பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்ட நீடிப்பு அவ­சி­ய­மற்­றது!!

அவ­சர காலச் சட்­டம் மீண்­டும் ஒரு மாத காலத்­திற்கு நீடிக்­கப்­பட்­டி ­ருக்­கி­றது. கடந்த ஏப்­ரல் 21ஆம் திகதி கத்­தோ­லிக்­கத் தேவா­ல­யங்­கள் மீதும் கொழும்பு உல்­லாச விடு­தி­கள் மீதும் நடத்­தப்­பட்ட கொடூ­ர­மான தற்­கொ­லை­யா­ளி­க­ளின் தாக்­கு­த­லைத் தொடர்ந்து நாட்­டில் அவ­ச­ர­கா­லச் சட்­டம் பிறப்­பிக்­கப்­பட்­டது. ஒரு மாத காலத்­திற்­குப் போடப்­பட்ட அந்­தச் சட்­டம் பின்­னர் மேலும் ஒரு மாதத்­திற்கு நீடிக்­கப்­பட்­டது. அதன் பின்­னர் அதனை நீடிக்­கப் போவ­தில்லை என்று அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­நாட்­டுத் தூது­வர்­கள், உயர் ஆணை­யர்­க­ளி­டம் தெரி­வித்­தி­ருந்­தார். அத­னை­யும் அவ­ச­ர­கா­லச் சட்­டம் நீடிக்­கப்­பட்­டி­ ருக்­கி­றது.

கடந்த மாதம் 8ஆம் நாள் முஸ்­லிம் அர­சி­யல் தலை­வர்­க­ளைச் சந்­தித்­த­போ­தும் அரச தலை­வர் இத­னையே கூறி­யி­ருந்­தார். இனி­மேல் அவ­ச­ர­கா­லச் சட்­டம் நீடிக்­கப்­ப­டாது என்­றார் அவர். ஆனால் இம்­மு­றை­யும் அவ­ச­ர­கா­லச் சட்­டத்தை நீடிக்­கும் அர­சி­தழ் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. தான் வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்கு மாறாக அவ­ச­ர­கா­லச் சட்­டத்­தைத் தான் ஏன் நீடிக்­கி­றார் என்­ப­தற்கு அரச தலை­வர் கார­ணம் எத­னை­யும் முன்­வைக்­க­வில்லை.

போர் நடை­பெற்ற காலப் பகுதி முழு­வ­தும் அவ­சர காலச் சட்­டம் இலங்­கை­யில் நடை­மு­றை­யில் இருந்­தது. போர் முடி­வுக்கு வந்த நிலை­யில் தொடர்ந்­தும் அவ­சர காலச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாத சூழ­லில் பயங்­க­ர­வா­தத் தடைச் சட்­டம் திருத்­தப்­பட்டு அவ­ச­ர­கா­லச் சட்ட விதி­க­ளில் முக்­கி­ய­மா­ன­வை­கள் அந்­தச் சட்­டத்­து­டன் சேர்க்­கப்­பட்­டன. எனவே தற்­போது நடை­மு­றை­யில் உள்ள பயங்­க­ர­வா­தச் தடைச் சட்­டமே வன்­முறை நட­வ­டிக்­கை­களை ஒடுக்­கு­வ­தற்­குப் போது­மா­ன­தாக இருக்­கும்­போது அவ­சர காலத் தடைச் சட்­டம் ஏன் தொடர்ந்­தும் நீடிக்­கப்­ப­டு­கின்­றது என்­ப­தற்­கான திருப்­தி­க­ர­மான பதில் அரச தலை­வ­ரி­டம் இருந்து கிடைக்­க­வில்லை.

இந்த நிலை­யில் மாதா­மா­தம் அவ­ச­ர­கா­லச் சட்­டம் நீடிக்­கப்­ப­டு­வது கண்­ட­னத்­துக்­கு­ரி­யது. உயிர்த்த ஞாயிறு தற்­கொ­லைக் குண்டு வெடிப்­புக்­க­ளுக்­குப் பின்­னர் வேறு எந்­த­வ­கை­யி­லான வன்­மு­றை­க­ளும் இடம்­பெ­ற­வில்லை. சந்­தே­கத்­திற்­கி­ட­மான வெடிப்­பொ­ருள்­கள் கைப்­பற்­றப்­ப­ட­வில்லை அல்­லது தாக்­கு­தல் இலக்­கு­கள் இருந்­த­தா­கப்­ப­கி­ரங்­கத் தக­வல்­க­ளும் ஏது­மில்லை. அப்­ப­டி­யி­ருக்க அவ­ச­ர­கா­லச் சட்ட நீடிப்­புக்கு அவ­சி­ய­மும் ஏது­மில்லை.

மிகை­யான அதி­கா­ரங்­களை ஆயு­தப் படை­யி­ன­ருக்கு வழங்­கும் இந்த அவ­ச­ர­கா­லச் சட்­டத்­தி­னால் சித்­தி­ர­வ­தை­ க­ளும் கொடு­மை­க­ளும் வகை­தொ­கை­யின்றி நடந்­தி­ருக்­கின்­றன. அந்த மனித உரிமை மீறல்­கள் தொடர்­பான கண்­ட­னங்­கள் மனித உரி­மை­க­ளுக்­கான பன்­னாட்டு நிறு­வ­னங்­க­ளால் பல தட­வை­கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்­றன. பல்­வேறு மனித உரிமை மீறல்­க­ளுக்கு இந்­தச் சட்­டம் கார­ண­மாக அமைந்­தமை வர­லாறு.

அத்­த­கை­ய­தொரு நாட்­டில் மீண்­டும் அவ­ச­ர­கா­லச் சட்­டம் நீடிக்­கப்­பட்­டி­ ருக்­கின்­றமை ஏற்­றுக்­கொள்­ளப்­ப­ட­மு­டி­யா­தது. அவ­சி­ய­மும் இல்­லா­தது. நாட்­டின் பாது­காப்பு என்­கி­ற­பெ­ய­ரால் அர­சி­யல் சுய­லா­பங்­க­ ளுக்­கா­கவே அவ­ச­ர­கா­லச் சட்­டம் நீடிக்­கப்­ப­டு­வ­தா­கவே தோன்­று­கின்­றது. எனவே உட­ன­டி­யாக அவ­ச­ர­கா­லச் சட்ட நீடிப்பு நிறுத்­தப்­பட்டு மக்­க­ளின் இயல்பு வாழ்க்­கைக்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­ப­ட­வேண்­டும்.

You might also like