நுண் நிதிக் கடன்­க­ளுக்கு சரி­யான தீர்வு வேண்­டும்!!

வாழ்க்­கையை வளம்­ப­டுத்­தும் நோக்­கத்­தோடு அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நுண் நிதிக் கடன் திட்­டங்­கள் எப்­படி வாழ்க்­கைக்கு எம­னாகி வரு­கின்­றன என்­கிற விட­யம் மீண்­டும் ஒரு தடவை வடக்­கில் விவா­தத்துக் ­கு­ரி­ய­ தாகி இருக்­கின்­றது. இந்த நுண் நிதிக் கடன்­கள் பல குடும்­பங்­க­ளின் மண நீக்­கத்துக்­கும் தற்­கொ­லை­க­ளுக்­கும் குடும்ப உறுப்­பி­னர்­கள் காணா­மற்­போ­வ­தற்­கும் கார­ண­மாக இருக்­கின்­றன என்­பது யாழ். மாவட்ட ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் விலா­வா­ரி­யா­கச் சுட்­டிக்­காட்­டப் பட்­டுள்­ளது.

யாழ். மாவட்­டத்­தின் கர­வெட்­டிப் பிர­தேச செய­லர் பிரி­வில் மட்­டும் இந்த நுண் நிதி­கள் கடன்­க­ளால் 16 குடும்­பங்­கள் மண நீக்­கத்தை நாடி­யி­ருக்­கின்­றன என்­றும் இரு குடும்­பங்­க­ளின் தாய், தந்­தை­யர் தலை­மை­றை­வா­கி­விட்­ட­மை­யால் பிள்­ளை­கள் தமது தாத்தா, பாட்­டி­யு­ட­னேயே வாழ்­கின்­றன என்­றும் உயிர் மாய்ப்­புக்­க­ளின் எண்­ணிக்­கை­யும் அதி­க­ரித்­துச் செல்­கின்­றது என்­றும் அதிர்ச்­சி­ய­ளிக்­கும் புள்­ளி­வி­வ­ரத்தை பிர­தேச செய­லர் ஒருங்­கி­ணைப்­புக் குழுக் கூட்­டத்­தில் தெரி­வித்­தி­ருக்­கி­றார். இவற்றுக்கு மேலாக இந்த நுண் நிதிக் கடன்­களை வசூ­லிப்­ப­வர்­க­ளால் கடன் பெற்ற பெண்­கள் பாலி­யல் ரீதி­யாக வஞ்­சிக்­கப்­ப­டு­கின்­றார்­கள் என்­ப­தை­யும் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார்.

சில, பல ஆயி­ரங்­கள் முதல் ஒரு சில லட்­சங்­கள் வரை­யான தொகை­யைக் கட­னா­கப் பெறு­வ­தையே நுண் நிதிக்­ கடன்­கள் எனப்­ப­டு­கின்­றது. பெரும் முத­லீ­டு­க­ளாக அன்றி, சிறு சிறு தேவை­க­ளுக்­கும் சுய­தொ­ழில் முயற்­சி­க­ளுக்­கும் உத­வும் வகை­யில் இந்த நுண் நிதி­க் கடன்­கள் இருக்­கும் என்­கிற எதிர்­பார்ப்­பி­லேயே இந்­தத் திட்­டம் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது. பங்­க­ளா­தே­ஷில் ஊர்ப் பெண்­கள் மத்­தி­யில் செயற்­ப­டுத்­தப்­பட்ட இந்­தத் திட்­டம் பெரும் வெற்­றி­க­ர­மாக அமைந்­த­தைத் தொடர்ந்து ஆசிய நாடு­கள் பல­வற்­றி­லும் அது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டது.

