்­லி­யி­ருக்­கி­றேன்… இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் இந்த ஐக்­கிய நாடு­கள் சபை­யு­டன் இலங்கை அரசு பொருந்­திக்­கொண்ட முப்­ப­தின் கீழ் ஒன்­றின் கீழ் என்­னைப் பொறுத்­த­ள­வில் ஓர் இல­கு­வான பொறி­மு­றை­தான் இந்­தக் காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்­கான அலு­வல­கம். 2016ஆம் ஆண்டு ஓகஸ்ட்மாதம் சட்­டத்­தைக் கொண்டு வந்­து­விட்டு, அதை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­குக் கிட்­டத்­தட்ட 18, 20 மாதங்­கள் சென்­றன. அதற்கு மூல கார­ணம் தற்­போ­தைய அரச தலை­வர். அவர் முன்­னுக்­குப் பின் முர­ணான பல கருத்­துக்­க­ளைச் சொல்லி வரு­கி­றார். முப்­ப­தின் கீழ் ஒன்­றுக்­குக்­கூட. அதன் நீடிப்­புச் சம்­பந்­த­மா­கக் கதைக்­கும்­போது உள்­நாட்­டுப் பொறி­மு­றை­யைப் பற்றி மாத்­தி­ரம் தான் கதைக்­கி­றார். வெளி­நாட்­டுப் பொறி­முறை ஒன்­றும் தேவை­யில்லை என்­று­தான் சொல்­கி­றார். பல சந்­தர்ப்­பங்­க­ளிலை இந்த முப்­ப­தின் கீழ் ஒன்றை அவரே ஏற்­றுக் கொள்­ள­வில்லை. ஆத­லால் இப்­ப­டி­யான நிலை­யில் என்­னைப் பொறுத்­த­ அள­வில் 2020ஆம் ஆண்டு இலங்­கை­யில் அரச தலை­வர் தேர்­தல் ஒன்று நடக்க இருக்­கி­றது. அதற்கு முன்­பாக என்­றால் இந்­தக் காணா­மல் ஆக்­கப்­பட்ட அலு­வ­ல­கம் ஒர­ள­வுக்­குத் தன்­னு­டைய நட­வ­டிக்­கை­க­ளைச் செய்­ய­லாம். அத்­தோடு திருத்­தி­ய­மைப்­பது அல்­லது இழப்­பீடு சம்­பந்­த­மான ஒரு சட்­டம் கொண்­டு­வ­ரப்­பட இட­மி­ருக்­கி­றது. சிறப்பு நீதி­மன்­றம் வராது. அது வரும் என்று என்­னால் உறு­தி­ப­டச் சொல்ல முடி­யாது.

காயா: – குறித்த கால நீடிப்­பால், இலங்கை மீதான பன்­னாட்டு மேற்­பார்­வையை நீட்­சிப்­ப­டுத்­திக் கொள்ள­லாம் என்­கிற குரல்­க­ளைக் கேட்க முடி­கி­றது. இது பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் கோரு­கிற தீர்வு விட­யத்­தில் செல்­வாக்­குச் செலுத்­துமா? எப்­ப­டிச் சாத்­தி­யம்?

