பட்டப்பகலில் வீடுடைத்து திருட்டு!!

பட்டப்பகலில் வீடுடைத்து பல லட்சம் பெறுமதியான பொருs;கள் திருடப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் புங்கன்குளம் வீதி பாசையூர் அந்தோனியார் ஆலயத்துக்கு அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குடும்பத்தினர் வீட்டை பூட்டிவிட்டுப் பாடசாலைக்குச் சென்ற நேரத்தில், வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, வீட்டில் இருந்த தொலைக்காட்சிப் பெட்டி. டெக், மடிக்கணணி உள்ளிட்ட பல லட்சம் பெறுமதியான இலத்திரனியல் பொருள்கள் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக வீட்டின் உரிமையாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

You might also like