குறிப்­பா­கப் பெண்­கள் குடும்­ப கைத்­தொ­ழி­லில் ஈடு­ப­டு­வ­தற்­கும் குடும்­பத்­தின் மேல­திக நிதித் தேவையை பெண்­கள் தமது மேல­திக வரு­மா­னத்­தின் ஊடாக நிறை­வேற்­றிக்­கொள்­வதை இல­கு­வாக்­கு­வ­தற்­கும் ஏற்ற ஒரு திட்­ட­மா­கவே இது நோக்­கப்­பட்­டது. அந்த வகை­யி­லேயே வெற்­றி­க­ர­மான திட்­ட­மா­கச் செயற்­ப­டுத்­தப்­பட்­டும் இருக்­கின்­றது. ஆனால், வடக்­கில் அதுவே தலை­

கீ­ழாக மாறி குடும்­பங்­க­ளின் சீர­ழி­வுக்­கும் உயிர் மாய்ப்­புக்­க­ளுக்­கும் கார­ண­மாகி இருப்­பது வேத­னைக்­கு­ரி­யது. உட­ன­டி­யா­கக் கட்டுப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டி­யது.

போரால் ஏற்­பட்ட பாதிப்­புக் கார­ண­மாக இத்­த­கைய பிரச்­சி­னை­கள் ஏற்­ப­டு­கின்­றன என்று மேம்­போக்­கில் இந்­தப் பிரச்­சி­னையை உதா­சீ­னம் செய்­து­விட முடி­யாது. ஒரு வெற்­றி­க­ர­மான திட்­டம் இங்கு மட்­டும் இப்­படி சீர­ழி­வுக்­குக் கார­ண­மாக மாறி­யமை ஏன் என்­பது அலசி ஆரா­யப்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­யம். இந்­தக் கடன் பற்­றிய தெளி­வின்மை மக்­க­ளி­டம் காணப்­ப­டு­கின்­றது. இல­கு­வாக ஒரு கையெ­ழுத்தை மட்­டும் பெற்­றுக்­கொண்டு கடனை நீட்டி விடு­கின்­ற­னர்.

பின்­னர் ஏற்­றுக்­கொள்­ளப்­பட முடி­யாத வழி­மு­றை­க­ளைப் பின்­பற்­றிக் கடனை அற­விட முயற்­சிக்­கின்­ற­னர் போன்ற கார­ணங்­களை கர­வெட்­டிப் பிர­தேச செய­லர் சுட்­டிக்­காட்­டி­யி­ருக்­கின்­றார். இது­போன்ற வேறு என்ன கார­ணங்­கள் நுண் நிதிக் கடன் திட்­டத்தை இங்கு தோல்­விக்­கு­ரி­ய­தாக்­கி­யி­ருக்­கின்­றது என்­பது கண்­ட­றி­யப்­பட்டு அவை சரிப்­ப­டுத்­தப்­ப­ட­வேண்­டும்.

இதற்கு முன்­ன­ரும் ஒரு தடவை இது­போன்ற நில­மை­யில் பல­ரின் நுண் நிதிக் கடன்­கள் அர­சால் இல்­லாது செய்­யப்­பட்­டன. அத்­த­கைய ஒரு தற்­கா­லிக உதவி மட்­டுமே இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்­வா­காது என்­பது இப்­போது நிரூ­ப­ண­மா­கி­யி­ருக்­கும் நிலை­யில் நுண் நிதி­க் கடன் வாழ்க்­கையை வளம்­ப­டுத்­தும் சிறந்த திட்­ட­மாக வடக்­கில் உரு­மாற்­றப்­ப­ட­வேண்­டும். மத்­திய வங்கி, நிதி அமைச்சு என்­பன இது தொடர்­பில் கூடு­தல் அக்­கறை எடுத்து உட­ன­டி­யாக இந்­தப் பிரச்­சி­னைக்­குத் தீர்வை வழங்­க­வேண்­டும். இல்­லை­யேல் இந்த நுண் நிதிக் கடன்­களே சமூ­கச் சீர்­கு­லை­வுக்கு மூல கார­ண­மா­கி­வி­டும்.

You might also like