சரூர்: – கால நீடிப்பு என்­பது தொடர்ந்து தனது ‘அஜண்டா வில்’ இலங்­கையை வைச்­சுக் கொள்­ள­வே­ணும் என்­கிற நோக்­கில் ஐக்­கிய நாடு­கள் சபை­யால் செய்­யப்­ப­டு­கின்­றது. ஏனென்று சொன்­னால், இலங்­கை­யைப் பொறுத்­த­ அள­வில், முழுக் குற்ற விசா­ரணை… பன்­னாட்­டுக் குற்ற விசா­ரணை நடந்து முடிந்­து­விட்­டது…! அது…? பன்­னாடு சம்­பந்­த­மான ஒரு விசா­ர­ணை­தான். இலங்­கை­யில் இறு­திப்­போ­ரின்­போது என்ன நடந்­தது என்­பது சம்­பந்­த­மான விசா­ரணை. 2002ஆம் ஆண்டு சமா­தா­னப் பேச்­சுக்­கள் முடி­வ­டைந்­த­தி­லி­ருந்து 2012ஆம் ஆண்டு வரை நடந்த மனித உரி­மைமீறல் குற்­றங்­கள் அத்­த­னை­யை­யும் உள்­ள­டக்கி, ஐக்­கிய நாடு­கள் சபை­யால் இலங்கை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக விசா­ரணை செய்­யப்­பட்­டு­ விட்­டது. விசா­ரிக்­கப்­பட்டு, அதை ஆவ­ணப்­ப­டுத்தி, அதி­லை­யி­ருந்­து­தான் இந்த முப்­ப­தின் கீழ் ஒன்று கொண்­டு­வ­ரப்­பட்­டது. அந்த அறிக்­கையை மார்ச் மாதம் சமர்ப்­பிக்க இருந்­தார் சயிட். பிறகு செப்­ரெம்­பர் மாதம் தான் சமர்ப்­பிக்க முடிந்­தது. அது கொஞ்­சம் வீரி­யம் குறைந்­து­தான் வந்­தது. அப்­பிடி வந்­தா­லும் அந்த முப்­ப­தின் கீழ் ஒன்று ஐக்­கிய நாடு­கள் சபை­யால் இலங்கை மீது போடப்­பட்ட பன்­னாட்டு விசா­ர­ணை­யின் பய­னா­கத்­தான் வந்­தது. நாங்­கள் ஏன் கால நீடிப்­புக் கேட்­கி­றோம் என்­றால், இப்ப நாங்­கள்… வாற மார்ச் மாதத்­தில் இருந்து இன்­னொ­ருக்கா ஐக்­கிய நாடு­கள் சபை­யில இலங்­கையை உங்­கட ‘அஜண்டாவில’ வைச்­சுக் கொள்­ளுங்கோ… என்று கேட்­கா­மல் விட்­டால், 2019ஆம் ஆண்டு செப்­ரெம்­பர் மாதத்­தோட இலங்கை அந்த அஜந்­தா­வில இருந்து போயி­டும். அப்­ப­டிப் போச்­சுது என்று சொன்­னால், இன்­னொரு அரசு வந்­தா­லும் இந்த நாட்­டில இருக்­கிற பொது மக்­கள், பாதிக்­கப்­பட்­ட­வர்­கள், திருப்பி ஐக்­கிய நாடு­க­ளுக்­குள் இலங்­கை­யைக் கொண்டு செல்ல…. குறிப்­பாக மனித உரி­மைக் கவுன்­சி­லுக்­குள்ள இலங்­கை­யைக் கொண்­டு­செல்ல முடி­யாது. அதா­வது வைச்ச குறி தப்­பக்­கூ­டாது என்­ப­தற்­கா­கத்­தான் கால நீடிப்பு ஒரு விதத்­தில் கேட்­கப்­ப­டு­கி­றது. ஆனால், அந்­தக் கால நீடிப்­பைக் கொடுக்­கி­ற­தால இன்­னொரு பிரச்­சி­னை­யும் இருக்­கி­றது. அது என்னவென்­றால், இந்த அரசு ஒன்­றும் செய்­யா­மல், தான் வழங்­கிய உத்­த­ர­வா­தங்­கள் எவற்றையும் நிறை­வேற்­றா­மல், இல­கு­வான பொறி­மு­றை­க­ளைக்­கூ­டக் காலம் தாழ்த்­திச் செய்து, பன்­னா­டு­க­ளுக்கு ஒரு கண்­து­டைப்­புக்கு இந்த முப்­ப­தின் கீழ் ஒன்­றைப் பயன்­ப­டுத்­திக் கொள்ளலாம். அதற்­கும் நிறை­யச் சந்­தர்ப்­பங்­கள் உள்­ளன.

கொழும்­பு அர­சால்
நீதி சாத்­தி­ய­மில்லை

காயா: – சரி… நீங்­கள் சொல்­வ­தான கால நீடிப்­பும், இலங்கை அர­சின் இழுத்­த­டிப்பு உத்­தி­யும் கால ஓட்­டத்­தில் தீர்­வைப் பெற்­றுத்­த­ரக்­கூ­டிய சாட்­சி­யங்­களை அழித்­து ­வி­டாதா? அல்­லது சாட்­சி­களை உருக்­கு­லைத்­து­ வி­டாதா?

