பாதாளக் குழு உறுப்பினர்கள் 11பேர் கைது!!

பாதா­ளக் குழு உறுப்­பி­ன­ரான ‘ஓலு மரா’ என்று அழைக்­கப்­ப­டும் சானுக மடு­சான் உள்­பட 11 பேர் போதைப் பொரு­ள்களுடன் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர்.

வென்­னப்­புவ, சிறி­கம்­பல பகு­தி­யில் வைத்தே நேற்­று­முன்­தி­னம் மாலை இவர்­கள் மடக்­கிப்­பி­டிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

ஒலு மரா­வி­டம் போதைப்­பொ­ருள் வாங்­க­வந்த 11 பேர் உட்படவே மொத்தமாக 12 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அத்துடன், 2 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

ஓலு மரா என்பவர் கடந்த காலத்திலும் போதை பொருள் விற்பனை தொர்பில் கைது செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, கிரான்பாஸ் பகுதியில் வைத்து பாதாள உலக குழு உறுப்பினரான அந்தரவத்தே சாமர போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும், பதலங்கல மற்றும் தங்கல்ல பகுதிகளில் மாகந்துர மதூசின் மேலும் இரு உதவியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களிடமிருந்து ரி 56 ரக வகை துப்பாக்கி ஒன்று, அதற்கான தோட்டாக்கள் மற்றும் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

You might also like