பள்ளத்தில் வீழ்ந்தது வான்- 9 பேர் படுகாயம்!!

ஹற்றன் கொழும்பு பிரதான வீதியில் ஹற்றன் நோக்கிச் சென்ற வான் வீதியை விட்டு விலகி சுமார் 10 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்தில் வானில் பயணித்த 9 பேரும் படுங்காயமடைந்தனர். அவர்கள் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து இன்று அதிகாலை 5.45 மணியளவில் நடந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த நான்கு பேர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். ஐவர் தொடர்ந்தும் வட்டவளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

You might also like