சரூர்: – இப்ப இந்த நாட்­டில இருக்­கிற அரசு, விரும்­பியோ விரும்­பா­மலோ பன்­னா­டு­க­ளும் சேர்ந்து கொண்­டு­வந்த அரசு. ஏனென்­றால் பத்து வரு­டங்­க­ளாக மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்சி மிக மோச­மான மனித உரிமை மீறல்­களை நிகழ்த்­தி­யது. சட்­டங்­க­ளை­யும் மீறி­யது. 2019ஆம் ஆண்டு வரைக்­கும் இந்த அரசு தான்­கொ­டுத்த உத்­த­ர­வா­தங்­களை நிறை­வேற்­ற­வில்லை என்று சொன்­னால், இனிச் சிறு­பான்மை மக்­கள் இந்த அர­சுக்கு வாக்­க­ளிக்க மாட்­டார்­கள். ஏன் பெரும்­பான்மை மக்­கள் மத்­தி­யிலே? இந்த அரசை விரும்­பி­ய­வர்­கள் இன்று வரை இந்த அரசு ஒன்­றுமே செய்­யா­த­ப­டி­யால், அவர்­க­ளும் வாக்­க­ளிக்­கா­விட்­டால், ஒரு சந்­தர்ப்­பத்­தில 2020ஆம் ஆண்டு காலப்­ப­கு­தி­யில ராஜ­பக்ச மறு­ப­டி­யும் ஆட்சி அமைக்­கின்ற சாத்­தி­யங்­கள் இருக்­கின்­றன. பன்­னா­டு­க­ளுக்கு இதில் ஒரு பய­மி­ருக்­கி­றது. மகிந்த ராஜ­பக்ச வந்­தி­டு­வாரோ என்று. மகிந்த ராஜ­பக்ச அல்­ல­து­அவர் வராதுபோ­னால், அவருடைய குடும்­பத்­தில் எவரா­வது வந்­து­வி­டு­வார்­களோ என்று. அவ­ரால் வர இய­லாது. அவ­ருக்­குக் கீழை எவரா­வது…? அல்­லது அவ­ரு­டைய கட்சி ஆட்சி அமைச்­சுது என்று சொன்­னால், என்ன செய்­யப்­போ­கி­றார்­கள் என்­ப­தற்­குப் பன்­னா­டு­க­ளி­டம் பதில் இல்லை. நான் நிறை­யப் பேரி­டம் இது­பற்­றிக் கேட்­டி­ருக்­கி­றேன். அவர்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன என்­றால், இலங்­கை­யின் இந்த அர­சி­னூ­டாக எப்­ப­டி­யா­வது இந்த நீதிப் பொறி­மு­றை­யைக் கொண்டு வர­வேண்­டும் என்று நினைக்­கி­றார்­கள், ஆனால், என்­னைப் பொறுத்­த­ள­விலை அது ஒரு கானல் நீர். இந்­தச் சிறப்பு நீதி மன்­றம் வந்து சேரு­வது. அப்­படி வந்­தா­லும், அது மிக­வும் வலுக்­கு­றைந்­த­தா­கத்­தான் வரும். ஆனால், நாங்­கள், மனித உரி­மை­கள் சார்ந்து கதைப்­ப­வர்­கள், எங்­கள் எல்­லா­ருக்­கும் தெரிய வேண்­டிய, பர­வ­லாக எல்­லா­ரும் அறிந்­தி­ருக்­க­வேண்­டிய விட­யம், உள்­நாட்­டில் ஏதா­வது நீதிப் பொறி­மு­றை­கள் வரு­கின்­றன என்­றால், அந்­தப் பொறி­மு­றை­க­ளைப் பயன்­ப­டுத்­திக் கொள்­ள­வேண்­டும். பயன்­ப­டுத்தி அவை வலு­வற்­றவை என்­பதை நிறு­வு­தல் வேண்­டும். அந்­தப் பொறி­மு­றை­கள் வலு­வற்­ற­தாக இருந்­தால்­தான், பன்­னா­டு­க­ளுக்கு நாங்­கள் போக­லாம். ஆத­லால், அந்த விதத்­திலை நாங்­கள் கேட்­க­லாம் இந்­தப் பொறி­மு­றை­க­ளைப் பன்­னாட்டு ரீதி­யாக அமை­யுங்­கள் என்று. அதே நேரம் பன்­னாட்டு ரீதி­யா­க­வும் எப்­ப­டிப் பொறுப்­புக்­கூற வைக்­க­வேண்­டும் என்று நாங்­கள் பார்க்க வேண்­டும். அதற்­காக நாங்­கள் ஜெனீ­வா­வில் இருக்­கின்ற முப்­ப­தின் கீழ் ஒன்றை விட்டு வேறு ஒன்­றுக்­குப்­போக வேண்­டும் என்­ப­தில்லை. முப்­ப­தின் கீழ் ஒன்று இருக்­கும்­போதே நாங்­கள் பன்­னாட்டு ரீதி­யாக இருக்­கின்ற வேறு வேறு பொறி­மு­றை­கள் பற்­றி­யும் பார்க்க வேண்­டும். உதா­ர­ண­மாக, அண்­மைக்­கா­லத்­திலை, பிரே­சில் நாட்­டிலை, இலங்கை இரா­ணுத்­தைச் சேர்ந்த ஒரு­வர் தூது­வ­ராக இருந்­தார், பார­தூரமான குற்­றங்­கள் செய்­த­வர். அவர் மீதான குற்­றப் பத்­தி­ரி­கை­கள், அவர் சார்ந்த சில ஆத­ாரங்­களை அந்த நாட்டு நீதி­மன்­றத்­தில் சமர்ப்­பித்­த­ப­டி­யால், அவரை அந்த நாட்­டில் இருக்­கிற நீதி­மன்­றத்­தின் மூலம் தண்­டிக்­க­லாம். ஆனால், அவர் அதற்கு முன்பே இலங்கைக்கு ஓடி வந்­து­விட்­டார். பன்­னாட்டு ரீதி­யாக இருக்­கின்ற சட்­டங்­களை வைத்­துக்­கொண்டு இப்­பி­டி­யான குற்­றங்­க­ளில் ஈடு­பட்­ட­வர்­களை பன்­னா­டு­க­ளில் வைத்து எப்­ப­டித் தண்­டிக்க முடி­யும் என்­ப­தை­யும் கவ­னிக்­க­வேண்­டும். இப்­ப­டிப் பல வித­மாக முயற்­சி­கள் செய்­து­தான் முள்­ளி­வாய்க்­கா­லில் நடந்த குற்­றங்­க­ளுக்­குப் பொறுப்­புச் சொல்ல வைக்க முடி­யும். முப்­ப­தின் கீழ் ஒன்றை மாத்­தி­ரம் நம்­பி­யி­ருக்­கக் கூடாது. இப்­ப­டி­யி­ருக்­கிற பொறி­மு­றை­க­ளை­யும் எப்­ப­டிப் பயன்­ப­டுத்­த­வேண்­டும் என்று ஆராய வேண்­டும். இலங்­கைக்­குப் பன்­னாட்டு ரீதி­யா­கப் போடப்­பட்ட விசா­ரணை ஒரு புதிய வடி­வம். அது இதற்கு முன்னர் எந்த ஒரு நாடு மீதும் போடப்­ப­டாத விசா­ரணை. நவ­நீ­தம்­பிள்­ளை­யால் போடப்­பட்­டது. அவர் வில­கிப் போகும்­போது கொண்­டு­வந்­தது. அது­மா­தி­ரிப் புதி­தாக நாங்­கள் பன்­னாட்டு ரீதி­யாக இலங்­கை­யைப் பொறுப்­புக்­கூற வைக்­கி­ற­துக்கு என்ன செய்­ய­வே­ணும் என்­பது பற்­றிச் சிந்­திக்­க­வேண்­டும். முப்­ப­தின் கீழ் ஒன்­றி­னு­டைய அடித்­த­ளம் தான் இந்­தப் பன்­னாட்டு விசா­ரணை. அந்த அறிக்­கை­யி­லைதான் முள்­ளி­ வாய்க்­கா­லில் என்ன நடந்­தது என்­ப­தெல்­லாம் பதி­யப்­பட்­டி­ருக்­கி­றது, ஆதா­ர­பூர்­வ­மாக…

இலங்கை அர­சுக்கு எதி­ரான
சாட்­சி­யங்­க­ளைப் பாது­காக்க
வழி­கள் ஏரா­ளம் உள்­ளன

காயா: நீங்­கள் சொல்­வ­து­போல சாட்­சி­யங்­கள் அழிந்­து­போ­கா­மல் பேணப்­ப­டு­வது இந்த முப்­ப­தின் கீழ் ஒன்­றில் மாத்­தி­ரம்­தானா அல்­லது சாட்­சி­யங்­க­ளைப் பாது­காக்­கக்­கூ­டிய வேறு வழி­கள் ஏதும் இருக்­கின்­ற­னவா?

சரூர்: – நிறைய இருக்கு. முப்­ப­தின் கீழ் ஒன்று வந்து ஐ.நாவின் பொறி­முறை ஒன்­றுக்­குள்… மனித உரி­மை­க­ளுக்­குள் இருக்­கி­றது. அதே மாதிரி ‘றீற்ரீ பொடி’ என்று சொல்­லு­வோம் நாங்­கள்…(ஐ.நாவு­ட­னான பெரி­ய­ள­வி­லான கைச்­சாத்­துக்­கள்) ஐ.நாவின் சிறப்பு நிபு­ணர்­கள் இருக்­கி­றார்­கள், அவர்­கள் வந்­து­போ­யி­ருக்­கி­றார்­கள். போன­முறை இருந்த அரசு ஐ.நா. சபை­யின் பிர­தி­நி­தி­கள் வரு­வ­தற்கு விட­வில்லை. ஆனால், இந்த அரசு வந்­த­பி­றகு நிறை­யப்பேர் வந்­தி­ருக்­கி­றார்­கள்… சித்­தி­ர­வ­தை­ கள் பற்­றிப் பார்த்­தார்­கள்… காணா­மல் ஆக்­கப்­பட்­ட­வர்­கள் சம்­பந்­தமா ஆய்வு செய்­கிற ஒரு சுயா­தீ­னக்­குழு வந்­தது. இந்த நாட்­டிலை நீதி எப்­படி இருக்­கி­றது என்­பது பற்­றிப் பார்க்க வந்­தார்­கள். சிறு­பான்­மை­யி­ன­ருக்­கான உரி­மை­கள் எப்­ப­டி­யி­ருக்­கின்­றன என்று பார்ப்­ப­தற்கு வந்­தார்­கள். அதே­மா­திரி நல்­லி­ணக்­கம் சார்ந்­தும் நீதி சார்ந்­தும், இந்த நாட்­டில் நிலை­மாற்­றுக்­கால நீதி சார்ந்­தும் என்ன வேலைத்­திட்­டங்­கள் நடக்­கின்­றன என்று வந்து பார்த்­தார்­கள். மொத்­தத்­தில் ஐ.நாவால் போடப்­பட்ட சிறப்பு அதி­கா­ரி­கள் இங்கு வந்து போயி­ருக்­கி­றார்­கள். அவை தவிர, இலங்­கை­யில் பெண்­க­ளுக்­கெ­தி­ராக நடக்­கின்ற அனைத்­துக் குற்­றங்­க­ளை­யும் ஆராய்­கிற ஒரு சம­வா­யம் இருக்­கின்­றது. அதன் ‘றிவியூ’ நடந்­தது. போன வரு­டத்­துக்கு முந்­திய வரு­டம். அதற்­குப் பெண்­கள் எல்­லாம் போய் தங்­க­ளுக்கு நடந்­தவை, நடப்­ப­வை பற்­றி­யும் இரா­ணு­வத்­தால் நிகழ்த்தப்பட்ட பாலி­யல் சித்­தி­ர­வ­தை­கள் பற்­றி­யெல்­லாம் கதைத்­து­விட்டு வந்­தார்­கள். அது­போல பொரு­ளா­தார சமூக கலா­சாரம் சம்­பந்­த­மான சம­வா­யம் இருக்­கி­றது. இதில் இரா­ணு­வம் வடக்­கை­யும் கிழக்­கை­யும் ஆக்­கி­ர­மித்து வைத்­தி­ருப்­ப­தால், பெண்­க­ளின் வாழ்­வா­தா­ரம் எவ்­வ­ளவு பிரச்­சி­னை­யா­யி­ ருக்­கி­றது, இரா­ணு­வப் பாலர் பாட­சா­லை­க­ளால் எவ்­வ­ளவு பிரச்­சி­னை­கள், சிறு­வர்­கள் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­கள் என்­று­பல ஆரா­யப்­பட்­டு அவை பதி­வா­கி­யுள்­ளன.

காயா: மன்­னிக்க வேண்­டும்… கால நீடிப்பு என்று நீங்­கள் குறிப்­பி­டும் விட­யம் சாட்­சி­யங்­க­ளுக்­குச் சிதை­ வு­றுத்­த­லைத் தராதா என்­பதே எனது கேள்வி?

சரூர்: – சற்­றுப் பொறுங்­கள்… நான் கூறிய இந்த ‘றீற்ரீ பொடீஸ்’ எல்­லாம் இருக்­குத்­தானே? அது­கள் எல்­லாத்­தி­லை­யும் நாங்­கள் ஆதா­ரங்­க­ளைத்­தான் பதி­வாக்­கி­யி­ருக்­கி­றோம். சித்­தி­ர­வதை இலங்­கை­யில் பொலி­சா­ரால் நடக்­கின்­றது என்று நாங்­கள் மட்­டு­மல்ல, இலங்­கை­யில் இருக்­கிற மனித உரி­மை­கள் ஆணைக்­கு­ழுவே மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ருக்­குப் போய்ச் சொல்­லி­யி­ருக்­கி­றது. அதே மாதிரி வெளி­நாட்­டி­லுள்­ள­வர்­க­ளில் அதி­க­ அள­வா­னோர் சித்­தி­ர­வ­தைக்கு உட்­பட்­ட­வர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். தங்­க­ளுக்­குச் சித்­தி­ர­வதை நடந்­தி­ருக்­கி­றது என்று… ஆனால், சாட்­சி­யங்­கள் எடுத்­த­வர்­கள் கவ­ன­மாக இருக்­கி­றார்­கள் சாட்­சி­யங்­க­ளைக் காட்­டிக் கொடுக்­கா­மல். இப்ப நாங்­கள் ‘கோட்டு, கேசு’ என்று வந்­தால் சாட்­சி­யங்­க­ளைக் கொண்­டு­போ­கத்­தான் வேண்­டும். இந்த நாட்­டிலை சாட்­சி­யங்­க­ளை­யும், பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளை­யும் பாது­காக்க ஒரு சட்­டம் இருக்­கி­றது. அதற்­கொரு ஆதா­ர­மும் இருக்­கி­றது. எங்­க­ளில் எவருக்­கும் தெரி­யாது. அவர்­கள் என்ன செய்­கி­றார்­கள் என்று. அவர்­க­ளி­டம் எவரும் போவ­தும் இல்லை. சும்மா கண்­து­டைப்­புக்கு ஒன்­றாக அது­வும் இருக்­கி­றது. இப்­போது சாட்­சி­யங்­கள் உள்­நாட்­டில் எப்­ப­டிப் பாது­காக்­கப்­ப­டும் என்­பதை எங்­க­ளால் சொல்ல முடி­யாது. அதற்கு ஓர் உத்­த­ர­வா­த­மும் இல்லை. ஆனால், வெளி­நாட்­டில் இருக்­கிற நிறை­யப்­பேர் தங்­க­ளுக்கு ஏற்­பட்ட பாதிப்பை ஐக்­கி­ய­நா­டு­கள் சபை­யிலை மாத்­தி­ர­மல்ல, நான் குறிப்­பிட்­ட­து­போல இந்த நிபு­ணர்­க­ளி­ட­மும் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். குறிப்­பாக நியூ­யோர்க்­கில் இருக்­கிற செய­லா­ளர் நாய­கம் ஒரு சிறப்­புப் பிர­தி­நி­தியை நிய­மித்­துள்­ளார். அது பெண்­க­ளுக்­கெ­தி­ரான போருக்கு முந்­தைய, பிந்­தைய பாலி­யல் குற்­றங்­கள் தொடர்­பாக ஆராய்­வ­தற்கு. அவர்­க­ளி­ட­மும் எமது பெண்­கள் போய்த் தங்­கள் பிரச்­சி­னை­க­ளைச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள், தங்­க­ளுக்கு என்ன நடந்­தது என்று.பாலி­யல் ரீதி­யா­கப் பாதிக்­கப்­பட்ட பெண்­க­ளும் ஆண்­க­ளும். இவை­யெல்­லாம் பன்­னாட்டு ரீதி­யாக அறிக்­கை­யி­டப்­பட்டு இருக்­கின்­றன. எப்­போதோ ஒரு காலத்­தில் கட்­டா­யம் நீதி வரும். அது­வும் நான் சொன்­ன­து­போல் பன்­னா­டு­க­ளி­ட­மி­ருந்­து­தான் வரும். பத்து, இரு­பது வரு­டங்­கள் செல்­லும்.

காயா : சரி இந்­தத் தீர்­வைப் பெற்­றுக்­கொள்ள வேண்­டின் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளின் நகர்வு, அல்­லது போக்கு எப்­ப­டி­யி­ருக்­க­வேண்­டும்?

சரூர்: – நீதி ஒரு நாளும் போரா­டா­மல் வராது. போராட்­டம் என்­பது அவர்­க­ளு­டை­ய­து­தான். எங்­க­ளால் ஒர­ள­வுக்­குத்­தான் அழுத்­தம் கொடுக்க முடி­யும். பாதிக்­கப்­பட்­வர்­க­ளின் போராட்­டம்தான் வலு­வா­னது.

ஐ.நா. சபை­யின் கவ­னத்தை
தொடர்ந்து பேண­வேண்­டும்
காயா: அவர்­கள் எந்த மாதி­ரி­யான விட­யங்­க­ளுக்கு ஆத­ர­வ­ளிக்­க­லாம் அல்­லது எந்த மாதி­ரி­யான விட­யங்­களை வர­வேற்­க­லாம்? அரசு கொண்டு வரு­கிற எந்­தத் திட்­டங்­க­ளுக்கு அவர்­கள் சரி­யா­கக் கை உயர்த்த வேண்­டும் அல்­லது உயர்த்­தக்­கூ­டாது? பன்­னா­டு­கள் கொண்­டு­வ­ரு­கிற செயல்­க­ளுக்கு அவர்­கள் எப்­படி முகம் கொடுக்க வேண்­டும் என்று எண்­ணு­கி­றீர்­கள்?

சரூர்; – இதற்­கு­முன்பு மகிந்த ராஜ­பக்­ச­வின் ஆட்­சிக்­கா­லத்­தில் வெளி­யாலை போய் ஜெனீ­வா­வில் கதைப்­பது எல்­லாம் சரி­யான கஷ்ரமாக இருந்­தது. ஆனால் தற்­போ­தைய காலப்­ப­கு­தி­யில், அரசு மாறிய பிறகு பாதிக்­கப்­பட்ட நிறை­யப்­பேர் ஜெனீ­வா­வுக்­குப் போயி­ருக்­கி­றார்­கள். நான் சொல்­லத் தேவை­யில்லை, அவர்­கள் எல்­லா­ருக்­கும் தெரி­யும் அங்கு இலங்­கை­யைப் பற்­றிய கவ­னம் எந்­த­ள­வுக்கு இருக்­கி­றது என்று… மிக­வும் குறைந்­து­போய் உள்­ளது, இப்­போது.  அந்­தக் கவ­னத்தை நாங்­கள் எப்­ப­டி­யும் பெற்­றுக்­கொள்­ள­வேண்­டும். ஏன் என்­றால், பெரும்­பான்மை அரசு தீர்­வைத் தரு­வ­தென்­பது என்­னைப் பொறுத்­த­ள­வில் நடக்­காத காரி­யம். அதை நாங்­கள் போரா­டித்­தான் பெற­வேண்­டும். அந்­தப் போராட்­டத்­தின் மூலம் பன்­னா­டு­க­ளின் கவ­னத்தை நாங்­கள் எப்­போ­தும் எங்­கள் பக்­கம் திருப்பி வைத்­தி­ருக்­கச் செய்­ய­வேண்­டும். எனக்­குத் தெரி­யும் நிறை­யப்­பேர் எங்­க­ளுக்கு ஜெனீவா வேண்­டாம், பாது­காப்­புச் சபைக்­குப் போகப்­போ­றம் என்று கதைக்­கி­றார்­கள். அம்­மாக்­கள் இதில் கொஞ்­சம் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும். இப்ப பாது­காப்­புச் சபைக்கு நாங்­கள் போக­வேண்­டும் என்­றால், ஜெனீ­வா­வில் ஐ.நா மனித உரி­மை­க­ளிைல இருக்­கிற இணை­யா­ள­ரால் இதை ஒன்­றும் செய்­ய­வி­ய­லாது… பார­தூ­ர­மா­ன­மான குற்­றங்­கள் நடந்­தி­ருக்­குது என்று அவர் அறிக்­கை­யிட வேண்­டும். அது இலங்­கை­யைப் பொறுத்­த­ள­விைல நடக்­கிற காரி­ ய­மாக இல்லை. இன்­னும் மியன்­மா­ரிைல நடந்­த­து­கூட பாது­காப்­புச் சபைக்­குப் போக­மு­டி­யா­மல் தானி­ருக்­கி­றது.
பாது­காப்­புச் சபை­யில் ஏழு நாடு­கள் வீட்டோ அதி­கா­ரம் கொண்டுள்ளன. மனித உரி­மை­கள் கவுன்­சில்லை இருக்­கிற ஒரு நல்ல விச­யம் என்னவென்­றால், கிட்­டத்­தட்ட நாற்­ப­துக்கு மேற்­பட்ட நாடு­கள் இருக்­கின்­றன. அந்த நாடு­க­ளைக் கொஞ்­சம் எங்­க­ளுக்கு உத­வும் வகை­ யில் வழி­ய­மைக்­க­வேண்­டும். ஏன் என்­றால் , அதில் அதிக நாடு­கள் எங்­க­ளைப்­போல பாதிக்­கப்­பட்ட நாடு­க­ளா­கத்­தான் இருக்­கின்­றன. முன்பு எப்­படி இலங்­கைக்கு எதி­ரா­கத் தீர்­மா­னம் கொண்டு வந்­தோமோ, அது மாதி­ரிச் சில தீர்­மா­னங்­க­ளைக் கொண்டு வரலாம். அதற்கு அம்­மா­மார் தொடர்ந்து போரா­ட­வேண்­டும். ஏன் என்­றால், அவர்­க­ளின் போராட்­டத்­தால் தான் நாங்­கள் பன்­னாட்டு ரீதி­யாக நீதி­யைப் பெற்­றுக் கொள்­ள­லாம்.

சிறு­பான்மை அர­சி­யல் கட்­சி­கள்
பொறுப்­பு­ணர்­வு­டன் செயற்­ப­ட­வேண்­டும்

காயா: மக்­கள் போக… தமிழ்க் கட்­சி­கள் அல்­ல­து­ சிறு­பான்­மைக் கட்­சி­க­ளி­னு­டைய பங்­க­ளிப்பு இவ்­வி­ட­யத்­தில் எப்­ப­டி­யி­ருக்க வேண்­டும் என்று கரு­து­கி­றீர்­கள்?

சரூர்: – மனித உரி­மை­சார்ந்து வேலை செய்­கிற ஒரு­வர் என்­கி­ற­ப­டி­யால், நான் ஒன்று சொல்­கி­றேன், எங்­கள் வேலையை நாங்­கள் ஒரு நாளும் கூட்­டி­யும் சொல்­லக்­கூ­டாது; குறைத்­தும் சொல்­லக்­கூ­டாது. பொய் சொல்­லக் கூ­டாது. எங்­களை நம்பி நிறை­யப்­பேர் இருக்­கி­றார்­கள். நான் என்ன காண்­கி­றேன் அர­சி­யல்வாதி­க­ளி­டம் என்று சொன்­னால், இந்த அம்­மா­மா­ரின் போராட்­டத்தை எல்­லாம் நிறைய அர­சி­யல்­வா­தி­கள் அர­சி­யல் மயப்­ப­டுத்­து­கி­றார்­கள். மற்­றது, பிழை­யான தக­வல்­களை அல்­லது பிழை­யான எதிர்­பார்ப்­புக்­களை அந்த அம்­மா­மா­ருக்­குக் கொடுக்­கி­றார்­கள். அது நல்ல விட­ய­மல்ல. என்­னைப் பொறுத்­த­ அள­வில், நான் வேலை செய்­கிற தளத்­தில் இருக்­கிற காணா­மல் ஆக்­கப்­பட்ட குடும்­பத்­தில் இருக்­கிற அக்­க­ா மார், அம்­மா­மார் எல்­லாம் மிகத் தெளி­வாக இருக்­கி­றார்­கள். அவர்­க­ளில் நிறை­யப்­பேர் ஜெனீ­வா­வுக்­கும் வந்­தி­ருக்­கி­றார்­கள். அவர்­க­ளுக்கு நிறைய விட­யங்­கள் தெரி­கின்­றன. ஆனால், சில சம­யங்­க­ளில் அர­சி­யல்­வா­தி­கள் தங்­க­ளது சில வாதங்­க­ளைப் பயன்­ப­டுத்­திப் பிழை­யான தக­வல்­களை, செய்ய முடி­யாத விட­யங்­களை அல்­லது செய்ய வேண்­டிய விச­யங்­களை மழுங்­க­டிக்­கின்­ற­தன்மை காணப்­ப­டு­கி­றது. அதில் கொஞ்­சம் கவ­ன­மாக இருக்­க­வேண்­டும். ஏன் என்­றால், இந்­தப் போராட்டத்தின் உண்­மைத் தன்­மை­யை­யும், அதன் தூய்­மைத் தன்­மை­யை­யும் கட்­டா­யம் நாங்­கள் பாது­காக்க வேண்­டும். அம்­மா­மா­ருக்கு என்ன வேணும்…? எல்­லா­ருக்­கும் உண்­மை­யும் நீதி­யும் தான். அந்த நீதி கிடைப்­ப­தற்­குப் பல மட்­டங்­க­ளு­டன் உள்­நாட்­டி­லும் போராட வேண்­டும், ஆட்­கொ­ணர்வு மனு அம்­மா­மார்­தான் தாக்­கல் செய்­தி­ருக்­கி­றார்­கள். முற்று முழு­தாக உள்­நாட்­டில் நீதி வேண்­டாம் என்­றும் அவர்­கள் சொல்­ல­வில்லை. உள்­நாட்­டில் முயற்­சிக்­கிற, அதே­நே­ரம் வெளி­நாட்­டி­லை­யும் போய் நீதி தேடக் கேட்­கி­றார்­கள். அதற்கு நாம் வழி­வகை செய்து கொடுக்க வேண்­டும். இந்த அர­சி­யல்வாதி­கள் அதற்­காக வேலை செய்­ய­வேண்­டும். ஆனால், மிகைப்­ப­டுத்­தக்­கூ­டாது. மிகைப்­ப­டுத்­து ­வது, பிழை­யான வியாக்­கி­யா­னங்­க­ளைக் கொடுக்­கி­றது பிரச்­சி­னைக்­கு­ரி­யது. அம்­மா­மார் அவ்­வ­ளவு ‘டெப்­ப­றே­சன்’. நம்­பிக்­கை­யி­ழந்து இருக்­கி­றார்­கள். தங்­கள் பிள்­ளை­க­ளுக்கு என்ன நடந்­தது என்று தீர்வு தெரி­ய­வேண்­டும் என்­கிற ஆதங்­கத்­தி­லும், நம்­பிக்­கை­யி­லும் இருக்­கும்­போது, பத­வி­யி­லி­ருப்­ப­வர்­கள் கூறு­ப­வற்றை அவர்­கள் அதி­கம் உள்­வாங்­கிக் கொள்­கி­றார்­கள். அப்­ப­டிப் பிழை­யான வழி­ந­டத்­தல் இல்­லா­மல் அம்­மா­ம­ாரின் தூய்­மை­யான போராட்­டத்­துக்கு உள்­ளும், வெளி­யும் நீதி கிடைப்­ப­தற்கு எங்­க­ளால் முடிந்­த­ அள­வுக்கு உழைக்க வேண்­டும்

காயா : உங்­க­ளுக்கு முன்­னால்
இருக்­கின்ற சவால்…?

சரூர்: – பன்­னா­டு­க­ளு­டைய கவ­னத்தைத் தொடர்ந்­தும் இலங்­கை­யை­நோக்கி வைத்­தி­ருப்­பது பெரும் சவால். பூகோள அர­சி­யல், பல நாடு­க­ளில் பல பிரச்­சி­னை­கள், உள்­நாட்­டுப் பிரச்­சி­னை­கள், ஆட்சி மாற்­றம் மாத்­தி­ர­மல்ல உல­க­ளா­விய போர்­கள், பிரச்­சி­னை­க­ளை­யும் கவ­னிக்­க­வேண்­டி­யி­ருக்­கி­றது.

காயா – கடை­சிக் கேள்வி இது. காணா­ம­லாக்­கப்­பட்­ட­வர்­கள் என்று எவ­ரும் இல்­லை­யா­யின், ஏன் இத்­தனை அலு­வ­ல­கங்­க­ளும் செயற்­பா­டு­க­ளும் என்­ப­தாக அண்­மை­யில் எழுந்த கேள்வி பற்றி?

சரூர்: போராட்­டக் களத்­தில் உள்ள அம்­மா­மா­ரைப் பொறுத்­த­ அள­வில் அது நியா­ய­மான கேள்வி. ஒருத்­த­ரும் இல்லை என்று அரச தலை­வரே சொல்­லி­யி­ருக்­கி­றார் என்­றால், எதற்கு இப்­படி அலு­வ­ல­கங்­கள் என்று அவர்­கள் கேட்­க­லாம். ஆனால், இப்­படி ஓர் அலு­வ­ல­கம் தேவை. நீதிக்­கா­கப் பன்­னாட்டு ரீதி­யா­கப் போரா­டு­கிற எங்­க­ளுக்கு இவை தேவை. நாலு சுவ­ருக்­குள்ள அம்­மா­மா­ரைக்­கூப்­பிட்டு காண­ம­லாக்­கப்­பட்­ட­வர்­கள் இல்லை என்று சொல்­வது…? பார­தூரமான பிழை. நியா­ய­மற்­றது.
ஓ.எம்.பி. அலு­வ­ல­கத்­தின்ரை வேலை, வந்து காணா­ம­ லாக்­கப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது. என்­னு­டைய பிள்­ளை­யைக் காண­வில்லை என்­றால், அவனை 2015ஆம் ஆண்டு வட்­டு­வா­க­லில் பிடிச்­சது என்று சொன்­னால், அந்­தப் பிள்­ளையை எங்க புதைச்­சது, அந்­தப் பிள்­ளை­யின் உட­லம் எங்க இருக்கு? அதன் டீ.என்.ஏ ரெஸ்ற் செய்து என்ர பிள்ளை செத்­துப்­போ­யிற்று அதைச் சாக்­கட்­டி­னது யார்? இதற்கு நீதியை நான் பெற­வே­ணும். அல்­லது என்ர பிள்­ளை­யைக் கொண்டு போய்ப் பத்து வரு­சம் அடைச்சு வைச்­சி­ருக்­கி­றாங்க… ஒரு சிறை­யில… அவன் நினை­வில்­லா­மல் இருக்­கி­றான் என்று சொன்­னால், அவ­னைக் கண்­டு­பி­டிக்­கி­ற­துக்கு இந்த ஓ.எம்.பி அலு­வ­ல­கம் கட்­டா­யம் தேவை. அவர் செத்­திட்­டாரா? உயி­ரோட இருக்­கி­றாரா? என்று கண்­டு­பி­டிக்­கி­ற­துக்கு மாத்­தி­ர­மல்ல இந்த அலு­வ­ல­கம். அதைக் கண்­டு­பி­டித்த பிறகு அதற்­கு­ரிய ஆதா­ரங்­களை நீதிப் பொறி­மு­றைக்­குப் பாராப்­ப­டுத்­த­வேண்­டும். அது இலங்­கை­யின் அல்­லது பன்­னாட்டு நீதிப் பொறி­மு­றை­யாக இருக்­க­லாம். மிக முக்­கி­ய­மான விட­யம் இலங்­கை­யைப் பொறுத்­த­வ­ரை­யில் ஒரு குடை­யின்­கீழ் இது­வ­ரைக்­கும் காண­ம­லாக்­கப்­பட்­ட­வர்­க­ளின் தர­வு­கள் சரி­யான முறை­யில் பதி­வு­செய்­யப்­ப­ட­வில்லை. என்­னைக் காண­வில்லை என்று சொன்­னால், என்­னைக் கண்­டு­பி­டிப்­ப­தற்கு என்­னு­டைய சரூர் என்ற பெயர் மாத்­தி­ரம் போதாது. எனக்கு டீ.என்.ஏ ரெஸ்ற் வேணும். அது இல்­லா­மல் நான் ஓர் ஆளே இல்லை. இதை எல்­லாம் இந்த அலு­வ­ல­கத்­தைக் கொண்டு செய்ய முடி­யும். அரச தலை­வர் பொறுப்­பற்ற விதத்­தில் காணா­ம­லாக்­கப்­பட்ட ஒரு­வ­ரும் இல்லை என்று சொல்­ல­மு­டி­யாது. ஒரு நாட்­டின்ர தலை­வர் என்ன? இழந்­த­வ­ருக்­கு­ரிய தீர்வு, அல்­லது குற்­ற­வா­ளிக்­குத் தண்­டணை. அல்­லது நிவா­ர­ணம்… இழப்­பீடு… அல்­லது பொது­மன்­னிப்பு… பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எதை விரும்­பு­கி­றார்­களோ அதை… அதற்­கு­ரிய நீதி­யைப் பெற்­றுக்­கொ­டுக்­க­வேண்­டும்.

காயா: தங்­க­ளது நேரத்தை ஒதுக்கி, எனது கேள்­வி­க­ளுக்­குப் பதி­ல­ளித்­த­தற்கு நன்றி.

சரூர்: – நன்றி…!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close